Published:Updated:

“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்!”

கே.என்.நேரு
பிரீமியம் ஸ்டோரி
கே.என்.நேரு

அத்தி வரதரை தரிசனம் செய்த கே.என்.நேரு உருக்கம்

“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்!”

அத்தி வரதரை தரிசனம் செய்த கே.என்.நேரு உருக்கம்

Published:Updated:
கே.என்.நேரு
பிரீமியம் ஸ்டோரி
கே.என்.நேரு

அத்திவரதர், நின்ற கோலத்தில் தரிசனம் தரவேண்டும்; அவரை மீண்டும் குளத்துக்குள் மூழ்கடிக்கக் கூடாது; அவர் திரும்பிப் போகும்போது என்னென்ன நிகழ்வுகள் ஏற்படும்... என அத்திவரதரை முன்னிறுத்தும் பரபரப்பான செய்தி வரிசையில், சமீபத்திய ட்ரெண்டிங் நியூஸ்... தி.மு.க மூத்த தலைவர் கே.என்.நேரு தன் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்திருப்பதுதான்!

“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்!”

மேலும், தரிசனப் புகைப்படங்களையும் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவேற்றிய கே.என்.நேரு, ‘என் தாயாக இருந்து என்னை தினமும் உற்சாகப்படுத்தும் என் பேத்தியுடன் அத்திவரதரைத் தரிசித்து மகிழ்ந்த தருணம்’ என்று நெகிழ்ந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, ‘பகுத்தறிவு பேசும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே, இதுபோன்று தன் பக்தியைப் பொதுவெளியில் வெளிப்படுத்தலாமா?’ என்றரீதியில் அனல் பறக்கும் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. இதையடுத்து கே.என்.நேருவின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்த அத்திவரதர் தொடர்பான படங்கள், பதிவுகள் நீக்கப்பட்டன. இந்த நிலையில் நேருவைத் தொடர்புகொண்டோம்.

‘‘நாங்கள், வைணவக் கடவுளான பெருமாளைக் கும்பிடுகிறவர்கள். ஸ்ரீரங்கநாதரும் திருப்பதி வெங்கடாசலபதியும் தான் எங்கள் குல தெய்வங்கள். அதனால் நான், என் மனைவி, என் தங்கை, தங்கையின் கணவர், பேத்தி என குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசிக்கச் சென்றிருந்தோம்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்!”

‘‘கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவுக் கொள்கை களைப் பேசும் தி.மு.க-வைச் சேர்ந்த மூத்த தலைவரான உங்களின் வெளிப்படையான பக்தி, கடும் விமர்சனத்துக்குள்ளாகியதே?’’

‘‘தீவிரமான கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டவர்கள் தி.மு.க-வில் இருந்தார்கள்தான். நெற்றியில் பொட்டு வைத்திருந்ததையே மிகக் கடுமையாக விமர்சித்தவர் கலைஞர். ஆனால், நாங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே சாமி குடும்பிடுகிறவர்கள். அதனால், அப்போதிருந்தே நான் சாமி கும்பிட்டுத்தான் வருகிறேன். என்ன... அது பெரிதாக வெளியே தெரியாது... இப்போது தெரிகிறது அவ்வளவுதான். சாமி குடும்பிடும் பழக்கத்தை நாங்கள் தவறாக நினைக்கவில்லை.’’

‘‘இதுவிஷயமாக தி.மு.க தலைமை உங்களைக் கண்டித்ததாகச் செய்திகள் வருகின்றனவே?’’

‘‘இல்லை. ‘ஆன்மிக நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்’ என்றே எங்கள் கட்சித் தலைவரும் கூறியிருக்கிறார். நாங்கள், என் தம்பி மரணம் உட்பட குடும்பரீதியாக நிறைய இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். இழந்தவையெல்லாம் எங்களுக்குக் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடனும் மன நிம்மதிக்காகவும்தான் நாங்கள் கடவுளை நாடிச் செல்கிறோம்.”

‘‘உங்களது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இருந்த தரிசனப் படங்கள் திடீரென நீக்கப்பட்டிருக் கின்றனவே?’’

‘‘ஃபேஸ்புக், ட்விட்டரில் என் புகைப்படங்கள் பதிவேற்றப் பட்டதும் எனக்குத் தெரியாது; அவை நீக்கப்பட்டதும் எனக்குத் தெரியாது. முத்தமிழ் கருணாநிதி என்கிற என் அபிமானி ஒருவர்தான் இணையத்தில் பதிவேற்றியிருக் கிறார். பின்னர் அவரே அதை நீக்கியும்விட்டார் என்று அறிந்தேன். எனக்கு ஃபேஸ்புக், ட்விட்டரிலெல்லாம் பதிவிடுவது எப்படி என்றுகூடத் தெரியாது.’’