என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

காஷ்மீர் டு காஞ்சிபுரம் காஜல், ஃபுல்லி லோக்கல் ரேயான்! - செலிபிரிட்டி வெடிங் டிசைனர் அம்பிகா குப்தா

மிதுன், ரேயானுடன் அம்பிகா குப்தா...
பிரீமியம் ஸ்டோரி
News
மிதுன், ரேயானுடன் அம்பிகா குப்தா...

#Lifestyle

பிரபலங்களின் திருமணங்களில் அழைப் பிதழ் தொடங்கி அரங்குவரை அனைத்தும் எப்போதும் கவனம் ஈர்க்கும். சமீபத்திய உதாரணம் நடிகை காஜல் அகர்வாலின் திருமணம். தொழிலதிபர் கௌதம் கிட்சிலுவுடன் நடந்த அந்தத் திருமணத்துக்கு முன்பான பூஜை முதல் மெஹந்தி ஃபங்ஷன், திருமணநாள்வரை வித்தியாசமான தீம்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட நிகழ்வின் பின்னணியில் இருப்பவர் அம்பிகா குப்தா. சென்னையின் முன்னணி வெடிங் டிசைனர்.

‘`காஜல்-கௌதம் கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க குடும்ப வழக்கப்படி ராதா கிருஷ்ணா பூஜை நடந்தது. இதுக்காக அவங்க வீட்டை பிருந்தாவனம் கான்செப்ட்ல மயிலிறகுகளாலும் புல்லாங்குழல்களாலும் அலங்கரிச்சிருந்தோம்.

காஷ்மீர் டு காஞ்சிபுரம் காஜல், ஃபுல்லி லோக்கல் ரேயான்! - செலிபிரிட்டி வெடிங் டிசைனர்  அம்பிகா குப்தா

மெஹந்தி ஃபங்ஷன்ல வைக்கப்பட்டிருந்த பெட்டிகள், மரம் ஏறுறவங்க தங்களோட கருவிகளைப் போட்டு வைக்கப் பயன் படுத்தறது. மெள்ள மெள்ள மறைஞ்சிட்டு வரும் அவங்களை நினைவுபடுத்துற விதமாகத் தமிழ்நாட்டுல காஞ்சிபுரம் மாவட்டம் பரமன்கேணி என்ற இடத்துலேருந்து பெட்டிகள் செய்து வாங்கிட்டு வந்து பயன்படுத்தினோம்.

கல்யாணத்துல காஷ்மீரின் `தால்' ஏரியோட பிரதிபலிப்பைக் கொண்டுவந்தோம். வாசனை யான மிதக்கும் மலர் சந்தைகளால ரெண்டு பக்கங்களும் சூழப்பட்ட தால் ஏரிக்கே நேர்ல போன உணர்வை கல்யாணத்துக்கு வந்தவங்க உணர்ந்தாங்க’’ - காஜல் கல்யாண ஹைலைட்ஸ் சொல்லும் அம்பிகாவின் பூர்வீகம் டெல்லி.

‘`எனக்கு 11 வயசிருக்கும் போது அப்பா கேன்சர்ல தவறிட்டார். சென்னை, எஸ்.ஆர்.எம் யுனிவர்சிட்டியில பி.டெக் பயோடெக்னாலஜி படிச்சேன். ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிட்டு ரெண்டு வருஷம் அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணினேன். இப்ப நான் சென்னைவாசி. இவென்ட் மேனேஜ்மென்ட் வேலைகள் பண்ண ஆரம்பிச்சேன். புதுப்புது மனிதர்களைச் சந்திக்கிறது, புதுசு புதுசா ஐடியாக்கள் யோசிக்கிறதுனு அந்த வேலை செம ஃபன்னா இருந்தது. குடும்ப நபர் பிறந்தநாளுக்கு பிளான் பண்ணினது வாய்வழி விளம்பரமா மாறி, சோஷியல் மீடியா மூலம் பிசினஸ் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. வெடிங் பிளானிங், இந்து லிட் ஃபெஸ்ட்டுனு அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ந்தேன்’’

- அறிமுகம் சொல்பவர், வெடிங் டிசைனருக்கான விளக்கமும் தருகிறார்.

‘`ஒரு கல்யாணத்தை அழகாக்கும் எல்லா விஷயங்களுக்கும் வெடிங் டிசைனர்தான் பொறுப்பு. ஒரு வீட்டை முழுமையா அழகாக்குறதுல ஆர்கிடெக்ட், இன்டீரியர் டிசைனர் எவ்வளவு முக்கியமோ, அப்படி கல்யாணத்தை அழகாக்கறவங்கதான் வெடிங் டிசைனர்ஸ்.

மிதுன், ரேயானுடன் அம்பிகா குப்தா...
மிதுன், ரேயானுடன் அம்பிகா குப்தா...

2016-ம் வருஷம் என் வாழ்க்கையில திருப்புமுனையா அமைஞ்சது. ஓகே ஜுவல்லர்ஸ் குடும்பத்து கல்யாணத்தை டிசைன் பண்ணினேன். இண்டோவெஸ்டர்ன் ஸ்டைல்ல பண்ணினேன். அப்புறம்தான் மீடியா வெளிச்சம் என்மேல விழத் தொடங்குச்சு.

ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான்தான் என் முதல் செலிபிரிட்டி கிளையன்ட். ரேயான் சென்னையைச் சேர்ந்தவங்க, அவங்க கணவரும் கிரிக்கெட்டருமான மிதுன் பெங்களூரைச் சேர்ந்தவர். அதைப் பிரதிபலிக்கிற மாதிரி `ஃபுல்லி லோக்கல்’னு ஒரு தீம்ல சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, டாஸ்மாக்னு ஃபன்னான விஷயங்களைக் கொண்டு வந்தோம். அடுத்து சாபு சிரில் மகள் கல்யாணம், இப்போ லேட்டஸ்ட்டா நடிகை காஜல் அகர்வால் கல்யாணம்'' என்று கண்கள் விரியச் சொல்கிறார்.

காஜல் அகர்வாலுடன்...
காஜல் அகர்வாலுடன்...

‘`ஒருகாலத்துல அத்தைகளும் மாமாக்களும் நடத்திட்டிருந்த கல்யாணங்கள் இன்னிக்கு ரொம்பவே மாறியிருக்கு. வெடிங் புரொடக்‌ஷன், வெடிங் டிசைனிங், வெடிங் பிளானிங், சவுண்டு அண்டு லைட் டெக்னீஷியன், ஃப்ளோரல் ஆர்ட்டிஸ்ட்... இப்படி ஒவ்வொண்ணும் எப்படி வேணும்னு மணமக்கள் தெளிவா இருக்காங்க.

90-கள்ல நடந்த கல்யாணங்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸை கொடுத் திருக்கும். சாப்பாடுலேருந்து, பூ அலங்காரம், லைட்டிங்னு சகல ஏற்பாடுகளும் சரியா நடக்குதானு ஃபாலோ பண்றதே பெரிய ஸ்ட்ரெஸ்.வெடிங் டிசைனர்ஸ் வந்த பிறகு, எல்லா வேலைகளையும் நாங்க பார்த்துக்கிறோம். மணமக்களோட குடும்பத்தார் டென்ஷன் இல்லாம கல்யாணத்தை ரசிக்கலாம்’’

- பாசிட்டிவ் மாற்றங்கள் பகிர்கிறார்.

‘`பெண்கள் இயல்பிலேயே மல்டி டாஸ்க்கர்ஸ். க்ரியேட்டிவானவங் களும்கூட. இந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறவங்க தாராளமா வரலாம். ஆனா, இது ஈஸியான வேலையில்லை. கடுமையா உழைக் கணும். ஆர்வமிருக்குங்கிறதால எடுத்ததுமே தனியா பிசினஸ் ஆரம்பிக்கிறதைவிட, ஏற்கெனவே இந்தத் துறையில இருக்கிறவங்ககிட்ட சேர்ந்து வேலை நுணுக்கங்களையும் அனுபவங்களையும் கத்துக்கிட்டு ஆரம்பிக்கலாம்’’

- ஆர்வமுள்ள பெண்களுக்கு அவசிய அட்வைஸ் தருகிறார்.

சூழலுக்கு உகந்த திருமணங்களில் அதிக கவனம் செலுத்தும் அம்பிகா, பூக்கள் முதல் உணவு வரை எதுவும் வீணாகாதபடி, அவற்றைப் பயனுள்ளவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் ஐடியாக்களையும் நடைமுறைப்படுத்துகிறார்.