Published:Updated:

`2023-ல் வரவிருக்கும் காதல்'; மூன்றாவது குழந்தை குறித்து அறிவித்த மார்க்!

மார்க் ஜுக்கர்பெர்க் - ப்ரிஸ்சில்லா சான் ( Mark Zuckerberg )

மார்க்கும், சானும் கல்லூரியிலிருந்தே காதலிக்கத் தொடங்கினர். 2003 -ல் ஹார்வர்டுபல்கலைக்கழகத்தின் கல்லூரி பார்ட்டியில் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர்

வீடு என்பதே அங்கு வசிக்கும் மக்கள்தானே. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு புதிய உறவை வரவேற்பதுதானே மகிழ்ச்சி. மெட்டா நிறுவனத்தின் சி. இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தன்னுடைய புதிய உறவை வரவேற்கத் தயாராக உள்ளதாக, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 மார்க் ஜுக்கர்பெர்க்
மார்க் ஜுக்கர்பெர்க்

டிசம்பர் 31-ம் தேதி, தன் மனைவி ப்ரிஸ்சில்லா சான் உடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்துகளுடன், 2023-ல் தங்களின் மூன்றாவது குழந்தையை வரவேற்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மார்க்கும், சானும் கல்லூரியில் இருந்தே காதலிக்கத் தொடங்கினர். 2003 -ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரி பார்ட்டியில் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

2012 மே 19-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த வருடம் தங்களின் இல்லற வாழ்வின் 10-வது ஆண்டை, திருமண நாளில் இருந்தது போலவே மீண்டும் உருவாக்கிக் கொண்டாடினார்கள். 

சான், குழந்தை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஏற்கெனவே மாக்ஸிமா சான் ஜுக்கர்பெர்க் மற்றும் ஆகஸ்ட் என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தைக்கான அறிவிப்பை 2015 டிசம்பர் மாதத்திலும், இரண்டாவது குழந்தையின் அறிவிப்பை 2017 ஆகஸ்ட் மாதத்திலும் மார்க் அறிவித்தார்.

தற்போது மூன்றாவது குழந்தையை வரவேற்க உள்ளதாக மார்க் அறிவித்ததில் இருந்து, இந்த இணையருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.