Published:Updated:

‘அரண்மனை கிளி’ பட ஹீரோயின் மாதிரி பொண்ணு கேட்டான்! - மிமிக்ரில அம்மாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!

உமாவதி, ஆதவன்
பிரீமியம் ஸ்டோரி
உமாவதி, ஆதவன்

அம்மா-மகனின் கலாய் கலகல...

‘அரண்மனை கிளி’ பட ஹீரோயின் மாதிரி பொண்ணு கேட்டான்! - மிமிக்ரில அம்மாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!

அம்மா-மகனின் கலாய் கலகல...

Published:Updated:
உமாவதி, ஆதவன்
பிரீமியம் ஸ்டோரி
உமாவதி, ஆதவன்

அம்மாவும் நானும்

‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆதவன். மிமிகிரி, காமெடி என சகலத்திலும் செஞ்சுரி அடிப்பவர். ஆதவனின் அம்மா உமாவதி , 27 ஆண்டுகளாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்.

அம்மாவையும் மகனையும் ஜாலி பேட்டிக்காகச் சந்தித்தோம்.

“நீங்க டாக்டர்... ஏன் உங்க மகனை டாக்டர் ஆகலை”

''முதல்ல டாக்டர் ஆகுறதுக்கு விரும்பம் இருக்கணும். அது ஆதவன்கிட்ட இல்ல. ஆனா ஸ்கூல்ல, காலேஜ்ல படிக்கும்போது அவன் ஏறாத மேடையே கிடையாது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே கிருபானந்த வாரியார் மாதிரி மிமிகிரி பண்ண ஆரம்பிச்சுட்டான். அவன் பண்ற மிமிகிரியை ரெக்கார்ட் பண்ணி வெச்சுப்பேன்”

- நாஸ்டால்ஜியா பகிர்கிறார் அம்மா. தொடர்ந்து பேசுகிறார் மகன்.

“குடும்ப நிகழ்ச்சிகள்ல என்னைப் பார்க்கறவங்க எல்லாம்... அப்புறம் தம்பி.. நீங்களும் டாக்டர் ஆகிடுவீங்களா’ன்னு கேப்பாங்க. யார் என்ன கேட்டாலும் எங்க வீட்ல என்னோட விருப்பத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்தாங்க. மீடியாவுல இருக்குறப்போ ஷூட் முடிச்சு வீட்டுக்கு ராத்திரி லேட்டா வர்றப்ப வீட்ல இருக்கிறவங்க இதெல்லாம் தேவையா, ஒழுங்கா வேற ஏதாவது வேலையைப் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்டிருந்தாங்கன்னா, எனக்கும் அப்படி நினைக்கத் தோணிருக்கும். ஆனா அப்படிக் கேட்காம அவங்க கொடுத்த ஆதரவாலதான் என்னால இந்த ஃபீல்டுல நிக்க முடிஞ்சுது”

உமாவதி, ஆதவன்
உமாவதி, ஆதவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘’ஆனாலும் மீடியாவை கரியராவே செலக்ட் பண்ணப் போறேன்னு அவன் அப்போ சொன்னப்போ கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு. என்னோட சீஃப் டாக்டர் ஒருத்தர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘எல்லாருக்கும் இதுபோல சான்ஸ் கிடைக்காது. நல்ல திறமைசாலி. நிச்சயம் முன்னுக்கு வருவான்’ன்னு சொன்னாரு. அதுக்கு அப்புறம்தான் மிமிகிரி, காமெடி மாதிரியான விஷயங்களை கரியரா மாத்தலாம்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு”” என்கிறார் ஆதவனின் அம்மா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“வீட்டுல சினிமா பத்தி அதிகமா பேசுவோம். அம்மா ஹாஸ்பிட்டல்ல மட்டும்தான் டாக்டர். வீட்டுக்கு வந்தா ‘கிளம்புங்க படத்துக்குப் போவோம்’னு சொல்வாங்க. வாரம் தவறாம படம் பார்த்துடுவோம். மிமிக்ரில அம்மாதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன்னே சொல்வேன். சின்ன வயசுல ராத்திரி என்னை தூங்கவைக்க, அம்மா ஹாஸ்பிட்டல்ல நடந்த விஷயங்களையெல்லாம் கதை மாதிரி சொல்வாங்க. அங்க உள்ள நபர்களையெல்லாம் இமிடேட் பண்ணிக் காட்டுவாங்க எந்த விஷயத்தை அதிகமா பார்க்கறீங்களோ எதுகூட அதிகமா நேரம் செலவிடுறீங்களோ அது உங்களை அறியாமலேயே உங்களுக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் கலையும் எனக்குள்ள வந்துச்சுன்னு நினைக்கறேன்...’’ என்ற ஆதவன், பெருமையான அந்தத் தருணத்தையும் நினைவுகூர்ந்தார்.

“அம்மா சூப்பரா பாடுவாங்க. அவங்க படிச்ச அதே தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேசும்போது ‘இந்த மேடையில தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்கள் நின்னு பேசியிருக்காங்க’ன்னு சொன்னாங்க. நான் மேடையறினப்போ சொன்னேன்...'5 சி.எம் நின்னு பேசின மேடைல நான் நிக்குறேங்குறதைவிட, எங்க அம்மா பாடின மேடையில நானும் ஃபெர்பாம் பண்றேங்குறதுதான் எனக்குப் பெருமை’ன்னு சொன்னேன். அவங்க ஒரு பெஸ்ட் உமன்’’ என்கிறார்.

“இவன் மீடியாவுல இருக்கான்னு ஆசைப்பட்டுதான் என் மருமகள் இவனை கட்டிக்கிட்டா. லவ் மேரேஜ்தான்.அரண்மனை கிளி பட ஹீரோயின் காயத்ரி மாதிரி பொண்ணு வேணும். கட்டுனா அதே மாதிரி பொண்ணைத்தான் கட்டுவேன்னும் சொல்லிட்டே இருந்தான்”

-மகனைக் கலாய்க்கிறார் அம்மா.

“என் வொய்ஃபுக்கும் டி.விக்கும் ரொம்ப தூரம். நான் சன் டி.வியில புரொகிராம் பண்றேம்மான்னு சொன்னா, ‘அப்டியா...நாளைலேருந்து விஜய் டிவி பார்க்கறேன்னு சொல்வாங்க.’ விஜய் டி.வில ‘கலக்கப் போவது யாரு’ பண்றேன்னு சொன்னா, ‘அப்போ இனிமே ஜீ டி.வி பார்க்கறேன்’னு சொல்வாங்க. அம்மா அப்பா, மனைவி, மகள்னு லைஃப் ஜாலியா போகுது!”

கலகலத்து விடைகொடுத்தனர் அம்மாவும் மகனும்!