Published:Updated:

பூஜா ஹெக்டே மூக்குக்கு அறுவை சிகிச்சை? என்ன பிரச்னை?

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே, தனது மூக்கின் அமைப்பை மாற்றியமைக்க சர்ஜரி செய்யவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பூஜா ஹெக்டே மூக்குக்கு அறுவை சிகிச்சை? என்ன பிரச்னை?

பூஜா ஹெக்டே, தனது மூக்கின் அமைப்பை மாற்றியமைக்க சர்ஜரி செய்யவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
பூஜா ஹெக்டே

`ராதே ஷ்யாம்’, `பீஸ்ட்’ திரைப்படங்கள் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே, விரைவில் தனது மூக்குப் பகுதிக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012-ல் இயக்குநர் மிஷ்கினின் `முகமூடி’ படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கு சினிமாவுக்குள் சென்று, அங்கு பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர், சமீபத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து, மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். இந்த அரபிக் குத்து நாயகி, தற்போது தனது மூக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே, தற்போது ரன்வீர் சிங் – ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கும் படத்திலும்; இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜியின் இந்தி படமொன்றிலும், மற்றொரு இந்திப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே மகேஷ் பாபு – எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த படத்திலும் பூஜா நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் F3 என்ற தெலுங்கு படத்தில் பாடலொன்று இடம் பெற்றிருந்து. அதற்கு முன்பு பூஜா, ராம்சரணின் `ஆச்சார்யா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தான் காஸ்மெடிக் சர்ஜரிக்காக, நடிகை பூஜா ஹெக்டே வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. பூஜா, தனது மூக்கின் அமைப்பை மாற்றியமைக்க காஸ்மெட்டிக் சர்ஜரி செய்யவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் பூஜா ஹெக்டே தரப்பில் இன்னும் வரவில்லை.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

இதற்கு முன் நடிகைகள் ஸ்ருதிஹாசன், அதுல்யா போன்றோரும் இதுபோல் சர்ஜரி செய்து தங்களின் மூக்கை மாற்றி அமைத்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இருப்பினும் அவர்களும் இதுபற்றி வெளிப்படையாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- இன்பென்ட் ஷீலா