நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்!

ககன்தீப்சிங் பேடி, ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ககன்தீப்சிங் பேடி, ஐ.ஏ.எஸ்

ககன்தீப்சிங் பேடி, ஐ.ஏ.எஸ். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்

‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ எனத் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். உலகில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் வாழ்வு சிறக்கவும் ‘இருமடங்கு உற்பத்தி’, ‘மும்மடங்கு வருமானம்’ என்ற குறிக்கோளோடு தமிழக அரசு, வேளாண் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்!

தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களில் விவசாயிகளை இணைத்துக் குழுக்களாக்கி இருக்கிறோம். உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள், விளைபொருள்களைச் சந்தைப்படுத்த விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்ற பல திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில் பயிர்க் காப்பீடு மூலம் விவசாயிகளைக் காப்பதோடு, குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி செய்யச் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பாசனக்கருவிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் அளிக்கப்படுகிறது. மேலும், அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும், விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவும், தமிழ்நாடு அரசு ஆவன செய்து வருகிறது. தமிழ்நாடு, நான்கு முறை மத்திய அரசின் ‘கிரிஷி கர்மாண்’ விருதைப் பெற்றுள்ளளது.

வேளாண் உற்பத்தியை உயர்த்தவும், வேளாண் மற்றும் சார்பு தொழில் தொடர்பான பல தொழில்நுட்பங்களையும் வெற்றிக் கதைகளையும் தாங்கி மாதம் இருமுறை தமிழக மக்களிடையே பவனி வரும் ‘பசுமை விகடன்’ செய்யும் பணி பாராட்டத்தக்கது. தற்போது, தனது 300-வது இதழ் பதிப்பை வெளியிடவிருக்கும் பசுமை விகடனின் பணி சிறக்க எனது உளமார்ந்த பாராட்டுதல்களை, துறை சார்பாகவும் விவசாயிகள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.