அலசல்
அரசியல்
Published:Updated:

“அம்மா இறந்ததுக்கு அப்புறம் அ.தி.மு.க மேல நம்பிக்கையே போயிடுச்சு!”

நமீதா
பிரீமியம் ஸ்டோரி
News
நமீதா

போட்டுத்தாக்கும் நமீதா

திரைப்படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ தமிழ்நாட்டுக்கு வந்ததிலிருந்தே பரபரப்பாக இருக்கிறார் நமீதா. அ.தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானவரை பேட்டிக்காகச் சந்தித்தோம். “இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பாலிட்டிக்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். இதுதான் என்னுடைய முதல் பொலிட்டிக்கல் பேட்டி. சிம்பிளான கேள்விகளா கேளுங்க” என்ற கோரிக்கையுடன் அமர்ந்தார்.

``அ.தி.மு.க-விலிருந்து திடீரென விலகி பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கி றீர்களே... என்ன காரணம்?”

“ஜெயலலிதா அம்மாதான் என் பொலிட்டிக்கல் ரோல்மாடல். நான் அ.தி.மு.க-வில் சேரும்போது எனக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்துச்சு. நான் அம்மா மாதிரிதான் டிரெயின் ஆகப்போறேன்; அவங்கள மாதிரிதான் வரப்போறேன்னு நினைச்சேன். ஆனா, மெம்பர் கார்டு கொடுத்த பிறகு அ.தி.மு.க-விலிருந்து யாரும் என்னைக் கூப்பிடவே இல்லை. எனக்கு பொலிட்டிக்கல் பேக்கிரவுண்டு கிடையாது. ஆனா, மக்களுக்கு நல்லது செய்யணும்கிற ட்ரீம், ஆம்பிஷன் எல்லாம் நிறைய இருக்குது. இப்போ நம்ம நாட்டுக்கு பிரசன்ட், ஃபியூச்சர் எல்லாமே பா.ஜ.க-தான். அதனால்தான் நான் பா.ஜ.க-வுல சேர்ந்துச்சு.”

“உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கட்சி மாறியிருக்கிறீர்களே... அது சரியா?”

``அம்மா இறந்ததுக்குப் பிறகு அ.தி.மு.க மேல எனக்கு இருந்த நம்பிக்கையே போயிடுச்சு. அம்மா இறந்ததும் அவங்களுக்கு `லாஸ்ட் குட் பை’ சொல்லப் போனேன். எனக்கு வி.ஐ.பி என்ட்ரி தரலை. பப்ளிக் கேட் வழியா அனுப்பினாங்க. ஆயிரம் பேருக்குமேல என்னைத் துரத்தினாங்க. நான் கதறி அழுதுட்டேன். அடுத்த நாலு நாள் நான் தூங்கவேயில்லை. அழுது அழுது எனக்கு ஃபீவரே வந்துடுச்சு. அதுக்கு அப்புற மும் நான் ஒரு வருஷம் வெயிட் பண்ணினேன். அப்பவும் கூப்பிடலை. அப்புறம்தான் பா.ஜ.க-வுல சேரச் சொல்லி ஆஃபர் வந்துச்சு. ஜாயின் பண்ணுச்சு.”

``நீங்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா?”

``அவங்க அதிகமா பேச மாட்டாங்க. ஜஸ்ட் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. நானும் சிரிச்சிச்சு. தட்ஸ் இட்.”

``அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். உங்களுக்கும் ஏதாவது கனவு இருக்கிறதா?”

ஜெயலலிதாவுடன் நமீதா
ஜெயலலிதாவுடன் நமீதா

``நம்ம தமிழ்நாட்டுல பெண்களுக்கு இப்போகூட ஃபிரீடம் கிடையாது. செக்ஸியா டிரஸ் போடுறது, ஜாலியா ஊர் சுத்துறதை நான் ஃபிரீடம்னு சொல்ல மாட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி அவங்களுக்கு நிறைய கனவு இருக்கும். அதை நோக்கி அவங்க டிராவல் பண்ணணும். கல்யாணத்துக்கு டெளரி கொடுக்கக் கூடாது. நான் டெளரி கொடுக்கலை.

அப்புறம் விவசாயிகளுக்கு நிறைய உதவிகள் செய்யணும். இப்போகூட லேடிஸ் ஃபிங்கர் விலை அதிகமாகிடுச்சு. (யோசிக்கிறார்) நோ... நோ... ஆனியன் விலை அதிகமாகிடுச்சு. விலை அதிகமானாலும் அந்தக் காசு விவசாயிக்குப் போய்ச் சேர மாட்டேங்குது. அப்புறம் விலங்குகளைப் பாதுகாக்கணும். இப்படி நிறைய நல்லது பண்ணணும்னு கனவு இருக்குது.”

``பரவாயில்லையே... வெங்காயம் விலை ஏறியதை யெல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்களே?”

``ஆமா... தெரியும். நான் டெய்லியும் மூணு சட்னி சாப்பிடுவேன். தேங்காய் சட்னி, கடலை சட்னி, வெங்காய சட்னி. ஆனியன் ரேட் அதிகமானதை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி என் குக் சொல்லுச்சு. இப்போ ஒன் கிலோ ஆனியன் 200 ருப்பீஸ்” (சிரிக்கிறார்).

``கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே... அதில் ஏன் சேரவில்லை?”

நமீதா
நமீதா

``அந்தக் கட்சியிலிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரலையே. அதுமட்டுமல்ல, என் திங்கிங் எல்லாம் நேஷனல் லெவலில்தான் இருக்கு.”

``பா.ஜ.க-வில் ரஜினியைச் சேர்ப்பதற்கு பா.ஜ.க தலைவர்கள் பலர் ஆசைப்பட்டார்கள். இப்போதுவரை அது நிறைவேறவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?”

(சிரிக்கிறார்...) ``அவருக்குப் பிடிச்சிருந்தா சேரப்போறார். அது அவரோட இஷ்டம், அவ்வளவுதான்.”

``தமிழக பா.ஜ.க தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், நீங்கள் அந்தக் கட்சியில் சேர்ந்துள்ளீர்கள். தலைமைப் பதவிக்காக பலரும் காத்திருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் நீங்கள் இருக்கிறீர்களா, கட்சியில் உங்கள் இடம் என்ன?”

``தமிழக பா.ஜ.க-வுல நிறைய தலைவர்கள் இருக்காங்க. அவங்களுக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. நான் அவ்வளவு புரஃபஷனல் பொலிட்டீஷியன் கிடையாது. லீடருக்கான போட்டியில டாப்-டென் இடத்திலும் நான் இல்லை. அந்த லிஸ்ட்ல இடம் பிடிக்க நான் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்; கத்துக்க வேண்டியிருக்கும். ஸோ, என் இடம் என்னன்னு எனக்குத் தெரியும்!”