Published:Updated:

``என்னைக் கேலி செய்யலாம்; என் மகளை ஏன்.!?" - அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் ( Instagram Photo:/ @bachchan )

சில வருடங்களுக்கு முன்னால்கூட, `ஆராத்யாவின் கால்கள் குச்சிபோல இருக்கின்றன. நல்ல சாப்பாடு கொடுங்கள் உங்கள் மகளுக்கு' என்று அறிவுரை சொல்வதுபோல ஐஸ்வர்யா ராயையும் ஆராத்யாவையும் ட்ரோல் செய்திருந்தார்கள். அப்போதும் தன் வருத்தத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் அபிஷேக் பச்சன்.

``என்னைக் கேலி செய்யலாம்; என் மகளை ஏன்.!?" - அபிஷேக் பச்சன்

சில வருடங்களுக்கு முன்னால்கூட, `ஆராத்யாவின் கால்கள் குச்சிபோல இருக்கின்றன. நல்ல சாப்பாடு கொடுங்கள் உங்கள் மகளுக்கு' என்று அறிவுரை சொல்வதுபோல ஐஸ்வர்யா ராயையும் ஆராத்யாவையும் ட்ரோல் செய்திருந்தார்கள். அப்போதும் தன் வருத்தத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் அபிஷேக் பச்சன்.

Published:Updated:
அபிஷேக் பச்சன் ( Instagram Photo:/ @bachchan )

செலிபிரிட்டிகளின் குழந்தைகளை ட்ரோல் செய்கிற வக்கிர மனப்பான்மையினர், இந்த சமூக வலைதள காலத்தின் சாபம். இந்த முறை அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யாவை சில நெட்டிசன்கள் கேலி செய்ய, பொங்கி எழுந்திருக்கிறார் ஜூனியர் பச்சன்.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
Instagram Photo:/ @bachchan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில வருடங்களுக்கு முன்னால்கூட, `ஆராத்யாவின் கால்கள் குச்சிபோல இருக்கின்றன. நல்ல சாப்பாடு கொடுங்கள் உங்கள் மகளுக்கு' என்று அறிவுரை சொல்வதுபோல ஐஸ்வர்யா ராயையும் ஆராத்யாவையும் ட்ரோல் செய்திருந்தார்கள். அப்போதும் தன் வருத்தத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் அபிஷேக் பச்சன். இந்த முறை, ``என் மகளை ட்ரோல் செய்பவர்கள் என் முகத்துக்கு முன்னால் வந்து செய்யுங்கள் பார்க்கலாம்" என்று கொதித்திருக்கிறார். நடந்தது இதுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த மாதம் ஆராத்யாவின் 10-வது பிறந்த நாள் வந்தது. இதைக் குடும்பத்துடன் மாலத்தீவில் கொண்டாடினார் அபிஷேக். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, `எங்கள் இளவரசிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உன் அம்மா சொல்வதைப்போல நீ இந்த உலகை மிகச்சிறந்த இடமாக உருவாக்குவாய். கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்' என்று கேப்ஷன் இட்டிருந்தார். அம்மா ஐஸ்வர்யா ராய், ' நான் மூச்சு விட்டுக்கொண்டிருப்பதற்கு காரணமே நீ தான் என் அன்பே.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
Instagram Photo:/ @bachchan

`நீயே என் வாழ்க்கை; நீயே என் உயிர்' என்று அந்த போஸ்ட்டிலேயே உருகியிருந்தார். இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த சிலர்தான் ஆராத்யாவின் நடையையும் மேக்கப்பையும் கேலி செய்திருந்தனர். ``நான் பப்ளிக் ஃபிகர் என்பதால் என்னை கேலி செய்யலாம். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படிக் கேலி செய்பவர்கள் என் முகத்துக்கு முன்னால் வந்து பேசுங்கள் பார்க்கலாம்" என்றிருக்கிறார் ஆவேசமாக.

சமூக வலைதளத்தை, பெண்களையும், செலிப்ரிட்டி குடும்பப் பெண்களையும் ட்ரோல் செய்யும் கருவியாகப் பயன்படுத்தும் மனநோய் அதிகரித்துக்கொண்டே வருவது கொடுமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism