சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை?

குறும்புக் கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
News
குறும்புக் கேள்வி

படம்: கிரண்சா

“ஆஹா... குறும்புக் கேள்விம்பாய்ங்களே... அதுதானா இது... சரி... சரி... டிரைவ் பண்ணிட்டிருக்கேன். நீங்க அப்படியே கேளுங்க... பதில் சொல்றேன்” எனத் தயாரானார் நடிகர் ரமேஷ் கண்ணா.

‘`ஜிம்ல வொர்க் அவுட் பண்ணிட்டிருக்கேன். பதினைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் கூப்பிடுங்க’’ என்றார் நடிகை சாக்‌ஷி அகர்வால். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவரே தொடர்பு கொண்டு “கேள்விகளைக் கேளுங்க பாஸ்” என்றார்.

ஐடியாவைச் சொன்னதும் கொஞ்சம் தயங்கிய கவிஞர் கலாப்ரியா, “சரி சரி கேளுங்க... பாப்போம்” என்றார் சிரித்தபடி.

“எந்தக் கேள்வியா இருந்தாலும் கேளுங்க... பதில் சொல்ல நான் ரெடி” என உற்சாகமானார் நடிகை கஸ்தூரி.

சுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை?

பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் இந்தியாவில் எந்த டிவியில் ஒளிபரப்பப்பட்டது? முதன்முதலில் தொகுத்துவழங்கியவர் யார்?

பதில் : சோனி டிவி, அர்ஷாத் வர்ஷி

ரமேஷ் கண்ணா: “எந்த சேனல்னு தெரியல. ஆனா, ஷில்பா ஷெட்டி இது மூலமாகத்தான் பேமஸானாங்க.”

சாக்‌ஷி அகர்வால்: “இந்தி கலர்ஸ்ல வந்துச்சுன்னு நினைக்குறேன். தொகுப்பாளர் யார்னு தெரியலை.”

கலாப்ரியா: “ஸ்டார் நிறுவனத்தோட சேனல்னு நினைக்கிறேன். ஆனால், தொகுத்துவழங்கியவர் யார்னு தெரியலையே.”

கஸ்தூரி: “கலர்ஸ் டிவி. தொகுப்பாளர் யார்னு தெரியலையே.”

சுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை?

சுஜாதாவுக்கும் வாலிக்கும் உள்ள ஓர் ஒற்றுமை என்ன?

பதில் : இருவரின் உண்மையான பெயர்களும் ரங்கராஜன்

ரமேஷ் கண்ணா: “ரெண்டு பேருடைய பெயரும் ஒண்ணு. ரங்கராஜன்.”

சாக்‌ஷி அகர்வால்: “ரெண்டு பேருமே கவிஞர்கள்தானே.”

கலாப்ரியா: “ரெண்டு பேரும் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்கள். சுஜாதாவின் உண்மையான பெயர் ரங்கராஜன். வாலியுடைய உண்மையான பெயரும் இதுதான்னு நினைக்கிறேன்.”

கஸ்தூரி: “இருவரின் உண்மையான பெயரும் ரங்கராஜன். பாண்டேவுக்கும் இந்தப் பெயருக்கும்கூட ஒற்றுமை இருக்கே.”

சுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை?

எந்தெந்த நாள்களில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்?

பதில் : சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜயந்தி

ரமேஷ் கண்ணா: “நியாயப்படி பார்த்தால் மாசத்துக்கு ஒருமுறை நடத்தணும்.”

சாக்‌ஷி அகர்வால்: “கிராமசபைக் கூட்டம்னா என்ன..?”

கலாப்ரியா: “சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி.”

கஸ்தூரி: “ஆகஸ்ட் 15, ஜனவரி 26, அக்டோபர் 2 அப்புறம் நம்ம தல பிறந்தநாள்.

சுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை?

எத்தனை கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் அதிவேக ரயில் வண்டிகளை முழுக்க ஏ.சி வண்டியாக மாற்ற ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது?

பதில் : 130 கிலோமீட்டர்

ரமேஷ் கண்ணா: “120.”

சாாக்‌ஷி அகர்வால்: “130.”

கலாப்ரியா: “இது குறித்த செய்தியைப் படித்த ஞாபகம் இருக்கு. ஆனால், கிலோமீட்டர் சரியாக நினைவுக்கு வரலை.”

கஸ்தூரி: “சூப்பர் பாஸ்ட் ரயில் 150 கிலோமீட்டர் வேகத்துல போகும். இது அதைவிட கொஞ்சம் கம்மி; 130 கிலோமீட்டர்.”

குஷ்புவுடன் பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி பெயர் என்ன?

பதில்: சரவணக்குமார்

ரமேஷ் கண்ணா: “குஷ்பு தெரியும். ஐ.ஆர்.எஸ் அதிகாரி யார்னு தெரியலையே.”

சாக்‌ஷி அகர்வால்: “குஷ்பு மட்டும்தானே.”

கலாப்ரியா: “அண்ணாமலையா? இல்ல, இல்ல... அவர் முன்னாடியே சேர்ந்திட்டாரே. சமீபத்தில்கூட இதைப்பற்றி ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்ட்ஸ் பார்த்தேன்; சரவணன்னுதானே ஆரம்பிக்கும்” என்றவரிடம் பதிலைச் சொன்னதும், “ஆமாங்க, ஃபேஸ்புக்கில் சரவணக்குமார்னு ஒரு தம்பி,

‘பி.ஜே.பியில் இணைந்த சரவணக்குமார் நான் இல்லை. அது வேற சரவணக்குமார்’னு பதிவு போட்டிருந்தார். டக்குனு ஞாபகத்துக்கு வரலை.”

கஸ்தூரி: ``சரவணக்குமார். என்னோட நண்பர்தான். இவர்கிட்ட நிறைய அரசியல் பேசியிருக்கேன். ஆனா என்கிட்டயே சொல்லாமல் அங்கே போய் சேர்ந்துட்டார். போட்டோஸ் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.”