Published:Updated:

`சினிமா நடிகருடன் காதலா'ன்னு அப்பா ஷாக் ஆனாரு!' - நடிகர் மோகன்லால் மனைவி சுசித்ரா ஷேரிங்ஸ்

குடும்பத்தினருடன் சுசித்ரா

``வில்லனா நிறைய படங்கள்ல நடிச்ச எங்கப்பாகிட்ட, `வில்லனா நடிக்காதீங்கப்பா. எனக்குப் பிடிக்கலை'னு ஒருமுறை அவர்கிட்ட நான் ஆதங்கமா சொன்னேன். இனி நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கிறதில்லைனு உடனே முடிவெடுத்தார். இவ்ளோ பாசமானவர், கல்யாண விஷயத்துலயும் என் விருப்பத்துக்கு எதிரா செயல்படுவாரா?"

`சினிமா நடிகருடன் காதலா'ன்னு அப்பா ஷாக் ஆனாரு!' - நடிகர் மோகன்லால் மனைவி சுசித்ரா ஷேரிங்ஸ்

``வில்லனா நிறைய படங்கள்ல நடிச்ச எங்கப்பாகிட்ட, `வில்லனா நடிக்காதீங்கப்பா. எனக்குப் பிடிக்கலை'னு ஒருமுறை அவர்கிட்ட நான் ஆதங்கமா சொன்னேன். இனி நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கிறதில்லைனு உடனே முடிவெடுத்தார். இவ்ளோ பாசமானவர், கல்யாண விஷயத்துலயும் என் விருப்பத்துக்கு எதிரா செயல்படுவாரா?"

Published:Updated:
குடும்பத்தினருடன் சுசித்ரா

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லால், தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். கேரள மாநிலம் கொச்சியில் பாதி நாளும், சென்னையில் மீதி நாளுமாகப் பறந்து கொண்டிருப்பவர், மோலிவுட்டின் பெருமைமிகு அடையாளம். இவரின் பர்சனல் உலகம் எப்படியானது? இதைத் தெரிந்துகொள்ள மோகன்லாலின் மனைவி சுசித்ராவிடம் பேசினோம். இவர் வேறு யாருமில்லை, `பலே பாண்டியா', `பட்டணத்தில் பூதம்' போன்ற பல படங்களில் நடித்தும், `பில்லா', 'விதி' உள்ளிட்ட வெற்றிப்படங்கள் பலவற்றைத் தயாரித்தவருமான கே.பாலாஜியின் மகள்தான்.

மோகன்லாலுடன் சுசித்ரா
மோகன்லாலுடன் சுசித்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``என் சின்ன வயசுல, எங்கப்பா சினிமாத்துறையில பிஸியா வேலை செஞ்சுகிட்டிருந்தார். வீட்டுல சினிமா விஷயங்களை அதிகம் பேசாதவர், ஷூட்டிங் பார்க்கவும் எங்களைக் கூட்டிட்டுப்போக மாட்டார். அப்பாவுடன் இணைஞ்சு என் அண்ணன் சுரேஷ் மட்டுமே சினிமாத்துறையில வேலை செஞ்சார். 1970-கள்ல சினிமாதான் பெரிய பொழுதுபோக்கு மீடியமா இருந்துச்சு. அப்போ எங்க வீட்டுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அடிக்கடி வருவாங்க. அவங்களோடு பழகியும், நிறைய சினிமாக்களைப் பார்த்தும் இயல்பாவே எனக்கும் சினிமா ஆர்வம் அதிகரிச்சது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சின்ன வயசுலேருந்து நான் ரஜினி சாரின் பெரிய ரசிகை. அவரும் எங்கப்பாவும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அதனால, ரஜினி சாரை அவ்வப்போது நேர்ல பார்த்திருந்தாலும், அவர் நடிக்கிறதைப் பக்கத்திலேருந்து பார்க்கணும்னு ஆசைப்படுவேன். அவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்த `பில்லா' படத்தைத் தயாரிச்ச எங்கப்பா, அந்தப் படத்தோட பெரும்பாலான காட்சிகளை எங்க வீட்டுலதான் படமாக்கினார். அப்போ ஒன்பதாவது படிச்சுகிட்டிருந்தேன். ஸ்கூல் முடியுறதுக்கு முன்னாடியே பாதியிலேயே ஓடிவந்து, அந்தப் படத்தோட ஷூட்டிங்கை ஆர்வமா நான் பார்த்து ரசிச்சது வேடிக்கையான அனுபவம்" என்று கொஞ்சலாகக் கூறுபவருக்கு, சினிமா மீதான ஆர்வமே வாழ்க்கைத்துணையையும் அமைத்துக்கொடுத்திருக்கிறது.

மோகன்லாலுடன் சுசித்ரா
மோகன்லாலுடன் சுசித்ரா

``ரஜினி சாருக்கு அடுத்தபடியா, ரசிகையா என் கணவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சினிமாவுல அறிமுகமான புதுசுல, `சேடிஸ்ட்' மாதிரியான நெகட்டிவ் ரோல்கள்ல அதிகமா நடிச்சார். அதனால, அப்போ அவரை எனக்கு சுத்தமா பிடிக்காது. சென்னை, எத்திராஜ் காலேஜ்ல பி.ஏ படிச்சேன். அந்தக் காலகட்டத்துல ஹீரோவாகி, நல்ல ரோல்கள்ல என் கணவர் நடிச்சுகிட்டிருந்தார். அதனால, அவர் மேல எனக்கிருந்த எதிர்மறையான பிம்பம் நேர்மறையா மாறுனுச்சு. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மெர்லின் ஸ்டூடியோ ஓனர் முருகன் சார், எங்க குடும்ப நண்பர். அவரோட கல்யாணத்துக்குக் குடும்பமா நாங்க போனப்போ, என் கணவரும் விருந்தினரா வந்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதன்முறையா அவரை நேர்ல பார்த்த சந்தோஷத்துல, அவருடன் போட்டோ எடுத்துகிட்டேன். பிறகு, அவரை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். `உனக்கென்ன விளையாட்டா இருக்கா?'னு வேடிக்கையாவும் அதிர்ச்சியாவும் என் குடும்பத்தினர் கேட்டாங்க. அதன்பிறகு, அவரும் நானும் காதலிக்கிறதைப் புரிஞ்சுகிட்டாங்க. ரெண்டு வீட்டுலயும் அப்போ எங்க கல்யாணப் பேச்சு பரபரப்பா இருந்துச்சு. நடிகை சுகுமாரி அம்மா மற்றும் என் மாமா மூலமா என் கணவர் வீட்டுல பேசினோம். தன் பிள்ளைகள் மூணு பேர் மேலயும் எங்கப்பாவுக்கு பாசம் அதிகம். அதுக்காக, தன் விருப்பு வெறுப்புகளையும் அவர் சமரசம் பண்ணிக்குவார். அதுக்கு முக்கியமான உதாரணம் ஒண்ணு சொல்லுறேன்.

மோகன்லாலுடன் சுசித்ரா
மோகன்லாலுடன் சுசித்ரா

கிளாஸிக் காலகட்ட சினிமாவுல, எங்கப்பா வில்லனா நிறைய படங்கள்ல நடிச்சார். `இந்த மாதிரியான ரோல்கள்ல நடிக்காதீங்கப்பா. எனக்குப் பிடிக்கலை'னு ஒருமுறை அவர்கிட்ட நான் ஆதங்கமா சொன்னேன். இனி நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கிறதில்லைனு உடனே முடிவெடுத்தார். இவ்ளோ பாசமானவர், கல்யாண விஷயத்துலயும் என் விருப்பத்துக்கு எதிரா செயல்படுவாரா? சென்டிமென்ட்டா சில சிக்கல்கள் இருந்தாலும், ரொம்பவே மெனக்கெட்டு என் விருப்பத்தை நிறைவேத்தினார்" வெட்கத்தில் இடைவெளிவிடுகிறார் சுசித்ரா. இவருக்கும் மோகன்லாலுக்கும் 1988-ல் திருமணம் நடைபெற்றது.

``சினிமா, குடும்பம் மட்டும்தான் என் கணவரின் உலகம். சினிமா விஷயமா வீட்டிலிருந்து கிளம்பினார்னா, கார்ல போறப்போ, மேக்கப் போடுறப்போ, லஞ்ச் சாப்பிடுறப்போ, பிரேக் டைம்னு தினமும் 20 முறைக்கும் மேல எனக்கு போன் பண்ணிடுவார். அவரின் ஒவ்வொரு செயலையும் உடனுக்குடன் என்கிட்ட அப்டேட் பண்ணிடுவார். `உன் வீட்டுக்காரருக்கு போன் பேசுறதுக்குன்னே கவர்ன்மென்ட் ஏதாச்சும் சலுகை கொடுத்திருக்கா?'ன்னு அப்பா ஆரம்பத்துல எங்களைக் கிண்டல் பண்ணுவார். ஒருகட்டத்துல, `உனக்கேத்த சரியான பார்ட்னரைத்தான் தேர்வு செஞ்சிருக்கே'னு தன் மருமகனைப் பாராட்டுவார்.

ரஜினியுடன் கே.பாலாஜி...
ரஜினியுடன் கே.பாலாஜி...

1990-கள்ல ஒரே வருஷத்துல 30 படங்களுக்கு மேல நடிச்ச என் கணவர், அப்போல்லாம் எங்களோடு ரொம்பவே குறைவான நேரம்தான் செலவிடுவார். ஒருகட்டத்துல எங்களோட தவிப்பைப் புரிஞ்சுடுகிட்டு, தான் நடிக்கிற படங்களோட எண்ணிக்கையை ஓரளவுக்கு குறைச்சுகிட்டார். சினிமா அல்லாத வகையில, கேரளாவைச் சேர்ந்த ஆறு ஜோடிகள் எங்களுக்கு நெருங்கிய நண்பர்களா இருக்காங்க. நாங்க எல்லோரும் வருஷத்துக்கு ஒருமுறை லாங் ட்ரிப் போறது ரொம்பவே ஸ்பெஷல்.

நானும் அவரும் சென்னையில இருந்தா, சண்டே முழுநாளையும் என் குடும்பத்தினருடன் செலவிடுவோம். என் அண்ணன், அக்கா குடும்பத்தினர் எங்க வீட்டுக்கு வந்திடுவாங்க. லஞ்ச், அரட்டை, விளையாட்டுனு என்ஜாய் பண்ணுவோம்" - சுசித்ரா சிலாகித்துக் கூறும் அந்த தினம், மோகன்லாலின் கைமணத்தில் தயாராகும் டின்னருடன் முடியுமாம். இதற்காவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கணவருடன் சென்னை வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார் இவர்.

மோகன்லாலுடன் சுசித்ரா
மோகன்லாலுடன் சுசித்ரா

``தன் சினிமா வேலைகள்லயும், அதுசார்ந்த முடிவுகள் எடுக்கிறதுலயும் பிறரின் தலையீடு இருக்கிறதை என் கணவர் விரும்பமாட்டார். வீட்டிலிருக்கும்போது சினிமா விஷயங்கள் பத்தி அதிகமா பேசவோ சிந்திக்கவோ மாட்டார். ஆனாலும், அடுத்தடுத்த சினிமா வேலைகளை வரிசையா பட்டியலிட்டுச் சரியா பிளான் பண்ணிப்பார். அதுக்கான நேரத்தை அவர் எப்படித் திட்டமிடுறார்னு பலநேரங்கள்ல ஆச்சர்யப்படுவேன்" என்று கணவரின் புகழ்பாடுபவர், அறிமுக இயக்குநராக மோகன்லால் உருவாக்கிவரும் `Barroz: Guardian of D'Gama's Treasure' படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார். சினிமா ஆர்வத்தில் தந்தைக்குச் சற்றும் சளைக்காதவர் ப்ரணவ். மோகன்லால் - சுசித்ரா தம்பதியின் மூத்த மகனான ப்ரணவுக்குக் குழந்தைப் பருவத்திலேயே சினிமா ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

``பிள்ளைங்களுக்கு ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சதுக்குப் பிறகு, தங்களோட கரியரைத் தேர்வு செய்துக்கட்டும்னு அவரும் நானும் நினைச்சோம். அதனால, சின்ன வயசுலயே பசங்களை சினிமாவுல நடிக்க வைக்க நாங்க ஆசைப்படலை. ஆனாலும், ஒரு படத்துலயாச்சும் நடிக்கணும்னு ப்ரணவ் ஆசைப்பட்டான். அதனாலதான், 'ஒன்னமன்' படத்துல என் கணவரின் பால்ய பருவ கேரக்டர்ல அவனை நடிக்க வெச்சோம். அப்புறமா ஒரு படத்துல மட்டும் நடிச்ச ப்ரணவ், படிப்புல மட்டும் கவனம் செலுத்தினான். சினிமாதான் தன் எதிர்காலம்னு உறுதியா முடிவெடுத்து, இப்போ தொடர்ச்சியா நடிச்சுகிட்டிருக்கான். ஆனா, நிறைய கதை கேட்டாலும், வருஷத்துக்கு ஓரிரு படம் மட்டுமே நடிக்கிறான்.

குடும்பத்தினருடன் சுசித்ரா
குடும்பத்தினருடன் சுசித்ரா

`நீ இப்போ செலக்ட்டிவ்வா நடிக்கிற முறையை உங்கப்பாதான் கடைப்பிடிக்கணும். இப்பவும் அவர் பரபரப்பா நடிச்சு கிட்டிருக்கிறதுபோல, நீதான் ஓடியாடி வேலை செய்யணும். ஆனா, நம்ம வீட்டுல தலைகீழா நடக்குது'னு அவன்கிட்ட தமாஷா சொல்லுவேன். பசங்களுக்கு நல்லது கெட்டதைப் புரிய வெச்சிருக்கோம். அதனால, அவங்களோட விருப்பப்படி பிடிச்ச விஷயங்களை நல்லபடியா செய்யுறாங்க. அதனால, பையனோட சினிமா விஷயத்துல அவரும் நானும் பெரிசா தலையிடுற தில்லை" என்று புன்னகையுடன் முடித்தார்.

அவள் விகடனில் வெளியான சுசித்ராவின் விரிவான பேட்டியைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism