லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

‘பிரதர்ஸ் இல்ல... ஃபிரெண்ட்ஸ்’ - ஆனந்தம் விளையாடும் ‘ட்வின்ஸ்’ வீடு!

அருண் - அரவிந்த் குடும்பத்தாருடன்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண் - அரவிந்த் குடும்பத்தாருடன்

எங்களோட மொத்த சந்தோஷமும் இந்த வீடுதான். நாங்க எல்லாரும் ஒண்ணா இருந்தா எப்படிப்பட்ட பிரச்னையையும் ஈஸியா சமாளிச்சுருவோம்.

சமூக வலைதளங்களில் பிரபலமான இரட்டையர்கள் அருண் மற்றும் அரவிந்த். இவர்கள் பதிவிடும் குடும்பம் சார்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். காஸ்டிங் டைரக்டர்களாக இயங்கும் அருண் - அரவிந்த் குடும்பத்தாருடன் கலகல பேட்டி.

“எங்களோட மொத்த சந்தோஷமும் இந்த வீடுதான். நாங்க எல்லாரும் ஒண்ணா இருந்தா எப்படிப்பட்ட பிரச்னையையும் ஈஸியா சமாளிச்சுருவோம். வீடியோவுல நீங்க பார்க்குற மாதிரி தான் நிஜத்துலயும் நாங்க அட்ராசிட்டி பார்ட்டிஸ்” - கண்கள் படபடக்க பேசுகிறார் அருண்.

‘பிரதர்ஸ் இல்ல... ஃபிரெண்ட்ஸ்’ - ஆனந்தம் விளையாடும் ‘ட்வின்ஸ்’ வீடு!

‘`சொந்த ஊரு தஞ்சாவூர். இன்ஜினீயரிங் படிக்கிறதுக்காக சென்னை வந்தோம். படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரும் ஒரே நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தோம். கூடுதல் வரு மானத்துக்கு பார்ட் டைம் வேலை ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தோம். அப்போதான் ரியாலிட்டி ஷோக் களுக்கு கோ - ஆர்டினேட்டர்கள் தேவை இருக்குறது தெரிய வந்துச்சு. அதாவது ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான பார்வை யாளர்களைக் கூட்டிட்டு வர்ற வேலை. ரெண்டு பேரும் சேர்ந்து அதைப் பண்ண ஆரம்பிச்சோம். நிகழ்ச்சிகளுக்கு காசு கொடுத்து பார்வையாளர்களைக் கூட்டிட்டு வராம, ஒரு நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான ஆடியன்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு பிளான் பண்ணி, அப்படியான ஆடியன்ஸை கூட்டிட்டு வர ஆரம்பிச் சோம். ஆரம்பத்துல `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கு கோ - ஆர்டினேட்டர்களாக இருந்த நாங்க இன்னிக்கு 80-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சி களுக்கு கோ - ஆர்டினேட்டர்களா இருக்கோம். சீரியல், சினிமா, ரியாலிட்டி ஷோக்களுக்கு தேவையான பங்கேற்பாளர்களையும், நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்யுற காஸ்டிங் டைரக்டர்களாகவும் இருக்கோம்” - ஷார்ட் பயோவுடன் அருண் முடிக்க, அரவிந்த் தொடர்கிறார்.

‘பிரதர்ஸ் இல்ல... ஃபிரெண்ட்ஸ்’ - ஆனந்தம் விளையாடும் ‘ட்வின்ஸ்’ வீடு!

“பிசியா போயிட்டு இருந்த லைஃப்ல லவ்ங்கிற மேஜிக்கும் நடந்துச்சு. நாங்க ட்வின்ஸுங்குறதுனால, எங்களை மாதிரி ட்வின்ஸ்தான் மனைவியா வரணும்னு நினைச்சோம். அப்போதான் மீடியாவில் இன்டர்ன்ஷிப் பண்ணிட்டு இருந்த பிரியாவும், அவங்க ஃபிரெண்ட் வைஷாலியும் அறிமுகம் ஆனாங்க. பிரியாகூட பழகும்போது, அவங்களை கல்யாணம் பண்ணலாம்னு தோணுச்சு. என் காதலை பிரியாவும் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, அருணுக்கு தான் பதற்றம்.... உருவ ஒற்றுமையைவிட, மன ஒற்றுமைதான் முக்கியம்னு அருணுக்கு நான் புரிய வெச்சேன். அந்த நேரத்துல வைஷாலியும் அவனும் லவ் பண்ண ஆரம்பிச் சாங்க. பெரியவங்க எல்லாரும் பேசி எங்க திருமணம் முடிஞ்சுது” என்று அரவிந்த் நிறுத்த, பிரியா தொடர்கிறார்.

“நானும் வைஷாலியும் சின்ன வயசுல இருந்தே ஃபிரெண்ட்ஸ். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கு மருமகள்களா வந்தாலும் இப்பவும் ஃபிரெண்ட்ஸ்தான். லைஃப் ஜாலியா போகுது” என்ற பிரியாவை இடைமறித்துத் தொடர்கிறார் வைஷாலி.

“நான் ஹோமியோபதி டாக்டர். கல்யாணத்தப்போ இளங்கலை தான் முடிச்சிருந்தேன். குழந்தை பிறந்த பிறகு, இப்போ பிஜி படிச்சுட்டு இருக்கேன். எங்களோட பசங்க நிலன், நவிலன். ரெண்டு பேருக்கும் நாங்க நாலு பேரும் அம்மா - அப்பா. ‘உன் பையன நீ பாரு, என் பையன நான் பாத்துக்கிறேன்’ங்கிற பாகுபாடே எங்களுக்குள்ள கிடையாது. இந்தக் குடும்பம் இப்படி ஜாலியா இருக்க முக்கியமான காரணம் எங்க மாமியார். எல்லாரையும் சரிசமமா நடத்து வாங்க. சிம்பிளா சொல்லணும்னா ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து, ஒண்ணா ஒரே வீட்ல இருந்தா எப்படி இருக்குமோ, அப்படிதான் எங்க வீடும் இருக்கும்'' என்கிறார்.

இது ஆனந்தம் விளையாடும் வீடு!