Published:Updated:

டிஜிட்டல் அழைப்பிதழ்

டிஜிட்டல் அழைப்பிதழ்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் அழைப்பிதழ்

அனைத்தும் நவீனமயமாகிவிட்ட காலத்தில் திருமணப் பத்திரிகை அச்சடித்து நேரில் கொண்டு கொடுப்பதைவிட, டிஜிட்டலாக வடிவமைத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதையே இளம் தலைமுறை விரும்புகிறது.

டிஜிட்டல் அழைப்பிதழ்

அனைத்தும் நவீனமயமாகிவிட்ட காலத்தில் திருமணப் பத்திரிகை அச்சடித்து நேரில் கொண்டு கொடுப்பதைவிட, டிஜிட்டலாக வடிவமைத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதையே இளம் தலைமுறை விரும்புகிறது.

Published:Updated:
டிஜிட்டல் அழைப்பிதழ்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் அழைப்பிதழ்

வர்களது ஆர்வமிகுதியின் காரணமாக டிஜிட்டல் பத்திரிகையை வடிவமைக்கத் தனி இணையதளங்கள், மொபைல் ஆப் என உருவாகத் தொடங்கிவிட்டன.

டிஜிட்டல் அழைப்பிதழ்

அச்சிடும் பத்திரிகைகளைவிட டிஜிட்டல் பத்திரிகைகளின் மீதும் டிஜிட்டல் இணையதளங்களின் மீதும் இளைய தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. இதற்குச் சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* தேவையான அத்தனை விஷயங்களும் ஒரே இடத்தில் மிகச் சரியாகக் கிடைப்பது டிஜிட்டல் பத்திரிகையின் சிறப்பம்சம் ஆகும். அச்சிடும் பத்திரிகைகளில் நமக்கான கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற சிரமமாக இருக்கும். ஆனால், டிஜிட்டல் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் தேவையான கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெறுவது மிக எளிது.

* அடிக்கடி எழும் கேள்விகளுக்குச் சரியான பதிலை டிஜிட்டல் இணைய தளத்தில் பதிவு செய்து வைத்திட முடியும். அதே கேள்வியுடன் இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் இது உதவிக்கரமாக இருக்கும். அச்சிடும் பத்திரிகைகளில் இது சாத்தியமில்லாத அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

* தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் என அனைத்து விவரங்களும் டிஜிட்டல் பத்திரிகைகளில் தெளிவாக இடம் பெற்றுவிடும். ஆதலால் திருமண நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்களும் விருந்தினர்களும் எந்த மாதிரியான ஏற்பாட்டோடு வர வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட இது உதவும்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

* எந்த மாதிரியான டிரஸ் கோட் அணிந்து வர வேண்டும் உள்ளிட்ட பிரத்யேக தகவல்களையும் நாம் டிஜிட்டல் பத்திரிகையில் தனியே இணைக்க முடியும்.

* மிக முக்கியமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் பகிர்வதற்கு டிஜிட்டல் பத்திரிகைதான் சிறந்தது. ஆதலால் ஒட்டுமொத்த இளைய தலைமுறையின் கவனமும் தற்போது டிஜிட்டல் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் மீது திரும்பியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஜிட்டல் வடிவில் பத்திரிகைகளை உருவாக்கும் போது நாம் ஒரு சில விஷயங்களை மிகவும் கவனமாகக் குறிப்பிட வேண்டும். அவற்றில் சில...

நாள்

நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எந்த நாளில் நடைபெறுகின்றன என்பது பற்றிய விவரத்தை மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டும். உங்கள் நண்பர்கள் அனைவரும் எந்த நிகழ்ச்சிக்குக் கட்டாயம் வர வேண்டும் என்பதை முடிவெடுத்து அந்த நாளை கோடிட்டு வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும். திருமண முகூர்த்தம் எத்தனை மணி அளவில் நடைபெறும் எனத் தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம். பெரிய நிகழ்ச்சியாகத் திருமணத்தையும் வரவேற்பையும் நடத்த நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், இரண்டுக்கும் தனித்தனியான திருமண இணையதளத்தையும் ஆப்பினையும் உபயோகிக்க வேண்டும்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

இடம்

திருமணம் நடைபெற உள்ள இடம், கோயில், மண்டபம் உள்ளிட்ட அமைவிடங்களை மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும். முடிந்தால் அந்த இடத்தின் கூகுள் லொகேஷனை (Google Location) இணைப்பாக இணைத்துவிட வேண்டும். இடம் முடிவு செய்யப்படாத பட்சத்தில் சேவ் த டேட் (Save the date) என்ற தலைப்போடு உங்கள் டிஜிட்டல் திருமண பத்திரிகையை சமூகவலைதளத்தில் பகிரலாம். அதன் மூலம் உங்கள் நண்பர்கள் அந்த நாளில் வேறு எந்த நிகழ்விற்கும் ஒப்பந்தம் ஆகாமல் உங்கள் திருமண நிகழ்விற்கு வந்து சிறப்பிப்பார்கள்.

நிகழ்ச்சி நிரல்

ஒவ்வொரு மதத்திலும் திருமணத்தின்போது நடக்கும் சடங்குகள் வேறுபடும். ஆதலால், உங்கள் திருமணத்தின்போது நடக்கவுள்ள நிகழ்ச்சிகளைச் சரியாக வரிசைப்படுத்தி நேரத்தைக் குறிப்பிட்டு டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்க வேண்டும். உங்கள் நண்பர்கள் அனைவரும் ஒரே மாதிரியான, ஒரே நிறத்திலான உடையை அணிந்து வர வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டால் அதைக் கண்டிப்பாக அந்த டிஜிட்டல் பத்திரிகையில் `டிரஸ் கோட்’ (Dress code) எனத் தலைப்பிட்டுக் குறிப்பிட வேண்டும்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

தொடர்பு எண்கள்

உங்கள் திருமண நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாகத் தொடர்பு கொள்வதற்காக உங்கள் குடும்பத்தார் அல்லது உள்ளூரில் இருக்கும் உங்கள் நண்பர்களின் தொடர்பு எண்களைச் சேர்த்து டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்க வேண்டும். திருமண நிகழ்ச்சியின்போது அனைத்து தேவைகளுக்கும் உங்களைத் தொடர்புகொண்டு எல்லா விஷயங்களையும் கேட்பது சிரமம் என்பதால் நிச்சயமாக உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு சில நபர்களை நீங்கள் நியமிக்க வேண்டும்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

அடிப்படை விஷயங்கள் போக டிஜிட்டல் பத்திரிகைகளை இன்னும் மெருகூட்ட ஒரு சில விஷயங்களை இணைக்கலாம். அவற்றில் சில...

உங்கள் காதல் கதை

நீங்கள் காதலித்துத் திருமணம் செய்ய உள்ளீர்கள் என்றால் நிச்சயமாக உங்கள் காதல் கதையைச் சுருக்கமாக எழுதி டிஜிட்டல் பத்திரிகையில் இணைக்கலாம். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் என்பதால் நிச்சயம் இந்தப் பகுதி உங்கள் டிஜிட்டல் பத்திரிகையை சுவாரஸ்யமாக மாற்றும். முழுக்கதையையும் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்றால் சில முக்கிய சம்பவங்களை மட்டுமாவது கவிதை நடையில் அல்லது உங்களுக்குப் பிடித்தவாறு எழுதி இணைக்கலாம்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

புகைப்படங்கள்

திருமணத்துக்கு முன்பு நீங்கள் சென்ற பிரீ வெடிங் போட்டோ ஷூட் (Pre Wedding Photo shoot) புகைப்படங்களை டிஜிட்டல் பத்திரிகையில் இணைக்கலாம். உங்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்து பத்திரிகையை இன்னும் சிறப்பானதாக மாற்றலாம்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

கேள்வி பதிலுக்கான தனிப்பகுதி

திருமணத்துக்கு வரும் உங்கள் நண்பர்களுக்கு இடம், டிரஸ் கோட் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் இருக்கக்கூடும். அவை அனைத்தையும் அவர்கள் அந்த டிஜிட்டல் பத்திரிகையிலேயே கேட்டு, பதில் தரும் வகையில் நீங்கள் வடிவமைக்க வேண்டும். அதே கேள்வியுடன் இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் இந்தப் பகுதி உதவிக்கரமாக இருக்கும். தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் போன்ற கேள்விகளுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டியிருக்கும்.

டிஜிட்டல் அழைப்பிதழ்

டிஜிட்டல் பத்திரிகைகளை உருவாக்குவதற்கும் இணையதளங்களை வடிவமைப்பதற்கும் சில பிரத்யேக வலைதளங்கள் இருக்கின்றன. அவற்றில் சில மிகச் சரியாக மிக நேர்த்தியான வடிவமைப்புடன் உங்கள் டிஜிட்டல் பத்திரிகையை வடிவமைத்துத் தரும். அவற்றில் மிக முக்கியமானவை...

Wix

டிஜிட்டல் இணையதளம் மற்றும் பத்திரிகையை வடிவமைத்துக் கொடுக்கும் இணையதளங்களில் மிக எளிமையானது விக்ஸ் (Wix). 500-க்கும் மேற்பட்ட வித்தியாசமான மாதிரிகளுடன் உங்கள் பத்திரிகையை வடிவமைக்கவல்லது. உங்கள் டிஜிட்டல் பத்திரிகையுடன் இன்னும் நிறைய விஷயங்களைச் சேர்ப்பதற்கு பல ஆப்களையும் துணையாகக் கொண்டது விக்ஸ்.

Squarespace

அதிக தரத்துடன் டிஜிட்டல் பத்திரிகையை வடிவமைப்பதற்கு Squarespace இணைய தளத்தைப் பயன்படுத்தலாம். வீடியோக்களை இணைக்க வேண்டும் என விரும்புபவர்கள் தாராளமாக Squarespace இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். பல புகைப்படங்களை இணைப்பதற்கு உரிய வசதிகளையும் கொண்டது Squarespace.

Weebly

நண்பர்களுக்கும் விருந்தினர்களுக்கும் தகவல்களைத் தருவதற்காகவே மிக அதிக ஆப்களை இணைக்கவல்லது Weebly இணையதளம். பயன்படுத்த மிக எளிதானதும் கூட! இலவசமாகப் பயன்படுத்துவதற்கும் குறைந்த விலையுடன் பயன்படுத்துவதற்கும் என நிறைய ஆப்கான்களைக் கொண்டது Weebly இணையதளம்.

Appy Couple

திருமணத்துக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களையும் இணைந்த வகையில் டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்கவல்லது Appy Couple. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி திருமணத்துக்காக ஒரு ஆப் ஒன்றைத் தொடங்கி நிர்வகிக்கவும் முடியும். அத்தனை தகவல்களையும் நாமே கொடுத்து நமக்கு ஏற்ற வகையில் நம் திருமணப் பத்திரிகையை உருவாக்க இயலும்.

Joy

டிஜிட்டல் பத்திரிகையை இலவசமாக உருவாக்குவதற்கு ஒரு சிறந்த தளம் ஜாய். மிக எளிமையாக டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்குவதற்கு Joy இணையதளத்தைப் பயன்படுத்தலாம். நண்பர்களிடமிருந்து திருமணத்தைப் பற்றி எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கும் வகையில் திருமண இணையதளத்தை Joy இணையதளத்தின் உதவியால் வடிவமைக்கலாம்.

இவற்றைத் தவிர, திருமணப் பத்திரிகையை டிஜிட்டல் முறையில் உருவாக்குவதற்கும் டிஜிட்டல் இணையதளங்களை நிர்வகிப்பதற்கும் பல வெப்சைட்டுகள் இணையத்தில் கிடைக்கின்றன. தங்களது தேவைக்கு ஏற்ப இணையதளத்தைத் தேர்ந்தெடுத்து மிகச் சிறந்த முறையில் டிஜிட்டல் பத்திரிகையை மணமக்கள் உருவாக்க இயலும். பெருகிவரும் இளைய தலைமுறையின் இந்த ஆர்வத்தைத் திருமண ஏற்பாட்டாளர்கள் தெரிந்துகொண்டு அவர்கள் வழங்கும் சேவைகளில் இதையும் செய்யும் ஒன்றாக இணைக்கலாம்.

உணவு மற்றும் இருப்பிடம்

வெளியூரிலிருந்து வரும் உங்கள் நண்பர்களுக்குச் சரியான தங்கும் இடம் அமைத்துக்கொடுக்க வேண்டியது அவசியம். எந்த இடத்தில் அந்த அமைவிடம் இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை உங்கள் திருமண இணையதளத்திலோ அல்லது டிஜிட்டல் பத்திரிகைகளையும் தெரிவிப்பது அவசியம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலம் பற்றிய விவரங்களையும் இதில் இணைக்கலாம். விழாவுக்கு வரும் நண்பர்கள் அந்த இடத்துக்கும் சென்று மகிழ்ந்து வருவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism