Published:Updated:

நட்டாவுக்கு இன்னொரு பேர் இருக்கு!

நீயா நானா  கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
நீயா நானா கோபிநாத்

குறும்புக்கேள்விகள்

நட்டாவுக்கு இன்னொரு பேர் இருக்கு!

குறும்புக்கேள்விகள்

Published:Updated:
நீயா நானா  கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
நீயா நானா கோபிநாத்
“கார் டிரைவ் பண்ணிட்டிருக்கேன். ஒரு மணி நேரம் கழிச்சு நானே கூப்பிடுறேன்” என்ற ‘நீயா நானா’ கோபிநாத், சரியாக ஒரு மணி நேரம் கழித்து அழைத்தார்.

“ஓணத்தைச் சிறப்பாக் கொண்டாட முடியலயேங்கிற வருத்தத்துல இருக்கேன். தமிழ்நாட்டுல இருந்துதான் எங்களுக்குப் பூ வரும். கொரோனாவால இந்த வருஷம் வராதுன்னு சொல்லிட்டாங்க” என ஃபீலிங் ஆன இனியாவிடம் “இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க, கவலை பறந்துடும்”னு சொல்லிக் கொக்கி போட்டோம்.

“படிச்சிட்டிருக்கிற காலத்துல கேட்டிருந்தீங்கன்னா டக் டக்னு சொல்லியிருப்பேன். பரவாயில்லை, தெரிஞ்சதைச் சொல்றேன்’ என்று பதில் அளிக்கத் தயாரானார் அர்ஜுன் சம்பத்.

“நைட் முழுக்க சரியான தூக்கமில்லை. இப்போ, தூங்கலாம்னு கொஞ்சம் கண் அசந்தேன், நீங்க போன் பண்ணிட்டீங்க.. தூக்கக்கலக்கத்துல இருக்கேன்... சரி, கேள்வியைக் கேளுங்க” என்று தயாரானார் மனுஷ்யபுத்திரன்.

நீயா நானா’ கோபிநாத்
நீயா நானா’ கோபிநாத்

“பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் யார்?”

சரியான பதில் : ஜே.பி.நட்டா

‘நீயா நானா’ கோபிநாத் : “ஜே.பி.நட்டா... சரியான பதில்னு நினைக்கிறேன்.”

இனியா : “என்னது ஜெனரல் நாலெட்ஜ் கொஸ்டினா?’’ என்றவர், “தலைவர்னா எனக்குப் புரியலைங்க” என்றார். “பிரெசிடென்ட்” என்றதும், “ஜெகத் பிரகாஷ் நட்டாவா” என நம்மிடமே திருப்பிக் கேட்டார். “கேள்வி மட்டும்தான் நாங்க, பதில் நீங்கதான்” என்றதும், “ஓகே ஓகே, நெக்ஸ்ட்?” என்றார்.

அர்ஜுன் சம்பத் : “முருகன். இல்லையில்லை, தேசியத் தலைவரா, ஜே.பி.நட்டா”

மனுஷ்யபுத்திரன் : “ஜே.பி.நட்டா. தமிழ் நாட்டில் அவர் பெயர் நோட்டா.”

“தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?”

நட்டாவுக்கு இன்னொரு பேர் இருக்கு!

சரியான பதில் : சிலப்பதிகாரம், மணிமேகலை

‘நீயா நானா’ கோபிநாத் : “சின்ன வயசுல ஸ்கூல்ல படிச்சது, மணிமேகலை, சிலப்பதிகாரம்.”

இனியா : “தமிழ்க் கல்ச்சர்ல உள்ள பொண்ணு இல்லையே நான். இதுக்குப் பதில் எப்படித் தெரியும்? எனக்குத் தமிழில் திருக்குற‌ள் பத்தி மட்டும்தான் கொஞ்சம் தெரியும். ஏன்னா அதை இப்ப படிச்சிட்டிருக்கேன். 1330 ஸ்லோகன் இருக்காமே? ரெண்டு காப்பியத்துல திருக்குறள் ஒண்ணுன்னு நினைக்கிறேன். இன்னொன்னு எனக்குத் தெரியலைங்க.”

அர்ஜுன் சம்பத் : “தமிழில் ரெட்டைக் காப்பியங்கிறது சீவகசிந்தாமணியும் சிலப்பதிகாரமும்தாங்க‌.’’

மனுஷ்யபுத்திரன் : “சிலப்பதிகாரம், மணிமேகலை” (என்கிட்டேயவா?)

“covid-19 விரிவாக்கம் என்ன?”

சரியான பதில் : corona virus disease - 19

‘நீயா நானா’ கோபிநாத் : “corona virus disease - போன வருஷமே வந்ததால 19th ஆகிருச்சு.”

இனியா : “கொரோனா வைரஸ் 2019”

அர்ஜுன் சம்பத் : “கொரோனா வைரஸ் 2019”

மனுஷ்யபுத்திரன் : “கொரோனா வைரஸ் டிஸீஸ்-2019... கொரோனால இருந்து மீண்டு வந்த எனக்குத் தெரியாதா என்ன..!’’

“எஸ்.பி.பால சுப்பிர மணியம் தமிழில் முதன் முதலில் எந்த இசை யமைப்பாளர் இசையில் பாடினார்?”

நட்டாவுக்கு இன்னொரு பேர் இருக்கு!

சரியான பதில் : கே.வி.மகாதேவன்

படம் : அடிமைப்பெண், பாடல் : ஆயிரம் நிலவே வா.

நீயா நானா’ கோபிநாத் : “எம்.எஸ்.வி-யா இருக்க வாய்ப்பு இருக்கு. டி.வி இன்டர்வியூஸ்ல எஸ்.பி.பி சார் சொன்ன ஞாபகம்.”

இனியா : “எனக்கும் பாட்டுக்கும் கனெக்‌ஷன் கம்மி. வைரமுத்து சார்ங்கிறது சரியான பதிலா?” என்றவர், “இல்லை, இல்லை, இளையராஜா சார்.”

அர்ஜுன் சம்பத் : “கே.வி.மகாதேவன். ஆயிரம் நிலவே வா பாடல். அடிமைப்பெண், எம்.ஜி.ஆருடைய படம். நாங்கெல்லாம் தீவிரமான சினிமா ரசிகர்கள். இது தெரியாம இருப்போமா?”

மனுஷ்யபுத்திரன் : “எம்.எஸ்.வி... இவராதான் இருக்க வாய்ப்பு இருக்கு.”

“உதயநிதி எந்த இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்?”

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

சரியான பதில் : ஆர்ட்டிக்கிள் 15

`நீயா நானா’ கோபிநாத் : “சமீபத்துல அருண்ராஜாவும் இவரும் மீட் பண்ணினாங்க. போட்டோஸ்லாம் பார்த்தேன். பட், எந்தப் படம்னு ஞாபகம் வரலயே. இதுக்கு முன்னாடி உதயநிதி ஒரு இந்திப் படம் ரீமேக்ல லாயரா நடிச்சிருந்தார். அஹமதுகூட டைரக்‌ஷன் பண்ணியிருந்தார். அது பேரு ‘மனிதன்’. இப்போ நீங்க கேட்குறது எதுன்னு தெரியலயே...”

இனியா : “அவருக்காக நிறைய மலையாளப் படங்களை ரீமேக் பண்ணுறாங்கன்னு கேள்விப்பட்டேன். ‘இந்திப் படத்தின் ரீமேக்’கா... தெரியலையே.”

அர்ஜுன் சம்பத் : “அவரு இப்ப அரசியல்ல தீவிரமா இருக்காரே, எந்த இந்திப் படத்துல நடிக்கிறாரு... தெரியலைங்க எனக்கு.”

மனுஷ்யபுத்திரன் : “ஆர்ட்டிக்கிள் 15 என்று நினைக்கிறேன்.”