Published:Updated:

குவாரன்டைன் நாள்களிலும் வொர்க் அவுட்டுக்கு விடுமுறை விடாத பிரபலங்கள்!

குவாரன்டைன் நாள்கள்
குவாரன்டைன் நாள்கள் ( Instagram )

குவாரன்டைன் நாள்களை வொர்க் அவுட் மற்றும் தனக்குப் பிடித்த சாக்லேட் டெசர்ட்டுடன் கொண்டாடி வருகிறார் தீபிகா.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் உள்ள பல நாடுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக நோய்ப் பரவலைத் தவிர்க்கும் வகையில் இந்தியாவிலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Deepika
Deepika

இந்த குவாரன்டைன் தின அனுபங்களைப் பற்றி சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் தன் மனைவி தீபிகா படுகோனுடன் வொர்க் அவுட் படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். `அவள் என்னுடன் இருக்கும்போது எண்டார்பின் (மகிழ்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்) இரண்டு மடங்கானதுபோல உணர்கிறேன்'' என்று ரன்வீர் காதலாகிக் கசிந்துருகியிருக்கிறார்.

Chocolate desert
Chocolate desert

குவாரன்டைன் நாள்களை வொர்க் அவுட் மற்றும் தனக்குப் பிடித்த சாக்லேட் டெசர்ட்டுடன் கொண்டாடி வருகிறார் தீபிகா.

பாலிவுட் நடிகர் அனில் கபூரும் தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ``என்னுடைய ஃபிட்னெஸ் பயிற்சியாளர் மார்க் என்னுடனேயே தங்கியிருக்கும்வரை நான் வொர்க் அவுட்டிலிருந்து தப்பிக்கவே முடியாது' எனக் குறும்புச் செய்தியையும் பதிவிட்டிருக்கிறார்.

Anil Kapoor
Anil Kapoor
குவாரன்டைன் நாள்கள்... என்னவெல்லாம் வாங்க வேண்டும்? செக்லிஸ்ட் #StayInsideStaySafe

உலகையே முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா. வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் `குவாரன்டைன் 21 டேஸ் சேலஞ்ச்' சவால்களை வைரலாக்கி வருகின்றனர். எந்தவொரு விஷயத்தையும் 21 நாள்கள் தொடர்ந்து மேற்கொண்டால் அது நமக்குப் பழக்கமாகி விடுமாம். இதுவரை முயலாத வொர்க் அவுட், உணவுக்கட்டுப்பாடு, ஃபிட்னெஸ் என ஏதேனும் ஒன்றை நீங்களும் கையில் எடுக்கலாமே...

அடுத்த கட்டுரைக்கு