Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியின் அன்பு வணக்கங்கள்...

திண்டுக்கல் அருகில் சின்ன கதிரணம்பட்டி என்ற கிராமத்துக்காரி நான். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த சிறு, குறு  விவசாயிகளின் கிராமமாக, அது இப்போது இல்லை. ஒரு பக்கம் மொச்சை, பச்சைப்பயறு, துவரை, எள்ளு எனப் பயிரிடுவார்கள்; இன்னொரு பக்கம் நெல் நாற்று நடவு நடக்கும். அறுவடைக்கு நிற்கும் நெற்கதிர்களின் வாசம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஆனால், இன்று நெல் வயல்களைக் காண்பதே அபூர்வமாகிவிட்டது. நன்செய் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடும் நிலைமை. விவசாயத்தை நாம் மறப்பது எத்தகைய ஆபத்து தெரியுமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

'இது மக்கள் ஜனநாயகம்... சட்டமன்ற ஜனநாயகம்’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் பேச, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் என்ன பேசிவிட முடியும்?

சமீபத்தில் மத்தியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட குற்றங்களின் பட்டியல்... ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் ஆண்டுதோறும் 3,000 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடப்பதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் மட்டும் 47 இளம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 1920-களிலேயே பெண்ணுரிமை, குழந்தைத் திருமணம் தடுத்தல், விதவை மறுமணம்... என இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்த தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை?

இன்றைய இளம்தலைமுறைக்கு, நமது மண்ணின் கலைகளான ஒயிலாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், கரகாட்டம் பற்றிய அடிப்படைப் புரிதல்கள்கூட இல்லை. அவற்றை மீட்டு எடுக்கவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் என்பதையாவது உணர்கிறோமா?

என்னைக் கவர்ந்த நட்புகளில் முக்கியமானது மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் இடையிலான நட்பு. வெவ்வேறு நாடுகளில் பிறந்த இவர்களின் நட்பே பாட்டாளி வர்க்கக் கோட்பாட்டை உருவாக்கியது. அதுபோல அதியமானுக்கும் ஒளவையாருக்குமான நட்பும் சிறந்த நட்புதான். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு இவர்களுக்கு இடையிலான நட்பை எந்த அளவுகோல் கொண்டும் அளந்துவிட முடியாது. மரணம் வரை ஒன்றாகவே பயணித்த நட்பு அல்லவா அது! நட்பு, நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் செய்யும் தெரியுமா?

இவை போக, எனக்குப் பிடித்த தலைவர்கள் பற்றி, பயணங்களின் அனுபவம் என என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

18-09-14 முதல் 24-09-14 வரை

+(91)-44-66802911  * என்ற எண்ணில் அழையுங்கள்.

பிரியத்துடன்,

கே.பாலபாரதி.

அடுத்த கட்டுரைக்கு