Published:Updated:

“எனக்கு ட்ரெண்டுங்குற வார்த்தையே புதுசு!”

தேவா
பிரீமியம் ஸ்டோரி
தேவா

``இன்னும் போகலை. என் வீட்டுப் பக்கத்துலதான் இருக்கு. சீக்கிரமே போயிட்டு வரணும்.''

“எனக்கு ட்ரெண்டுங்குற வார்த்தையே புதுசு!”

``இன்னும் போகலை. என் வீட்டுப் பக்கத்துலதான் இருக்கு. சீக்கிரமே போயிட்டு வரணும்.''

Published:Updated:
தேவா
பிரீமியம் ஸ்டோரி
தேவா
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் `கர்ணன்' படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியிருக்கின்றன. இதில் இரண்டாவதாக வெளியான ‘பண்டாரத்தி புராணம்’ ட்ரெண்டிங்கில் இடம்பெற்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வந்திருக்கிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தேவாவின் குரல்!

``ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நிறைய படங்களில் பாடிக்கிட்டிருக்கேன். `கர்ணன்' படத்தோட பண்டாரத்தி புராணம் பாடலை யூ டியூப்ல வெளியிட்டது தெரியாது. அப்போ எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர், `சார், நீங்க பாடுன பாட்டு ரிலீஸாகியிருக்கு பார்த்தீங்களா’ன்னார். `இல்ல சார்'னேன். ஏன்னா, எனக்கு யூடியூப் மாதிரியான விஷயங்களெல்லாம் தெரியாது. வீட்டுல பேரன் பேத்திகள்தான் பார்த்துட்டு சொல்லுவாங்க. ஒரு கலைஞனுக்கு அவனுடைய படைப்பு ஹிட் அடிக்குறதைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்ல. `பண்டாரத்தி பாடல்' பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. எனக்கு ட்ரெண்டுங்குற வார்த்தையே புதுசு. இப்போதான் இதெல்லாம் கத்துக்கிட்டு வரேன்.''

தேவா
தேவா

``இந்தப் பாட்டுக்குள் நீங்கள் வந்தது எப்படி?’’

``சந்தோஷ் நாராயணன் தம்பி முதல்ல என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னார். பாட்டுக்குள்ள பெரிய சோகம் இருக்குன்னு யுகபாரதியோட வரிகளைப் பார்த்தப்போ தெரிஞ்சிக்கிட்டேன். ஹீரோ தனுஷும் நம்பர் ஒன் ஆர்ட்டிஸ்ட். அவருடைய பர்பாமன்ஸ் எப்படியிருக்கும்னு வரிகளைப் பார்த்தப்பவே தெரிஞ்சது. நான் பாடியிருக்கேன்னு சொல்றதைவிடவும் என்கிட்ட நல்லா வேலை வாங்குனாங்கன்னு சொல்லலாம். ஏன்னா, இயக்குநர் மாரிக்குத்தான் படத்தோட கதை, சூழல் தெரியும். எந்தக் காட்சிக்கு எப்படிப் பாடணும்னு சந்தோஷுக்கும் தெரியும். நான் பாடிய எத்தனையோ பாட்டுகள் ஹிட்டாகியிருக்கு. இருந்தாலும், ‘பண்டாரத்தி புராணம்’ மாதிரியான பாட்டு இதுவரைக்கும் பாடியதில்லை. யாரும் அப்படிக் கேட்டும் வந்ததில்லை. கானாப் பாடல்கள்னா தேவான்னு ஒரு அடையாளமா இருக்கு. முதன்முறையா ஒரு நாட்டுப்புறப் பாடல் பாடியது மகிழ்ச்சியான அனுபவம்!”

``இப்போ பாடிட்டிருக்கிற கானாக் கலைஞர்களை கவனிக்கிறது உண்டா?’’

``எல்லாரையும் ரசிச்சுப் பார்க்குறேன். சிலர் பெயர் தெரியாததால் குறிப்பிட்டுச் சொல்ல முடியலை.”

``கால ஓட்டத்துல நிறைய இளம் இயக்குநர்கள் உங்களைப் பாடக் கூப்பிடுறப்போ எப்படியிருக்கு?’’

``முதல்ல, அவங்ககிட்ட இருக்குற தயக்கத்தை உடைச்சிருவேன். நான் பாடுறதுக்கு முன்னாடி அவங்களைப் பாடச் சொல்லிக் கேட்பேன். என்னோட ஸ்டைலுக்கு ஏத்த மாதிரியும் சிலதை மாத்தச் சொல்வாங்க. இன்னும் சில பாட்டுல டிராக் பாடுனவங்களே நல்லா பாடியிருப்பாங்க. இதைக் கேட்குறப்போ நல்லாருக்கும். இதனால, ‘இவங்க பாடுனதே நல்லாருக்கு. இதுவே இருக்கட்டும்’னு சொல்லிருவேன். ஏன்னா, சினிமாவுக்காக நிறைய முயற்சி பண்ணிட்டிருப்பாங்க. இவங்களுக்கு நாம முட்டுக்கட்டையா இருக்க வேண்டாம்னு தோணும். இன்னும் உண்மையா சொல்லணும்னா, அவங்க பாடுற மாதிரி என்னால பாட முடியாதுன்னு தோணும். இப்படிச் சில பாடல்களை வேண்டாம்னு சொல்லியிருக்கேன்.''

தேவா
தேவா

``எஸ்.பி.பி-யை மிஸ் பண்றீங்களா?’’

``கண்டிப்பா, எங்கே போனாலும் அவருடைய குரலாவே இருக்கு. ஒரு வேளை ஹாஸ்பிட்டலுக்குப் போகாம இருந்திருந்தா பொழைச்சிருப்பாரோன்னு தோணுது. என்னோட முதல் படத்துல இருந்து எனக்குப் பாடிக் கொடுத்திருக்கார். எஸ்.பி.பி இல்லைன்னா இன்னைக்கு நான் இந்த இடத்துல இல்லன்னு சொல்லலாம். ‘ஆட்டோக்காரன்’, ‘வந்தேன்டா பால்காரன்’ன்னு எத்தனை எத்தனை பாடல்கள்!”

``இளையராஜாவுடைய புது ஸ்டூடியோவுக்குப் போனீங்களா?’’

``இன்னும் போகலை. என் வீட்டுப் பக்கத்துலதான் இருக்கு. சீக்கிரமே போயிட்டு வரணும்.''

``இப்போ இருக்கிற இசையமைப்பாளர்களின் இசையைக் கேட்குறது உண்டா?’’

``நிறைய இளம் மியூசிக் டைரக்டர்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அனுபவம் வாய்ந்து சினிமாவுக்கு வந்தா நல்லாருக்கும். அப்போதான் நிலைச்சு நிக்க முடியும்னு தோணுது. ஒரு கலைஞன் முப்பது வயசுல சினிமாவுக்கு வந்துட்டார்னா இருபது வருஷத்துக்கு அப்புறம் இங்கே என்ன பண்ணுவார்னு ஃபீல் பண்றேன். நாப்பது வயசுலதான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தேன். வாழ்க்கையோட நடுப்பகுதிலதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, நிலைக்க முடியல. நானும் இருபத்தஞ்சு வயசுலயே சினிமாவுக்கு வந்திருந்தா ஐம்பது வயசு வரைக்கும் சினிமால இருந்துட்டு அப்புறம் என்ன பண்ணியிருப்பேன்னு தெரியல. பார்க்குறவங்களெல்லாம், `சார், எப்படி யிருந்தார். இப்போ இப்படி ஆகிட்டார்’னு சொல்லுவாங்க. சினிமால இதொரு கஷ்டமான விஷயம். எப்போவும் ஓடுற பஸ்ல உட்கார்ந்துட்டிருக்கணும். ஏதோ காரணத்தினால சான்ஸ் இல்லாமப் போயிட்டா, `என்ன தலைவா, குரலையே காணோம்’னு கேட்பாங்க. ஆனாலும் இந்த வயசு வரைக்கும் சினிமால பாடிக்கிட்டிருக்கேன். இதை அம்பாளுடைய அனுக்கிரகமா பார்க்குறேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism