Published:Updated:

‘முல்லை’ தனசேகர் ‘குறிஞ்சி’ கோதண்டன்

தனசேகர், கோதண்டம்
பிரீமியம் ஸ்டோரி
தனசேகர், கோதண்டம்

சின்னத்திரை

‘முல்லை’ தனசேகர் ‘குறிஞ்சி’ கோதண்டன்

சின்னத்திரை

Published:Updated:
தனசேகர், கோதண்டம்
பிரீமியம் ஸ்டோரி
தனசேகர், கோதண்டம்
`` `முல்லை’ன்னா காடும் காடு சார்ந்த இடமும். அதனால `முல்லை’ங்கிற அடைமொழிவெச்சேன்’னு சொல்வான். நீங்க, `சரி’னு தலையாட்டிட்டு நின்னுடாதீங்க. ‘அது எங்களுக்குத் தெரியுது. நீ எதுக்கு அந்த அடைமொழியை வெச்சே... உன் வீடு தனியா காட்டுக்குள்ளயா இருக்கு’னு கேளுங்க. அப்படியே மழுப்புவான். `ஆ ஊ’ன்னா அடைமொழிவெச்சிட வேண்டியது. இவனால எல்லாரும் என்னையும் அடைமொழிவெக்கச் சொல்லிக் கேக்குறாங்க. ‘குறிஞ்சி கோதண்டம்’னுகூடவெச்சுக்கலாம். ரைமிங்காதான் இருக்கு. ஆனா காலம் கடந்துடுச்சு. பத்தாவது வரையே படிச்சுட்டு, பத்து நாடுகளுக்கு மேல சுத்திட்டு வந்துட்டேன். அங்கெல்லாமே ‘முல்லை கோதண்டம்’தான். என்னைவிட்டா இவனில்லை; இவனைவிட்டா நானில்லை...’’
தனசேகர், கோதண்டம்
தனசேகர், கோதண்டம்

`கலக்கப்போவது யாரு’, `முல்லை – கோதண்டம்’ ஜோடியைச் சந்தித்தபோது, `முல்லை’ தனசேகரை, கோதண்டராமன் கலாய்க்க,

‘`இங்க பாரு... இது நம்ம ஷோ இல்லை... நீ மட்டுமே லொடலொடனு பேசிட்டிருக்கே... அவங்க நம்மைப் பேட்டி எடுக்க வந்திருக்காங்க, அதுவும் தீபாவளி மலருக்கு. பேட்டி நல்லா வரணும்னா அவங்க கேக்கறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்’’ என பதில் பஞ்ச் தந்தார் முல்லை.

``முல்லையும் கோதண்டமும் எப்பவுமே இப்படித்தானா?’’ என்றபடி உரையாடலைத் தொடங்கினேன்.

‘`அதுதானே சார் சோறு போடுது..’ என்ற முல்லை, ``சரி... என்னைவிட எட்டு வயசு மூத்தவர் அவர். அதனால அவரே முதல்ல பேசட்டும்’’ என்றபடி, கோதண்டத்தைப் பார்க்க,

``ஒருநேரத்துல பசியோடு இருந்த நான் இன்னிக்கு பிஸியா இருக்கேன்னா காரணம் இந்தப் பேச்சுதான்’’ என்றபடி பேச ஆரம்பித்தார் கோதண்டம்.

இப்போ பிளைட் ஏறி இறங்குறோம், சிட்டி பஸ்ல சுத்திக்கிட்டிருந்தோம்
இப்போ பிளைட் ஏறி இறங்குறோம், சிட்டி பஸ்ல சுத்திக்கிட்டிருந்தோம்

‘`சென்னையில சூளையில பிறந்தேன். சாதாரணக் குடும்பம். படிப்பு பத்தாவதுக்கு மேல ஏறலை. வேலைனு பார்த்தா `ஆபீஸ் பாய்’ தொடங்கி பல வேலைகளைப் பார்த்துட்டிருந்தேன். எதுலயும் மனசு ஒட்டலை. மனசு விரும்பின ஒரே விஷயம்னா, நல்லா சினிமா பார்ப்பேன். டி.வி-யில ஒரு நாளைக்கு பத்துப் படம் போட்டாலும் ஒண்ணு விடாம பார்த்துடணும்னு நினைக்கிற ஆள். சினிமாவுல காமெடிப் படங்களே ரொம்ப பிடிச்சுது. நாகேஷ் சார் பேசுற டயலாக்கை அப்படியே பேசுவேன். அதைப் பார்த்து நாலு பேர் உசுப்பேத்திவிட்டாங்க.

வீட்டுலயும், ‘உருப்படியா எந்த வேலைக்கும் போறதில்லையே... எது வருதோ, அதையாச்சும் செய்ய வேண்டியதுதானே’னு வாழ்த்தி (?!) அனுப்ப, ஆவடியில ஒரு லோக்கல் சேனல்ல ஷோ பண்ணுற வாய்ப்பு கிடைச்சுது’’ என கோதண்டம் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட முல்லை, `அங்கே நாம அறிமுகமான கதையை நான் சொல்லிக்கிறேன்’ என்றபடி தொடர்ந்தார்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கம். டிகிரி முடிச்சுட்டு எல்லாரையும்போல வேலை தேடி சென்னை வந்தேன். முதல் வேலை `கிஷ்கிந்தா’ தீம் பார்க்கில். அங்கேயே கையில மைக் கிடைச்சிடுச்சு. அறிவிப்பாளர் வேலை. எப்படியோ கோதண்டத்தைக் கூப்பிட்ட அதே சேனல் கண்ணுல பட்டிருக்கேன். எனக்கும் ஒரு ஷோ கிடைச்சிடுச்சு.

‘முல்லை’ தனசேகர் ‘குறிஞ்சி’ கோதண்டன்

6 மணியில இருந்து 7 மணி வரைக்கும் அவர் ஷோ. 7 முதல் 8 வரைக்கும் என்னுடைய ஷோ. அந்த கேப்ல ரெண்டு பேரும் சந்திச்சிக்கிடுவோம். ஏழெட்டு மாசம் போயிருக்கும். திடீர்னு ஒருநாள் சேனல்ல கூப்பிட்டு, `இனி உங்க ரெண்டு பேருடைய ஷோவும் இல்லை’ன்னாங்க. ஒரு நிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு. அப்புறம்தான் ‘ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரே ஷோ’ன்னாங்க. அந்த நொடி, எங்க ரெண்டு பேர் மைண்ட் வாய்ஸும் என்னவா இருந்ததுனு நினைக்கிறீங்க...

`ச்சே, சேர்த்ததுதான் சேர்த்தீங்க, ஒரு ஃபீமேல் ஆங்கர்கூட சேர்த்து விட்டிருக்கக் கூடாதா?!’ங்கிறதுதான்.

`க.போ.யா’வுக்கு முந்தைய கதை ஓ.கே. அந்த ஷோவுக்குள் வந்தது?

கோதண்டம், தனசேகர்
கோதண்டம், தனசேகர்

‘`எங்களுடைய அந்த ஷோ ஒரு பெரிய உதவி பண்ணுச்சு. அதைப் பார்த்துட்டுக் கூப்பிட்ட விஜய் டி.வி-யில ஆடிஷன் இல்லாமலேயே எங்களைச் சேர்த்துக்கிட்டாங்க. `க.போ.யா சீஸன் 5’ல் நாங்க நுழைஞ்ச பிறகு எங்க வாழ்க்கையே மாறிடுச்சு. உள்ளூர் சேனல்ல வந்திட்டிருந்தவங்களை உலகத் தமிழர்கள்கிட்டக் கூட்டிட்டுப் போனது அந்த ஷோ. அதனால அந்த ஒரு வருஷ காலத்தைத்தான் நாங்க ரெண்டு பேருமே டர்னிங் பாயின்டுனு சொல்வோம்’’ என்றார் கோதண்டம்.

முல்லை – கோதண்டம் கலந்துகொண்ட அந்த ஐந்தாவது சீஸனில் இவர்கள் இருவரும் வின்னரும் இல்லை, ரன்னரும் இல்லை. ஆனாலும் இவர்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் ஒன்று உருவானது.

`கன்டென்ட், கான்செஃப்ட் எப்படிப் பிடிக்கறீங்க..’ – முல்லையைக் கேட்டோம்.

``காமெடி ஷோவுக்கு ஸ்கிரிப்ட்தான் எல்லாம். நல்லா சிரிக்கவெக்கிற, சிந்திக்கவெக்கிற ஸ்கிரிப்டாகவும் அது அமைஞ்சிட்டா, நிச்சயம் ஷோ ஹிட்டுதான். காமெடி ஷோவைப் பொறுத்தவரை கன்டென்ட் தூண்லயும் இருக்கும்; துரும்புலயும் கிடைக்கும். ஏன், அண்ணன்லாம் (ஒரு முறையாச்சும் மரியாதையாச் சொல்லிக்கறேன்) எதிர்ல இருக்கிறவன், பக்கத்துல இருக்கிறவனைத் தாண்டி தன்னிடமிருந்தெ கன்டென்ட் எடுப்பார்’ என கோதண்டைத்தைப் பார்த்துக் கண்ணடிக்கிறார்.

‘முல்லை’ தனசேகர் ‘குறிஞ்சி’ கோதண்டன்

`எப்படி செல்ஃப் கன்டென்ட்? –கோதண்டத்தைக் கேட்டால், ‘பாடி லாங்குவேஜைச் சொல்றான்’ எனச் சிரித்தவர், ‘`ஆனா ஒண்ணு சார்... `க.போ.யா’ ஷோவுக்குப் பிறகும் மக்கள் எங்களை மறக்கலைங்கிறதை நினைக்கிறப்பதான் நெகிழ்ச்சியா இருக்கு. சென்னையில சிட்டி பஸ்ல சுத்திக்கிட்டிருந்த நாங்க ஃபிளைட் ஏறி பத்து பதினைஞ்சு நாடுகளுக்குப் போயிட்டு வந்துட்டோம். சினிமா வாய்ப்புகள் வந்து நிறைய படங்கள்ல தலைகாட்டிட்டு வர்றோம். எங்ககிட்டயும் ஆட்டோகிராஃப், செல்ஃபினெல்லாம் மக்கள் வந்து கேக்கறப்ப சந்தோஷமா இருக்கு. அதேநேரம் நாங்க அடையுற இந்த சந்தோஷம் எங்களை மாதிரியே அங்கீகாரத்துக்கு முட்டி மோதிட்டிருக்கிற எல்லாருக்கும் கிடைக்கணும்கிறதுதான் எங்களுடைய பிரார்த்தனை, ஏன்னா, சமயங்கள்ல எல்லாருக்கும் இப்படியான சந்தர்ப்பங்கள் அமையறதில்லை. சிலர் அந்த சீஸனோட சரி, அதுக்குப் பிறகு இருக்கிற இடம் தெரியாம ஒதுங்கிடுறாங்க. சிலருக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் சரியா அமையாம முடங்கிடுறாங்க’’ என்றபடி சமீபத்தில் மரணமடைந்த வடிவேல் பாலாஜியை நினைவுகூர்ந்தார்.

`உங்க ரெண்டு பேருக்குமிடையில் சண்டையே வந்ததில்லையா?’ கடைசியில் அந்தக் கேள்வியையும் கேட்டுவிட்டோம்.

‘`என்னைவிட எட்டு வயசு சின்னவன். ஆனா என்னை `அவன்... இவன்...’, சமயத்துல `வாடா... போடா...’னுகூடச் சொல்வான். ‘பேசிட்டுப் போறான்’னு விட்டுடுவேன். ஆரம்பத்துல எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஷோ தந்தபோது எரிச்சல்பட்டோமே... அந்த ஒரு ஷோ ஹிட் ஆனதுக்குப் பிறகு எல்லாமே தலைகீழ். இப்ப எங்களுக்கிடையில இருக்குற பிணைப்பு அண்ணன் தம்பி டைப்பா, மாமு - மச்சானா அல்லது ஃப்ரெண்ட்ஷிப்பானு தெரியலை. ஆனா `கட்’டாகாத ஒரு பந்தமாகிடுச்சு. எங்க ரெண்டு பேரைப் போலவே எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்கிடையிலும் அந்த பந்தம் வந்திடுச்சு. என் மனைவி அவனுக்குச் சகோதரி. அவனுடைய மனைவி எனக்குச் சகோதரி. திருவண்ணாமலையில இருந்து வந்தவனும், சென்னைக்காரனும், `குஷி’ படத்துல ஹீரோ ஹீரோயின் சேர்வாங்களே... அந்த மாதிரி சேர்ந்துட்டோம்.

அதனால சண்டையெல்லாம் வந்ததில்லை. சண்டை வர்றதுக்கு நாங்க என்ன புருஷன் பொண்டாட்டியா? அப்படி இருந்தா, பிடிக்கலையா... டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிடலாமே! இது அதுவும் கிடையாதே...” என கோதண்டம் நிறுத்த, தொடர்ந்தார் முல்லை.

“நண்பர்களா இருந்தா ரெண்டு விஷயம்தான் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போடும். ஒண்ணு பணம். இன்னொன்னு ஈகோ.

பணத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு விஷயத்துல ஆரம்பத்துல இருந்து தெளிவா இருக்கோம். அமெரிக்காவோ அமிஞ்சிக்கரையோ ஷோவுக்குப் போனா ஒருத்தருக்குத் தெரியாம ஒருத்தர் போகக் கூடாது; அதேபோல அம்பது ரூபாய் கிடைச்சாலும் ஆளுக்குப் பாதிதான்’’ என்றார் இவர்.

ஈகோ..?

பெரும்பாலும் அடுத்தவங்க கிளறிவிடப் பார்ப்பாங்க. `அந்த ஷோவுல பார்த்தீங்கன்னா, அவரைவிட உங்க போர்ஷன் கொஞ்சம் தூக்கலா இருந்தது’னு வருவான், பாருங்க... ‘யூ கோ’னு சொல்லி அவனை விரட்டி விட்டுடுவோம்.’’