Published:Updated:

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

பிரபலங்களுக்குப் பிடித்தவை

பிரீமியம் ஸ்டோரி

பைவ் ஸ்டார் ஹோட்டல்களின் குளுகுளு ஏ.சி அறையில் உட்கார்ந்து விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டாலும், தெரு ஓரங்களில் கிடைக்கும் ஸ்ட்ரீட் ஃபுட்ஸின் தனிச்சுவையை ‘அடிச்சுக்க முடியாது’. சுடச்சுட கிடைக்கும் சமோசாக்களுக்கும் பானி பூரிகளுக்கும் ஏங்காத மனசு இருக்க முடியுமா என்ன... அந்த வகையில், சின்னத்திரை செலிபிரிட்டிகளுக்குப் பிடித்த ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் என்ன? கேட்டோம்!

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

‘செம்பருத்தி’ - பரதா

ன்னாரி சர்பத்... சொல்லும்போதே என் குடல்வரைக்கும் குளிர்ந்துபோகுது! விதவிதமான பாட்டில்களில், கலர்கலரான கூல்டிரிங்ஸ் எத்தனை வகை வந்தாலும் சர்பத்தோட சுவைக்கு ஈடாகாது. அதிலும் சப்ஜா விதை, எலுமிச்சைச்சாறு கலந்து தரும் சர்பத் இன்னும் ஸ்பெஷல். வீட்டில் இருக்கும்போது பழங்களை நானே ஜூஸ் போட்டு குடிப்பேன். வெளியிடங்களுக்குப் போனா, கார்பனேட்டட் கூல்டிரிங்ஸைக் குடிச்சு உடம்பைக் கெடுத்துக்குற பழக்கம் எனக்கு இல்லை.

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

தமிழ்நாட்டில், எல்லா பெட்டிக்கடைகளிலும் சர்பத் கிடைக்கும். அதனால் எப்போ தாகம் எடுத்தாலும் சர்பத் கடையைத் தேடிக் கண்டுபிடிச்சுப் போயிருவேன். கே.கே நகர்ல நான் வாடிக்கையா சர்பத் குடிக்கும் ஒரு கடை இருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தக் கடைக்கு கிளம்பிப்போய் ஜாலியா ஒரு சர்பத் குடிச்சிட்டு வருவேன்.

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

என்னோட ஸ்ட்ரீட் ஃபுட் பார்ட்னர்ஸ், என் ஃப்ரெண்ட்ஸ். அது ஒரு ‘கெக்கபுக்க’ கேங்!

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

`பாரதி கண்ணம்மா’ - ரோஷிணி ஹரிப்பிரியன்

நான் ஒரு சமோசா பைத்தியம். சமோசாவை பார்த்துட்டா போதும்... என்ன வேலை இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வெச்சுட்டு ஓடிவந்துடுவேன். ஒரு ஹோட்டல்ல போய், ஏ.சி-யில உட்கார்ந்து சாப்பிடுறதைவிட, ரோட்டுக்கடையில சாப்பிடும்போதுதான் அந்த ஃபீல் பூர்த்தியாகும். மனசு கஷ்டமா இருந்தா, அப்படியே கொஞ்ச தூரம் நடந்துபோய், சமோசா கடை ஏதாச்சும் கண்ணுலபட்டதும் காலுக்கு பிரேக் போட்டுட்டு, ரெண்டு சமோசா வாங்கிட்டு, நம்மளை சுத்தி நடக்குற விஷயங்கள், உலாவுற மனுஷங்களை எல்லாம் வேடிக்கைபார்த்துட்டே சாப்பிட்டுட்டு வந்தா ரிலாக்ஸ்டா இருக்கும். விதவிதமான உணவுகளை ஆப்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுற காலத்திலும், ரோட்டுக்கடையில நின்னு சாப்பிடுற சந்தோஷம் வேற லெவல்தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

‘ரெட்டை ரோஜா’ - ஷிவானி

பானி பூரியும் பிரியாணியும்தான் என் ஆல்டைம் ஃபேவரைட். எப்ப தோனினாலும் உடனே போய் சாப்டுட்டு வந்துருவேன். ஷூட்டிங் முடிஞ்சு வரும் லேட் நைட்களில்கூட காரை நிறுத்தி, பானி பூரி வாங்கிச் சாப்பிடுவேன். பானி பூரி விஷயத்தில் மட்டும் எப்போதும் நோ டயட் கன்ட்ரோல். எங்க ஏரியாவில் இருக்கும் பானி பூரி கடைக்கு நான் ரெகுலர் கஸ்டமர். ஒரு பிளேட் பானி பூரி, கார்ல ஒரு லாங் டிரைவ்... இதுதான் என்னுடைய ஸ்ட்ரெஸ் ரிலீவ் பண்ற விஷயங்கள். வாழ்க்கையை லிமிட் இல்லாமல் என்ஜாய் பண்ணுவோம் பாஸ்!

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!
சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

‘நிலா’ - ஸ்ரீதேவி

நான் பெங்களூரில் இருந்தப்ப, ஃப்ரெண்ட்ஸ்கூட அடிக்கடி ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் சாப்பிட வெளிய போவேன். அந்த டேஸ்ட்டுக்கு நாங்க எல்லாம் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்காததுதான் குறை. சென்னை வந்த பிறகு, சும்மா சுள்ளுன்னு இருக்கும் ஆந்திரா ஸ்டேட் ஸ்நாக்ஸ் என் ஃபேவரைட் ஆகிடுச்சு. ஷூட்டிங் இல்லாத நாள்களில், நுங்கம்பாக்கத்தில் இருக்கிற ஆந்திரா ஸ்நாக்ஸ் மற்றும் ஃபுட் ஸ்டால்களுக்குப் போய், பிடிச்சதையெல்லாம் சாப்பிட்டு வந்துருவேன். எனக்கு வித்தியாசமான உணவுகளை டேஸ்ட் பண்றது ரொம்பப் பிடிக்கும். யாராவது, ‘அங்க அது டேஸ்ட்டா இருக்கும்’னு ஒரு ஏரியாவைச் சொன்னா, கிளம்பிடுவேன். ‘இப்படி டிரெண்டியா டிரஸ் பண்ணிட்டு ரோட்டுக்கடையில இறங்கி சாப்பிடுறியே?’ன்னு சில நேரம் ஃப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க. சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம், சாப்பிடத்தானே வாழ்றோம்? அப்புறம் எதுக்காக நமக்குப் பிடிச்சதை சாப்பிடத் தயங்கணும்?

சாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்!

‘றெக்க கட்டிப் பறக்குது மனசு’ - சமீரா

னக்கு ஹைதராபாத் பானி பூரி ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் இல்லாத நாள்களில் நான் ஹைதராபாத்தில் தான் இருப்பேன் என்பதால், அங்க இருக்கும் தெருக்கடைகளில் ஃப்ரெண்ட்ஸோட போய் சாப்பிடுவேன். சென்னையில் இருக்கும்போது, அந்த பானி பூரியை மிஸ் பண்ணுவேன். அப்போதெல்லாம் என் வருங்காலக் கணவர், ‘வா, மெரினால பானி பூரி சாப்பிட்டு வரலாம்’னு என்னை ஒரு பைக் ரைடு கூட்டிட்டுப் போய் பானி பூரி வாங்கிக்கொடுப்பார். யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிடாம இருக்க ஸ்கார்ஃப் கட்டிட்டு கூட்டத்தோடு கூட்டமா போய் நின்னு சாப்பிட்டு வருவேன். ஸ்ட்ரீட் ஃபுட்ஸைப் பொறுத்தவரை நான் சுத்தமெல்லாம் பார்க்கிறது கிடையாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு