நான் இதுவரை அதிக முறை பார்த்த படம் ‘பாகுபலி 2’. திரையரங்கில் மட்டுமே எட்டு முறை பார்த்தேன். அந்தப் படத்தின் கதையிலிருந்து காஸ்ட்யூம் வரை எல்லாமே எனக்கு ரொம்பவே பிடிக்கும். நடிப்பும் இசையும் தயாரிப்பும் என்னை இன்னோர் உலகத்துக்கே கொண்டு போயிடுதுன்னுகூட சொல்லலாம்.

இப்பவும் யூடியூப் பக்கம் போகும்போது, ‘பாகுபலி 2' படம் சம்பந்தமான வீடியோக்கள் ஏதாவது கண்ல மாட்டுச்சுன்னா, பார்த்துட்டுதான் வெளியே வருவேன்!

எனக்கு டிரஸ் ரொம்ப பிடிக்கும். நான் சென்னைக்கு வந்தபிறகு, ஊர்ல இருந்து என்னைப் பார்க்க வரும்போதெல்லாம்,அப்பா என்னை அழைத்துக்கொண்டு போய் நிறைய டிரஸ் வாங்கிக் கொடுப்பார். அப்பா, இப்போ இல்லை...

கடைசியா என்னை பார்க்க வந்தபோது, எங்கப்பா வாங்கி தந்த இந்தப் புடவைதான் எனக்கு மறக்கவே முடியாத பரிசு... பொக்கிஷமும்கூட!

சிறுவயதிலிருந்தே எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினமும் யோகாவுக் கென்று 20 நிமிடங்கள் ஒதுக்கிவிடுவேன்.

இக்கட்டான சூழ்நிலை களில் தெளிவான முடிவெடுக் கின்ற ஆற்றல், யோகா செய்வதால்தான் எனக்கு கை கூடுகிறது. இதுதவிர்த்து, தினமும் புத்தகங்கள் படிப்பதும் என் பழக்கம்.

அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளரும் பேராசிரியருமாக இருப்பதால் வாசிப்பும் எழுத்தும் தான் என்னுடைய முக்கியமான பணியாக இருக்கிறது. அதனால் எழுதுகிற நேரம்போக ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து மணி நேரம் புத்தகங்கள் வாசிப்பேன். நெடுங்காலமாகவே எனக்கான பொழுதுபோக்கு வாசிப்பு, வாசிப்பு, வாசிப்புதான்!