Published:Updated:

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

அண்ணாதுரை, ஸ்டாண்ட் அப் காமெடியன் சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாதுரை, ஸ்டாண்ட் அப் காமெடியன் சசிகலா

அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி. பட்டிமன்றப் புகழ், டி.வி புகழ் சசிகலாவோட புருஷன்னு சொல்லிக்கிறதுல எனக்குப் பெருமைதான்.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி. பட்டிமன்றப் புகழ், டி.வி புகழ் சசிகலாவோட புருஷன்னு சொல்லிக்கிறதுல எனக்குப் பெருமைதான்.

Published:Updated:
அண்ணாதுரை, ஸ்டாண்ட் அப் காமெடியன் சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாதுரை, ஸ்டாண்ட் அப் காமெடியன் சசிகலா

வேற மாதிரி... வேற மாதிரி...

‘ஆம்பிளை அழக்கூடாது’ என்பதில் தொடங்கி ‘உத்யோகம் புருஷ லட்சணம்’ என உரிமைகொண்டாடுவது, மனைவி பெயருக்குப் பின்னால் கணவன் பெயரைக் குறிப்பிடுவதுவரை இந்தச் சமூகம் காலங்காலமாக ஆணாதிக்க மனோபாவத்தை ஆழமாக விதைத்துவைத்திருக்கிறது.இவற்றையெல்லாம் தகர்க்க முற்படும் ஆண்கள் ‘வேறு மாதிரி’ முத்திரை குத்தப்படுவார்கள், கடும் விமர்சனத்துக்குள்ளாவார்கள்.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!
அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`சமூகமாவது, விமர்சனமாவது... எங்க குடும்பத்தார் சந்தோஷமும் அவங்க என்ன சொல்றாங்க என்பதும்தான் எங்களுக்கு முக்கியம்’’ என்கிறார்கள் ஆண்மைக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்த சிலர்.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!
அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

அண்ணாதுரை, ஸ்டாண்ட் அப் காமெடியன் சசிகலாவின் கணவர்

லாக்டௌனில்தான் பல வீடுகளிலும் ஆண்களுக்கு கிச்சன் இருக்கும் இடமே தெரிந்திருக்கிறது. வெந்நீர்கூட வைக்கத் தெரியாத ஆண்களை விருந்தே சமைக்கவைத்துப் புண்ணியம் தேடிக்கொண்டது கொரோனா. சிவகாசியைச் சேர்ந்த அண்ணாதுரை பல வருடங்களாக, தன்னை ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்பவர். ஸ்டாண்ட் அப் காமெடியன் சசிகலாவின் கணவரான அண்ணாதுரை, மனைவியின் வளர்ச்சிக்காகப் பல வருடங்களுக்கு முன்பே அந்தப் பட்டத்தைப் பெருமையோடு ஏற்றுக்கொண்டவர்.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!
அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

‘`எங்களுக்கு மூணு பிள்ளைங்க. மூணு பேருமே அம்மா பசிக்குதுன்னு சொன்னதா நினைவில்லை. அப்பா பசிக்குதுன்னுதான் சொல்வாங்க. இப்பவும் என் மனைவி நிகழ்ச்சிகள் இல்லாம வீட்டுல இருந்தாலும்கூட, பிள்ளைங்க ‘அப்பா, சோறு வெச்சுக்கொடுங்க’ன்னுதான் கேட்பாங்க....’’ சண்டே சமையலில் பிசியாக ஈடுபட்டவாறே பேசுகிறார் அண்ணாதுரை.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

‘`நான் எட்டாவதுதான் படிச்சிருக்கேன். என் மனைவியும் நானும் சொந்தக்காரங்க. திருப்புவனத்துல மளிகைக்கடை வெச்சிருந்தேன். கல்யாணமான புதுசுல கடையை சரியா பார்த்துக்காம விட்டுட்டேன். அதனால கடையை மூடிட்டு சிவகாசிக்கு வந்துட்டோம். நான் அச்சாபீஸ்லயும் என் மனைவி ஸ்போக்கன் இங்கிலிஷ் டீச்சராகவும் வேலை பார்த்திட்டிருந்தோம். அப்புறம் வீட்டோடு சேர்ந்த மாதிரி ஒரு கடையைப் போட்டு அதைப் பார்த்திட்டிருந்தேன். ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்பு, பட்டிமன்றங்கள்ல பேசுறதுன்னு மனைவி ஒரு கட்டத்துல ரொம்ப பிசியாக ஆரம்பிச்சாங்க. காலையில சமைச்சு முடிச்சிட்டு அவசரம் அவசரமா வேலைக்கு ஓடுவாங்க. பலநாள் சாயந்தரம் வேலை முடிஞ்சு நேரா பட்டிமன்றம் பேசப் போயிடுவாங்க. மறுநாள் காலையிலதான் வீட்டுக்கு வருவாங்க. அவங்களுக்கு நேரமில்லாததால சமையல் உட்பட வீட்டு வேலைகள் எல்லாத்தையும் நானே பார்க்க ஆரம்பிச்சேன்.

ஒரு மாதிரியா பார்க்குறது, பேசறதுன்னு எல்லாம் நடந்திருக்கு. ‘என் பொண்டாட்டி வேலைக்குப் போறா. அவ சம்பாதிச்சுதானே எங்களையெல்லாம் பார்க்குறா... அவளுக்கு நான் செய்யறேன், உங்களுக்கென்ன?’ன்னு கேட்ருவேன்.

மனைவிக்கும் பிள்ளைங்களுக்கும் என்ன பிடிக்கும், எப்படிச் செய்தா பிடிக்கும்னு எனக்கு அத்துப்படி, அதனால சூப்பரா சமைச்சிடுவேன். வாஷிங் மெஷின்ல துணி போட்டு எடுக்கறது, பாத்திரம் தேய்க்கிறது, வாசல்கூட்டிக் கோலம் போடறதுன்னு எல்லா வேலைகளையும் நான்தான் பார்த்துக்கறேன். கிட்டத்தட்ட 18 வருஷங்களா இப்படித்தான். இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் மனைவி என்னையும் பிள்ளைங்களையும் பிரிஞ்சு, பலநாள் வீட்டுக்கே வராம உழைக்கிறாங்க. பட்டிமன்றத்துல பேசறதோ, ஸ்டாண்ட் அப் காமெடியனா நிகழ்ச்சிகள் பண்றதோ சாதாரண வேலையில்லை. அதுக்காக அவங்க குறிப்புகள் எடுக்கணும். மனசளவுல மற்ற வேலை டென்ஷன் இல்லாம இருந்தாதான் வெளியில அவங்களால ஜெயிக்க முடியும். அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி. பட்டிமன்றப் புகழ், டி.வி புகழ் சசிகலாவோட புருஷன்னு சொல்லிக்கிறதுல எனக்குப் பெருமைதான்.’’

மனைவிக்குப் பிடித்த மீன் வறுவலைப் பதம் பார்த்தபடி விடைகொடுக்கிறார் அண்ணாதுரை.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

ஹிமான்ஷு வர்மா, Saree Man

பெண்களின் அழகு உடை சேலை என கேள்விப்பட்டிருக்கிறோம். டெல்லியைச் சேர்ந்த ஹிமான்ஷு வர்மா ஆணுக்கும் சேலை அழகு என கம்பீரம் காட்டுகிறார். டெல்லியைச் சேர்ந்த கலை ஆர்வலரான இவர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சேலைத்திருவிழா நடத்துபவர்.

‘`2005-ம் வருஷம்... என்னுடைய ஆர்ட் ஆர்கனைசேஷன் நிகழ்ச்சியிலதான் முதன்முதலா சேலை கட்டினேன். சும்மா ஓர் ஆர்வத்துல கட்டிப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருச்சு. ஓர் ஆண் சேலை கட்டினா இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும், என்னவெல்லாம் பேசும்னு சொல்லணுமா என்ன? நானும் அதையெல்லாம் எதிர்கொண்டேன். ஆனா அதைப் பத்தியெல்லாம் கவலையில்லை’’ என்று சொல்லும் ஹிமான்ஷுவிடம் 250 ப்ளஸ் சேலைகள் இருக்கின்றனவாம்.

‘`நான் முதல்முறை சேலை உடுத்தினபோது எங்க வீட்டுல உள்ளவங்க முகம் சுளிக்கலை, கிண்டல் பண்ணலை. ‘நல்லா இருக்கு’ன்னு பாராட்டினாங்க. சேலை உடுத்தினா பெண்மையோடு காட்சியளிப்போம்னு யார் சொன்னது? சிலநாள் க்ளீன் ஷேவ், பல நாள் தாடி, மீசைன்னு எனக்கு என்ன தோணுதோ, அந்த கெட்டப்புலதான் சேலை உடுத்தறேன்’’ என்கிறார்.

அடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்!

அபிஷேக், ஹஸ்பண்ட் ஆஃப் கர்மின் போட்

டந்த சில தலைமுறை வரை குழந்தைக்கு அப்பா பெயரின் முதலெழுத்தே இனிஷியல் என எழுதப்படாத சட்டம் இருந்தது. காலப்போக்கில் போனால் போகட்டும் என்று அதில் அம்மா பெயரின் முதலெழுத்தையும் சேர்த்துக்கொள்ள அனுமதித்தார்கள். மும்பையில் வசிக்கும் பத்திரிகையாளர் அபிஷேக், ஒருபடி மேலே போய் தன் மனைவி பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக்கொண்டுள்ளார்.

‘`2013-ல எங்களுக்குக் கல்யாணமாச்சு. நான் மகாராஷ்ட்ரியன். என் மனைவி கர்மின் போட், பார்சி இனத்தைச் சேர்ந்தவங்க. ரெண்டு பேரும் மும்பை மிரர் பத்திரிகையில வேலை பார்த்திட்டிருந்தோம். பழகினோம். கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தபோது அவங்ககிட்ட நான் சொன்ன முதல் விஷயம், ‘உன் பெயரை என் பெயரோடு சேர்த்துக்கிறதுல ஏதாவது ஆட்சேபனை இருக்கா’ங்கிறதுதான். ‘ஏன்?’னு கேட்டாங்க. என் மனைவி மட்டுமல்ல, இந்த முடிவைக் கேட்ட பலரும் ‘ஏன்?’னுதான் கேட்டாங்க. அத்தனை பேருக்கும் ‘ஏன் கூடாது’ன்னு திரும்பக் கேட்டேன். சத்தியமா அந்த முடிவின் பின்னணியில எந்த அரசியலும் இல்லை. எனக்கு என் மனைவியை அவ்வளவு பிடிக்கும். அதைத் தவிர என்கிட்ட வேற காரணமில்லை. நான் காலேஜ்ல பெண்ணியத்தை ஒரு சப்ஜெக்ட்டா படிச்சவன்தான். இதைப் பெண்ணியம்னு சொல்றவங்களுக்கு என் பதில் யெஸ்... சம உரிமைன்னு சொல்றவங்களுக்கும் அதே பதில்தான்.

2013-ல் கல்யாணம் முடிஞ்சதுமே நான் மனைவி பெயரைச் சேர்த்துக்கிட்டேன். கெஸட்லயும் என் பெயரை மாத்திட்டேன். ஆனா கிட்டத்தட்ட நாலு வருஷங்கள்வரை அது யாருக்கும் தெரியாது. தெரிஞ்ச நெருங்கிய நண்பர்கள் அதைப் பத்தி ஒரு வார்த்தைகூடக் கேட்கலை. ஒருமுறை என் மனைவி, ‘என் கணவர் என் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார்’னு ஒரு கட்டுரை எழுதினாங்க. அப்புறம்தான் அது வெளியில தெரிஞ்சது. என்னுடைய இந்த முடிவு பெண்ணியப் பார்வையில பல விஷயங்களைப் பேசக் காரணமா இருக்குன்னா சந்தோஷம்தான்” என்கிறார் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism