கட்டுரைகள்
Published:Updated:

ரேங்க் கார்டு!

ரேங்க் கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
ரேங்க் கார்டு!

என் மார்க்கை வெளியே சொன்னா அசிங்கமா இருக்குமே, பரவாயில்லை சொல்றேன்.

ஆல்பாஸ் கொண்டாட்டங்கள் ஒருபுறம், அரியர் குழப்பங்கள் மறுபுறம். நம் பிரபலங்களின் ப்ளஸ் டூ மார்க், எக்ஸாம் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.

நடிகர் சாந்தனு

‘`80 சதவிகிதம் எடுத்து ப்ளஸ் டூ பாஸ் பண்ணினேன். எகனாமிக்ஸ் பேப்பர்ல மட்டும் 92 மார்க் எடுத்ததால, லயோலா காலேஜில் எகனாமிக்ஸ் கோர்ஸ் ஈசியா கிடைச்சது. நான் காலேஜ் படிச்சப்போ புக்ஸ் எதுவுமே வாங்கவில்லை. ஸ்கூல்ல படிச்ச எகனாமிக்ஸ் புக்ஸை வெச்சே காலேஜை முடிச்சு டிகிரியும் வாங்கிட்டேன். இதை வெச்சு நான் நல்லாப் படிப்பேன்னு முடிவு பண்ணிடாதீங்க. எல்லாத்தையும் மொத்தமா மனப்பாடம் பண்ணி அப்படியே பேப்பர்ல எழுதி வெச்சிடுவேன்; அவங்களும் பாஸ் போட்டு விட்டுட்டாங்க.”

நடிகை கீர்த்தி பாண்டியன்

“+2ல என்னுடைய மார்க் என்னன்னு சரியா ஞாபகமில்லை. ஆனா, 60% எடுத்தேன். எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல எலக்ட்ரானிக் மீடியா படிச்சேன். எக்ஸாம் எழுதி அரியர் வைக்கலை. எக்ஸாமுக்குப் போகாமல் இருந்ததனால நிறைய அரியர் இருந்தது. காலேஜ் படிக்கும்போது நிறைய ட்ரிப் போயிடுவேன். அந்தச் சமயத்துல செமஸ்டர் வந்துச்சுன்னா, எழுத முடியாமல்போயிடும். அப்படி நான் போகாமல் இருந்த எக்ஸாம் எல்லாத்தையும் அடுத்தமுறை எழுதி க்ளியர் பண்ணிடுவேன்.”

சாந்தனு - கீர்த்தி பாண்டியன் - பாபி சிம்ஹா
சாந்தனு - கீர்த்தி பாண்டியன் - பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா

“என் மார்க்கை வெளியே சொன்னா அசிங்கமா இருக்குமே, பரவாயில்லை சொல்றேன். +2ல என் மார்க் 785. பி.சி.ஏ படிச்சேன். 22 அரியர் வெச்சேன்; வெச்சிருக்கேன். அந்த மூணு வருஷத்துல நான் பாஸ் ஆனது ஒரே ஒரு பேப்பர்லதான். காலேஜுக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்னையாகிடுச்சு. அப்போ இருந்த அந்தத் துடிப்புல ‘நீங்க வேணா இந்த காலேஜை நம்பி இருக்கலாம். நான் இந்த பி.சி.ஏவை நம்பிப் பிறக்கலை’ன்னு வெளியே வந்துட்டேன். ‘நாளைய இயக்குநர்’ல நடிச்சு டிவில வர்றதைப் பார்த்தவுடன் என்னை சஸ்பென்ட் பண்ணுன என்னுடைய பிரின்சிபால் கார்த்திகேயன் சார் ரொம்ப பெருமைப்பட்டார். ஆனா, அவர் இப்போ இல்லை. அப்பப்போ காலேஜ்ல இருந்து ‘அரியரை க்ளியர் பண்ணுப்பா. நாங்க சப்போர்ட் பண்ணுறோம். எக்ஸாம் மட்டும் எழுதுட்டுப் போ’ன்னு சொல்வாங்க. ஆனா, டிகிரி வெச்சு நம்ம என்ன பண்ணப்போறோம்? சினிமா நல்ல வாழ்க்கை கொடுத்திடுச்சு.”

ஷ்யாம் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம்

“பத்தாம் வகுப்புல நான் 95% மார்க் எடுத்தேன், எம்பிபிஎஸ் படிக்கணும்னு அப்பவே ஆசை. நாமக்கல்லில் நிறைய மார்க்ஸுக்குப் பேர் போன ஒரு போர்டிங் ஸ்கூல்ல சேர்ந்தேன். மணிக்கு ஒருமுறை டெஸ்ட் வைப்பாங்க. கால்நடை மாதிரி நடத்துவாங்க. 15 நாளுக்கு மேல என்னால தாக்குப்பிடிக்க முடியல. பழைய ஸ்கூலுக்கே வந்துட்டேன். தேர்வுன்னு வந்தா எப்பவும் டென்ஷன் தான். இன்னும் தேர்வு எழுதிட்டேதான் இருக்கேன். ஒரு வாரம் முன்னாடிதான், மெடிசன் சூப்பர் ஸ்பெசாலிட்டி படிக்க நீட் தேர்வு எழுதினேன். இதுவரை ஒரு அரியர்கூட வச்சதில்ல. அதுவும் மெடிசின் படிப்புல முதல் வருஷம் அரியர்னா அடுத்த வருஷத்துக்கே போக முடியாது. திரும்பவும் அதே வருஷம்தான் படிக்கணும். அதனால கூடுதல் கவனத்தோடு படிச்சு அரியர் வைக்காம கிளியர் பண்ணிட்டேன்.”

நடிகை ஐஸ்வர்யா மேனன்

“நான் ஸ்டேட்போர்டு ஸ்டூடன்ட். +2ல என்னுடைய கரெக்டான மார்க் மறந்துட்டேன். 90% வாங்கினேன்னு ஞாபகமிருக்கு. பி.டெக் (Electronics and Instrumentation Engineering) படிச்சேன். M1 பேப்பர்ல அரியர் விழுந்துடுச்சு. அதுவரைக்கும் நான் பெயிலானதே இல்லை. முதல்முறை பெயிலானதனால ரொம்ப மனசு கஷ்டமாகிடுச்சு. நிறைய அழுதேன். அதை அடுத்த அட்டம்ப்ட்ல கிளியர் பண்ணிட்டேன். இனிமே அரியரே வைக்கக்கூடாதுன்னு நினைச்சுப் படிச்சேன். கடைசி செமஸ்டர்ல என் டிபார்ட்மென்ட்ல நான்தான் டாப்பர்.”

ஷ்யாம் கிருஷ்ணசாமி - ஐஸ்வர்யா மேனன்  - அன்பில் மகேஷ்
ஷ்யாம் கிருஷ்ணசாமி - ஐஸ்வர்யா மேனன் - அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ், தி.மு.க

“எக்ஸாம்னாலே எல்லாருக்கும் பீவர் வந்துடும். எனக்கும் அப்படித்தான். என்னதான் கிளாஸ் டெஸ்ட் எழுதினாலும், கடைசிப் பரீட்சைக்கு பயம் வந்துடும். அப்போல்லாம் குரூப் ஸ்டடிதான் ஒரே வழி. பரீட்சைக்கு முதல்நாள் என் நண்பர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்துடுவாங்க, எங்க அம்மா தான் எல்லாருக்கும் சமைச்சுக் கொடுப்பாங்க. விடிய விடிய படிப்போம். எக்ஸாம் போற கடைசி நிமிஷம் வரைக்கும் ரெண்டு வார்த்தை படிச்சுட்டுப் போனாதான் நிம்மதியா இருக்கும். பரீட்சை ஹால் உள்ளே போற வரைக்கும் டென்ஷன்தான். கை முதல்ல பெரிய மார்க் கொஸ்டின் பாத்து, அதுல ரெண்டு தெரிஞ்சாதான் நிம்மதியே வரும். ப்ளஸ் டூவுல 65 சதவிகிதம் மார்க். அப்புறம் பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ். அதுக்கப்புறம் எம்சிஏ. எம்சிஏ முதலாம் செமஸ்டரப்போதான் அப்பா இறந்தாங்க, அப்போ மட்டும் ஒரே ஒரு அரியர். அதையும் அடுத்த வருஷமே கிளியர் பண்ணிட்டேன்.”

இயக்குநர் கோகுல்

‘`980 மார்க் எடுத்தேன். லாயர் ஆகணும்னு ஆசை. அதனால, ஸ்கூல் முடிச்சதும் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். எப்படியோ எந்த அரியரும் வைக்காம பாஸ் பண்ணிட்டு வந்துட்டேன்.’’

இயக்குநர் பாலாஜி சக்திவேல்

‘`ப்ளஸ் டூ தேர்வுல 776 மார்க் எடுத்தேன். காலேஜ்ல பி.ஏ.இங்கிலீஷ் படிச்சேன். நமக்கு வராததை எடுத்துப் படிச்சா நிறைய அரியர்ஸ்தானே வரும். அதே மாதிரி, எக்கச்சக்கமா அரியர்ஸ் வெச்சிருந்தேன். எப்படியோ காலேஜ் முடிக்குறதுக்குள்ள அதையெல்லாம் க்ளியர் பண்ணிட்டேன்.’’

கோகுல் - பாலாஜி சக்திவேல் - கலையரசன் - அஷ்வத் மாரிமுத்து - பிரேம் ஜி
கோகுல் - பாலாஜி சக்திவேல் - கலையரசன் - அஷ்வத் மாரிமுத்து - பிரேம் ஜி

நடிகர் கலையரசன்

‘`ப்ளஸ் டூல 836 மார்க் எடுத்தேன்னு நினைக்குறேன். காலேஜ்ல பி.சி.ஏ படிச்சேன். அரியர்ஸ் எக்கச்சக்கமா வெச்சிருந்தேன். இடையில ரெண்டு செமஸ்டர் எழுதாம விட்டதனால, அஞ்சாவது செமஸ்டர் எழுதுறப்போ 23 அரியர்ஸ் இருந்துச்சு. எல்லாத்தையும் சேர்த்து வெச்சு க்ளியர் பண்ணிட்டுதான் காலேஜை விட்டு வெளியே வந்தேன்.’’

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

``நான் +2ல 1141 மார்க் எடுத்தேன். இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைப்பட்டு, அதுல ஐ.டி டிபார்ட்மென்ட்ல சேர்ந்தேன். காலேஜ் முடியும்போது ரெண்டு அரியர் இருந்துச்சு. அந்தச் சமயத்துலதான் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியிலும் கலந்துகிட்டேன். ஒரு பக்கம் ஷார்ட் பிலிம், இன்னொரு பக்கம் அரியருக்குப் படிப்புன்னு நாள்கள் ஓடுச்சு. அந்த அட்டம்ப்ட்ல ரெண்டு அரியரையும் கிளியர் பண்ணிட்டேன்.”

நடிகர் பிரேம் ஜி

‘`என்னோட ப்ளஸ் டூ மார்க் சொன்னா எல்லாரும் சிரிப்பாங்க. அதுமட்டுமல்லாம நான் ப்ளஸ் டூல பெயிலாகிட்டேன். அட்டம்ப்ட் எழுதச் சொன்னாங்க; ஆனால், எனக்கு அதுல விருப்பம் இல்லாதனால லண்டனுக்கு மியூசிக் படிக்கப் போயிட்டேன். லண்டன்ல ரெண்டு வருஷம் மியூசிக் படிச்சிட்டு இந்தியாவுக்கு வந்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே மியூசிக் மேலதான் ஆர்வம். பிடிச்சதைப் படிச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னென்னா, மியூசிக் கோர்ஸ்ல அரியர்ஸ் கிடையாது.’’

இயக்குநர் பி.எஸ்.மித்ரன்

``நான் சிபிஎஸ்இ சிலபஸ்ல படிச்சேன். 500 மதிப்பெண்களுக்கு 434 வாங்கினேன். காலேஜ் படிக்கும் போது நான் அரியர்ஸே வெச்சது கிடையாது. அந்தந்த செமஸ்டரை அப்பப்போவே கிளியர் பண்ணிடுவேன். ஆனால், ஒவ்வொரு செமஸ்டர் நடக்கும் போதும், முதல் எக்ஸாமுக்கு அரைமணி நேரம் லேட்டாகத்தான் போவேன். ஏன்னா, நான் காலேஜ் படிக்கும்போதே ஷார்ட் பிலிம் எடுக்குறேன்னு சுத்திட்டு இருந்தனால, எனக்கு அட்டனன்ஸ் இருக்காது. அதனால, ஹால் டிக்கெட் வாங்கிறது சிக்கலா இருக்கும். லேட்டா போனாலும் பாஸ் ஆகியிருக்கேன் பாருங்க.’’

‘நக்கலைட்ஸ்’ சசி

‘`893 மார்க் எடுத்துட்டு, விஸ்காம் குரூப்ல சேர்ந்தேன். ஸ்கூல்ல பப்ளிக் எக்ஸாமுக்குப் படிச்சதுதான் கடைசி. காலேஜ்ல ஒரு நாள்கூட புக்கை எடுத்துப் படிச்சதேயில்லை. ஆனால், என்ன ஆச்சர்யம்னா நான் அரியர் வெச்சதும் இல்லை. நான் ரொம்பப் பிடிச்சு எடுத்த குரூப்தான் விஸ்காம். அதனால, எனக்குத் தெரிஞ்சதை எக்ஸாமில் எழுதி வெச்சேன். எங்க காலேஜ்ல என்ன எழுதுனாலும் மார்க் போட்டுடுவாங்க; நானும் ஈசியா பாஸ் ஆகிட்டேன். ஆனால், காலேஜ்ல அரியர் வைக்கிறது ஒரு கெத்துன்னு நிறைய பேர் சொல்லிக் கேட்ருக்கேன். அதுக்காகவே அரியர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், அந்த பாக்கியம் எனக்கு அமையலை.’’

பி.எஸ்.மித்ரன் - சசி - சுதாகர்  - சித்து
பி.எஸ்.மித்ரன் - சசி - சுதாகர் - சித்து

‘பரிதாபங்கள்’ சுதாகர்

“நான் +2ல 797 மார்க் எடுத்தேன். காலேஜ்ல புரொடக்‌ஷன் இன்ஜினீயரிங் துறையை எடுத்துப் படிச்சேன். முதல் செமஸ்டர் மட்டும்தான் ஆல் கிளியர். அப்புறம் அடுத்தடுத்து சில அரியர்கள் விழ ஆரம்பிச்சது. அதையெல்லாம் கிளியர் பண்ணிடுவேன்னு வீட்ல வீரவசனம் பேசிக்கிட்டே எல்லாத்துலயும் வாஷ் அவுட் ஆகிட்டேன். கடைசியா பார்த்தா, 22 அரியர் இருந்துச்சு. அதுல 21 பேப்பரை ஒரே அட்டம்ப்ட்ல கிளியர் பண்ணிட்டேன். ஒரே ஒரு அரியர் மட்டும் பேலன்ஸ் இருந்துச்சு. அதை இன்னும் கிளியர் பண்ணலை.”

`ப்ளாக் ஷீப்’ சித்து

‘`அரசுப் பள்ளியில் படிச்சேன்; 785 மார்க். எல்லா யூடியூபர்ஸ் மாதிரி நானும் இன்ஜினீயரிங்தான் படிச்சேன். 4 வருஷம் முடிஞ்சதுக்கு அப்புறம் மொத்தம் 18 அரியர்ஸ் இருந்துச்சு. எனக்கிருந்த கெட்ட பழக்கம் என்னன்னா, நான் என்ஸாமுக்குப் போக மாட்டேன். தப்பித்தவறி எக்ஸாமுக்குப் போயிட்டால் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன். அந்த 18 அரியரையும் அடுத்த வருஷம் எழுதித்தான் கிளியர் பண்ணினேன். முதலில் 10 பேப்பர்ஸ் அடுத்து 8 பேப்பர்ஸ்ல பாஸ் பண்ணினேன்.’’

`எருமசாணி’ விஜய்

‘`960 மார்க் எடுத்து, விஸ்காம் படிச்சேன். பிடிச்ச படிப்பை எடுத்ததனால பெருசா எந்த அரியர்ஸும் வைக்கலை. ஆனா, இங்கிலீஷ்ல மட்டும் அரியர் வெச்சிருந்தேன். அதையும் க்ளியர் பண்ணிட்டேன்.’’

‘நக்கலைட்ஸ்’ அருண் குமார்

``961 மார்க் வாங்கினேன். இன்ஜினீயரிங்ல மொத்தம் ரெண்டு அரியர் வெச்சிருந்தேன். அதையும் கடைசி செமஸ்டர்ல எழுதி பாஸ் பண்ணிட்டேன்.’’

விஜய் - அருண் குமார் - வைபவ்
விஜய் - அருண் குமார் - வைபவ்

நடிகர் வைபவ்

‘`என் மார்க்கைச் சொல்ல மாட்டேன்; வேணும்னா பர்சன்டேஜ் சொல்றேன். 65% எடுத்து ப்ளஸ் டூ முடிச்சிட்டு, காலேஜ்ல பி.காம் கோர்ஸ் எடுத்தேன். எல்லாப் பசங்க மாதிரியும் எனக்கும் அரியர்ஸ் இருந்துச்சு. காலேஜ் முடிச்சிட்டு வேலை பார்த்துட்டே அந்த அரியர்ஸை க்ளியர் பண்ணிட்டேன்.’’