Published:Updated:

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

பிரியங்கா சோப்ரா - பிரியங்கா போர்கர் கூட்டணி எப்போது, எங்கே இணைந்தாலும் வெற்றிதான்.

பிரீமியம் ஸ்டோரி
‘உங்களுக்குப் பிடிச்ச வேலையைப் பாருங்க. வெற்றி உங்களைத் தேடிவரும்...’’ இப்படிச் சொல்பவரும் பிடித்த வேலையைச் செய்து, வெற்றியைத் தொட்டவர்தான்.

அவர், பிரியங்கா போர்கர். பாலிவுட்டின் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட். பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி, பூமி பெட்னேகர், தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் என இவரின் செலிபிரிட்டி வாடிக்கையாளர் லிஸ்ட் நீள்கிறது. ‘பியார் இம்பாசிபிள்’, ‘டான் 2’, ‘பர்ஃபி’, ‘கல்லி பாய்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகப் பணிபுரிந்திருக்கிறார்.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

இரண்டு மணி நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் பிரியங்கா, விகடன் பேட்டி என்றதும் அகமகிழ்ந்து நேரம் ஒதுக்கினார்.

‘‘உண்மையைச் சொல்லணும்னா எனக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகணும்னு எந்த ஐடியாவும் இல்லை. என் அம்மா 30 வருஷங்களுக்கும் மேலா பியூட்டி அண்ட் ஹேர் டெக்னீஷியனா இருக்காங்க. சொந்தமா சலூன் வெச்சிருக்காங்க. அவங்க சொன்னதாலதான் ஹேர் ஸ்டைலிங் கோர்ஸ் படிச்சேன். படிக்கிறபோதே அந்த விஷயத்தை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். அம்மாவுடைய அனுபவமும் அடுத்தவர்களை அழகுபடுத்திப் பார்க்கிற அந்தக் கலையும்தான் என்னை ஹேர் ஸ்டைலிஸ்ட்டா மாத்தியது. கன்டா மோத்வானின்னு என் மென்ட்டார் நிறைய பாலிவுட் செலிபிரிட்டீஸ்கூட வொர்க் பண்றாங்க. அவங்களோடு மூணு வருஷம் வொர்க் பண்ணியிருக்கேன். 2009-ல பிரியங்கா சோப்ராவோடு பாலிவுட்ல வொர்க் பண்ற முதல் வாய்ப்பும் அவங்க மூலமாதான் வந்தது. பெரிய போராட்டங்கள் இல்லாம கிடைச்ச அந்த வாய்ப்பை அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்.’’ - அலட்டல் இல்லாத அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் பிரியங்கா.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

பிரியங்கா சோப்ரா - பிரியங்கா போர்கர் கூட்டணி எப்போது, எங்கே இணைந்தாலும் வெற்றிதான். படங்கள் முதல் பர்சனல் வரை இருவருக்குமான அந்த கெமிஸ்ட்ரி வேற லெவல்.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

‘‘பிரியங்கா சோப்ரா மாதிரியான பிஸியான பிரபலத்துக்கு தினமும் கூந்தலைப் பராமரிக்கிறது எவ்வளவு சிரமமான வேலைன்னு பலர் நினைக்கலாம். ஆனா அவங்களுடைய புரொஃபஷனலிசம் வியக்கவைக்கும். அவங்களோடு வொர்க் பண்றது ரொம்ப ஈஸி. புது விஷயங்களை முயற்சி செய்யத் தயங்க மாட்டாங்க. இன்னும் சொல்லப்போனா நிறைய பேர்கிட்டருந்து நிறைய இன்புட்ஸ் வாங்கிவெச்சிருப்பாங்க. அதுலேருந்து அவங்களுக்காக ஒரு ஸ்டைலை செலக்ட் பண்றதுதான் கஷ்டமா இருக்கும். விமர்சனங்களுக்குக் கடுப்பாகவே மாட்டாங்க. ரொம்ப ஜாலியான பர்சன். தன்னைச் சுற்றியுள்ளவங் களை நல்லா பார்த்துப்பாங்க’’- அநியாயத்துக்கு பிரியங்கா புகழ் பாடுகிறார் பிரியங்கா.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் திருமணத்துக்கும் மிஸ் போர்கர்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். திருமணப் படங்களோடு பிரியங்கா போர்கரின் பெயரும் வைரலானது.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

‘அவ்வளவு பெரிய வாய்ப்பு தேடி வந்தபோது எனக்கு ஏற்பட்ட பரவசத்தையும் படபடப்பையும் வார்த்தைகள்ல விவரிக்க முடியாது. வெடிங் லுக்குக்காக 75 அடி நீளத்துக்கு அவங்க தலையில ஒரு முக்காடு பொருத்தினது மிகப் பெரிய சவாலா இருந்தது. ஆனா அது பெருசா பேசப்பட்டது’’ பெருமை பேசும் பிரியங்கா, ஆலியா பட்டுக்கும் அவ்வளவு க்ளோஸ்.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

‘‘ஆலியா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அவங்க குட்டிப் பெண்ணா இருந்ததுலேருந்து திறமையான நடிகையா வளர்ந்து நிற்கறதுவரை பார்த்திருக்கேன். ஆலியாவோடு வொர்க் பண்ற அனுபவத்தைத் தென்றலோடு ஒப்பிடலாம்...’’ ஆலியா மட்டுமல்ல, அத்தனை பிரபலங்களைப் பற்றியும் சொல்ல இப்படி நிறைய இருக்கின்றன பிரியங்காவிடம்.

தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்!

‘‘17 வயசுலேருந்து வொர்க் பண்றேன். வேலை முக்கியம்னு தோணும்போது நம்மை அறியாம அதுக்கேத்தபடி பர்சனல் வாழ்க்கையையும் பேலன்ஸ் பண்ணிப்போம். சப்போர்ட் பண்ற குடும்பமும், என் வேலையின் தன்மையைப் புரிஞ்சு ஏத்துக்கிற பார்ட்னரும் என் பலம். நீங்களும் ஹார்டு வொர்க் பண்ணுங்க. லைஃப்ல கத்துக்கிட்டே இருங்க. உங்களுக்கு நீங்களே போட்டியாளரா இருங்க. வெற்றி தேடி வரும். வெற்றிங்கிறது இலக்கில்லாத பயணம். வெற்றியாளர்கள் யாராவது உழைக்கிறதை நிறுத்திப் பார்த்திருப்போமா?’’ வெற்றியின் சூட்சுமம் சொல்பவரிடம் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் கேட்காமல் பேட்டியை நிறைவு செய்வது நியாயமாகுமா?! கேட்டோம்.

‘‘அழகுப் பராமரிப்பில் கூந்தலுக்கு முக்கியமான இடம் கொடுக்கணும். சரியான ஸ்டைலிங் பொருள்களை உபயோகிங்க. வெப்பத்தைப் பயன்படுத்திச் செய்யும் ட்ரீட்மென்ட்டில் டெம்ப்ரேச்சர் அதிகமாயிடாம பார்த்துக்கணும். நல்லா சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. சருமத்தையும் கூந்தலையும் அன்போடு பார்த்துக்கோங்க. எல்லாத்தையும்விட முக்கியமா எப்போதும் சந்தோஷமா இருங்க...’’

நல்ல டிப்ஸ்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு