Published:Updated:

தீபாவளிக்கு என்ன டிரஸ்... என்ன ஸ்பெஷல்? - பிரபலங்களின் பட்டாசு பதில்கள்!

சாயா சிங்

எல்லா தீபாவளியையும்விட, இந்தத் தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா இந்த வருஷம் எனக்கு தலை தீபாவளி. போன வருஷம்லாம் சிங்கிளா ஃபிரெண்ட்ஸ்கூட கொண்டாடிகிட்டு இருந்தேன். ஆனா, இந்த வருஷம் என்னோட கணவர்கூட ஜாலியா கொண்டாடப்போறேன்.

தீபாவளிக்கு என்ன டிரஸ்... என்ன ஸ்பெஷல்? - பிரபலங்களின் பட்டாசு பதில்கள்!

எல்லா தீபாவளியையும்விட, இந்தத் தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா இந்த வருஷம் எனக்கு தலை தீபாவளி. போன வருஷம்லாம் சிங்கிளா ஃபிரெண்ட்ஸ்கூட கொண்டாடிகிட்டு இருந்தேன். ஆனா, இந்த வருஷம் என்னோட கணவர்கூட ஜாலியா கொண்டாடப்போறேன்.

Published:Updated:
சாயா சிங்

சாயா சிங்

``நான் போடுற டிரஸ் எல்லாம் பெரும்பாலும் டிசைனர்கள் டிரஸ் தான். நான் இன்னும் தீபாவளி டிரஸ் வாங்கலை. ஆனால், இந்த வருஷ தீபாவளி டிரஸ் பச்சைக் கலரா இருக்கும்ன்னு நினைக்கிறேன். எனக்கு சேலைன்னா ரொம்ப பிடிக்கும்.

சாயா சிங்
சாயா சிங்

ஆனால், சுடிதார் போட்டாதான் வசதியா இருக்கும். பொதுவா நான் டிரஸ் வாங்கும்போது, என்கிட்ட இல்லாத கலர்கள்லதான் வாங்குவேன். எனக்கு டிரஸ் சிம்பிள் ஆகவும் அதே நேரத்துல பார்க்க கிராண்டாகவும் இருந்தாதான் பிடிக்கும்.''

ரேகா குமார்

``நான் இன்னும் தீபாவளி டிரஸ் எடுக்கலை. இந்த வருஷ தீபாவளிக்கு பெரும்பாலும் சுடிதார்தான் எடுப்பேன்னு நினைக்கிறேன். போன வருஷம் தீபாவளிக்கு பேஸ்ட்டல் கலர்ஸ் டிரெண்டிங்ல இருந்தது. அதனால், லைட் கலர் டிரஸ் எடுத்திருந்தேன். எங்க வீட்டுல தீபாவளிக்கு டிரஸ்ஸவிட தீபங்கள் தான் ஸ்பெஷல்.

ரேகா குமார்
ரேகா குமார்

தீபாவளின்னாலே தீபம்தானே ஸ்பெஷல். ஒவ்வொரு வருஷ தீபாவளிக்கும் என்னோட அம்மாவுக்கும் அக்காவுக்கும் தீபங்கள் வாங்கி கிஃப்ட் பண்ணுவேன். நானும் என் வீட்டுல, அந்த வருஷ தீபாவளிக்கு எந்த மாதிரி புது விளக்கு வந்துருக்கோ, அதை வாங்கி இலையில வெச்சு அதைச் சுற்றி பூ அலங்காரம் செய்து தீபம் ஏற்றி தீபாவளியை சூப்பரா கொண்டாடுவோம்.''

Vj அகல்யா

Vj அகல்யா
Vj அகல்யா

எனக்கு அதிகமா குர்தா, லெக்கிங்ஸ், டிராக்ஸ், டி ஷர்ட்தான் வசதியா இருக்கும். இந்தத் தீபாவளிக்கும் புதுசா ஒரு டிராக்கும் டி ஷர்ட்டும் நைட் டிரஸ்ஸும் வாங்குவேன். பட்டாசுல எனக்குப் பெருசா ஆர்வம் இல்லை. எல்லாரையும் போல நானும் சின்ன வயசுல பட்டாசு வெடிச்சுட்டு இருந்தேன். இப்போ வீட்ல பெட்ஸ் வளர்த்துட்டு இருக்கேன். அவங்க பட்டாசு சத்தம் கேட்டா பயந்துப்பாங்க. அதனால நைட் சுருசுரு கம்பி கொளுத்தறதோட சரி...''

ஸ்ரீதேவி 

``தீபாவளின்னாலே பாரம்பர்யம்தான். தீபாவளிக்கு பெரும்பாலும் எனக்கு சேலை, பாப்பாவுக்கு பட்டுப் பாவாடை, அவருக்கு பட்டு வேட்டி சட்டைதான் வாங்குவோம். இந்த கலர்தான் எடுக்கணும்னு இல்லாம, மூணு பேரும் ஒரே கலர் டிரஸ்தான். இப்போ வரைக்கும் வெளிய போனாலும், விசேஷத்துக்குப் போனாலும் மூணு பேரும் இருக்குற டிரஸ்ல ஒரே கலர் அல்லது ஒரே மாதிரி இருக்குற டிரஸ்தான் போடுவோம். அப்புறம், பாப்பாவுக்கும் எனக்கும் லாங் கவுன் எடுத்துப்போம். போன வருஷம் பாப்பா குழந்தையா இருந்ததால அவளுக்கு பட்டாசு பத்தி தெரியாது. இந்த வருஷம் மேடம் கொஞ்சம் வளர்ந்துட்டாங்க.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

இப்போகூட யாராவது ராக்கெட் விட்டா அண்ணாந்து மேல வெறிக்க வெறிக்க பாக்குறாங்க. அதனால தீபாவளிக்கு அவளோட ரியாக்ஷன் என்னன்னு பார்க்க நாங்க வெயிட்டிங். நாங்க எப்போவுமே, தீபாவளி அன்னைக்கு லட்சுமி பூஜை செஞ்சுட்டு பட்டாசு வெடிக்க ஆரம்பிப்போம். எனக்கு பொதுவா சிம்பிள் டிரஸ்தான் பிடிக்கும், கிராண்ட் டிரஸ் பிடிக்காது. சிம்பிளா இருந்தாலும் வாவ்னு சொல்ற மாதிரி இருக்க டிரஸ் ரொம்ப பிடிக்கும்.''