Published:Updated:

விகடன் TV: “ரெண்டாவது அலையில் சிக்கியிருப்போம்!”

கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி

‘நான் சென்னை வந்துட்டேன்னு தெரிஞ்சாலே வாய்ப்புகள் வரும்னு நினைக்கிறேன்.

விகடன் TV: “ரெண்டாவது அலையில் சிக்கியிருப்போம்!”

‘நான் சென்னை வந்துட்டேன்னு தெரிஞ்சாலே வாய்ப்புகள் வரும்னு நினைக்கிறேன்.

Published:Updated:
கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி
‘லண்டன் ரிட்டர்ன்’னு சொன்னா ஒரு காலத்துல பெருமையாப் பார்த்தாங்களாம். இப்ப நானும் ‘லண்டன் ரிட்டர்ன்’தான். ஆனா ஒருவித மிரட்சியோடவே என்னைப் பார்க்குறாங்க...’’

‘அள்ளித் தந்த வான’த்தில் தெரிந்த அதே குழந்தைத்தனக் குறும்புச் சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் கல்யாணி. சினிமா, சீரியலில் ஒரு ரவுண்ட் முடித்துத் திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தையுடன் பிரிட்டனில் குடியேறியவர், இப்போது மீண்டும் சென்னைக்கே திரும்பியிருக்கிறார்.

கல்யாணி
கல்யாணி

``எதுக்கு லண்டன் போனீங்க?’’

‘‘சென்னை பெசன்ட் நகர்ல வளர்ந்த குழந்தைங்க நான். சின்ன வயசுலயே சினிமாவுல நுழைஞ்சு பிரபலமும் கிடைச்சது. ஆனா பொண்ணுங்கன்னா குறிப்பிட்ட வயசுல இன்னொரு வீட்டுக்குப் போகணும்தானே? என் கணவர் பெங்களூருதான். ஆனா அவருக்கு லண்டன் பக்கத்துல பிர்மிங்கம்ல வேலை கிடைக்க, அங்க போகலாம்னு முடிவெடுத்தோம். அந்தச் சமயத்துல நிகழ்ந்த என் அம்மாவின் திடீர் மரணமும் என்னை பாதிக்க, இடம் மாறுவது நல்லதுன்னு தோணுச்சு. ரெண்டு மாசக் குழந்தையான என் பாப்பாவைத் தூக்கிட்டு லண்டன் கிளம்பினேன்.’’

விகடன் TV: “ரெண்டாவது அலையில் சிக்கியிருப்போம்!”

``லண்டன் வாழ்க்கை எப்படி இருந்தது?’’

‘‘கல்யாணம் வரைக்கும் வீட்டுல ஒரு வேலைகூடச் செய்தது கிடையாது நான். அம்மா அப்படி என்னை வளர்த்துட்டாங்க. கல்யாணம் முடிஞ்சதும் நான், கணவர், குழந்தைன்னு மூணு பேர்தான் அங்கு போனோம். அங்க வீட்டு வேலைக்கெல்லாம் ஆள் கிடைக்க மாட்டாங்க. சமையல்ல இருந்து பாப்பாவைப் பார்த்துக்கிடறது வரைக்கும் எல்லாமே நாமதான் செய்யணும். எனக்கும் எல்லாமே புதுசாத் தெரிஞ்சாலும் வேற வழியே இல்லை. சாம்பார் வைக்கிறேன்னு கிளம்பி அது ரசம் மாதிரி ஆன கூத்தெல்லாம் நடந்தது. எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டது மட்டுமல்லாம, எனக்கு அவ்வளவு உதவியாகவும் இருந்தார் ரோஹித். அதனாலதான் வாழ்க்கை சுமுகமாப் போச்சு.’’

விகடன் TV: “ரெண்டாவது அலையில் சிக்கியிருப்போம்!”

``கோவிட் அங்கேயும் தாண்டவமாடுச்சே, அந்த நாள்களை எப்படிக் கடந்து வந்தீங்க?’’

‘‘இன்னும்கூட அந்த மிரட்சியில இருந்து நான் மீளலை. எனக்கு ஒவ்வொரு நாளுமே திக் திக்னுதான் போச்சு. ஏன்னா, டாக்டரான ரோஹித்துக்கு வேலையே ஐ.சி.யு.வுலதான். இன்டென்சிவ் கேர் யூனிட் ஸ்பெஷலிஸ்ட் அவர். கொரோனாப் போராட்டத்துல முன் வரிசையில நின்னவர். டியூட்டிக்குப் போனா திரும்பி வர ரெண்டு வாரத்துக்கு மேலகூட ஆகியிருக்கு. ஹாஸ்பிட்டல்ல தினமும் நிறைய இறப்புகளையெல்லாம் பார்த்துட்டு வருவார். நான் பயப்படுவேனோன்னு அதுபத்தி எங்கிட்ட பேசத் தயங்குவார். ‘அவர் மன அளவுல பாதிக்கப்படக் கூடாது. வெளியில பேசுனா கொஞ்சம் ஃப்ரீ ஆவாரே’னு நானே கேப்பேன். கடைசியில ரெண்டு பேருக்குமே பயம் வந்துடும்.

இன்னொருபுறம் என் மகள். அவளை ஆசையாக் கொஞ்சக்கூட ரெண்டு பேருக்கும் பயமா இருக்கும். எங்க ரெண்டு பேரை விட்டா எங்க குழந்தைக்கு இங்க வேற யாரும் இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு ஒவ்வொரு நாளையும் கடத்துனோம். ‘மூணு பேரையும் பத்திரமா இந்தியா கொண்டு சேர்த்துடு கடவுளே’ன்னு தினமும் பிரார்த்தனைதான்.

சின்ன வாய்ப்பு வந்தாலும் இந்தியா திரும்பிடணும்னு அப்பதான் முடிவெடுத்தோம். அந்த நேரம்தான் சென்னையில அப்போலோ மருத்துவமனையில ரோஹித்துக்கு வேலை கிடைச்சது. லாக் டௌனையும் கொஞ்சம் தளர்த்துனாங்களா... கிடைச்ச கேப்ல எப்படியோ சிக்கல் இல்லாம ஓடி வந்துட்டோம். சொல்லப் போனா இப்பவும் கடவுள் கருணை காட்டியிருக்கார். கொஞ்சம் தாமதமாகியிருந்தாலும் ரெண்டாவது அலையிலயும் சிக்கியிருப்போமே!’’

விகடன் TV: “ரெண்டாவது அலையில் சிக்கியிருப்போம்!”

``சென்னை இப்ப எப்படி இருக்கு? மாறியிருக்கற மாதிரி தெரியுதா?’’

‘‘கோவிட் கட்டுப்பாடுகளால கொஞ்சம் மாறியிருக்கற மாதிரி தெரியுது. எனக்கு என் பழைய சென்னையை மறுபடியும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. நான் விளையாடிய, படிச்ச, நடிச்ச இடங்களுக்கெல்லாம் என் மகளைக் கூட்டிட்டுப் போய் காட்டணும்னு ஆசைப்படறேன். அது உடனே நடக்குமான்னு தெரியலை. ‘இனி இங்கதானே இருக்கப் போறோம்’னு நினைக்கிறப்ப மனசு கொஞ்சம் சமாதானமாகுது.’’

``சீரியலிலோ, சினிமாவிலோ, மறுபடியும் உங்களை எப்ப பார்க்கலாம்?’’

‘‘நான் சென்னை வந்துட்டேன்னு தெரிஞ்சாலே வாய்ப்புகள் வரும்னு நினைக்கிறேன். பாப்பாவும் கொஞ்சம் வளர்ந்துட்டா. சினிமா, சீரியல்னு எனக்கு வித்தியாசம் கிடையாது. நல்ல கேரக்டர்கள் அமைஞ்சா பண்ணலாம்னு இருக்கேன். இந்த விஷயத்துல ‘உனக்கு எது சரின்னு தெரியுதோ அதைச் செய்’னு சொல்லிட்டார் கணவர். அதனால பிடிச்ச கேரக்டர்கள் கிடைச்சா நிச்சயம் மறுபடியும் நடிப்பேன்.’’