கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

டிடி என்னுடைய நல்ல நண்பர். ஒரு போட்டோஷூட் பண்ணலாம்னு சொன்னபோது, ஓணம் வருது அதுக்காக பண்ணலாம்னு பிளான் பண்ணி ஆரம்பிச்சோம்.

சினிமா, மாடலிங், பிராண்டிங், ஃபேஷன் என எல்லாப் பக்கமும் போட்டோகிராபர் சுதர்ஷனின் பெயர் நன்கு பரிச்சயம். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் எனப் பயணித்துக்கொண்டிருக்கும் இவரின் கேமராதான் நாம் பார்த்து ரசிக்கும் பல படங்களின் போஸ்டர்களைப் படம் பிடித்திருக்கிறது. சமீபமாக, ‘ஜெய் பீம்’ படத்தின் போஸ்டர்கள் செம வைரலாகின. எண்ணற்ற புகைப்படங்களை விதவிதமான லைட்டிங்கில் காட்சிப்படுத்திய சுதர்ஷன், தான் எடுத்த சில புகைப்படங்களையும் அவற்றின் பின்னால் நடந்த சுவாரஸ்யமான தருணங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

பிந்து மாதவி

சென்னையில ‘Aqaab'னு ஃபேஷன் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. அவங்களுடைய வொர்க் என்னவெல்லாம்னு காட்டுறதுக்காக ஒரு செலிபிரிட்டிய வெச்சு ஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. ஸ்டைலிஸ்ட் சைதன்யா ராவ்தான் பிந்து மாதவியைக் கூட்டிட்டு வந்தாங்க. அப்போதான் எனக்கு அவங்க அறிமுகம். அந்த ஃபேஷன் ஸ்கூலுக்கு ஏத்த மாதிரி ஸ்டைலிங் எல்லாம் பண்ணி ஷூட் பண்ணினோம். இந்த ஷூட்டைப் பொறுத்தவரை ஸ்டைலிங்ல நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

டிடி

டிடி என்னுடைய நல்ல நண்பர். ஒரு போட்டோஷூட் பண்ணலாம்னு சொன்னபோது, ஓணம் வருது அதுக்காக பண்ணலாம்னு பிளான் பண்ணி ஆரம்பிச்சோம். டிடி வீட்லதான் எடுத்தோம். கொஞ்சம் அவுட் ஆஃப் போகஸ்ல ஊஞ்சல் தெரியுற மாதிரி, முன்னாடி உட்கார்ந்து பெரிய மேக்கப், நகைகள் எல்லாம் இல்லாமல் ஒரு மூக்குத்தி, சின்னதா கம்மல் போட்டு கொஞ்சம் லைட் கலர்ல புடவையில எடுத்தோம். இதுதான் எனக்கான ஸ்டைலா வெச்சிருக்கேன். அவங்களுக்கு இது ரொம்பப் பிடிச்சிருந்தது. டிடி கூட வொர்க் பண்ணும்போது ஃபன் நிறைய இருக்கும்.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

யுவன் ஷங்கர் ராஜா

ஜீ தமிழ் சேனல்ல ஒரு ஷோவுக்குப் போகும்போது பண்ணுன ஷூட் இது. நான் ஏற்கெனவே அவரை வெச்சு போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன். அந்தப் பழக்கத்துல என்னை ஜீ டீமுக்கு அறிமுகப்படுத்தி என்னைக் கூப்பிட்டச் சொன்னது அவர்தான். அவங்க மனைவிதான் ஸ்டைலிங் பண்ணினாங்க. ரொம்ப வேகமா பண்ணின ஷூட். யுவனுக்கு ஒருத்தரைப் பிடிச்சுடுச்சுன்னா, அவங்களை முழுமையா நம்பி அவங்க பொறுப்புல விட்டுடுவார். ‘இரும்புத்திரை' போட்டோஷூட் நான்தான் பண்ணியிருந்தேன். அதைப் பார்த்துட்டு யுவன் சார் டீம்ல இருந்து பேசினாங்க. ‘NGK' அறிவிப்புக்காக ஒரு போட்டோ ஷூட் பண்ணணும்னு சொன்னாங்க. சரின்னு அவர் ஸ்டூடியோவுக்குப் போனேன். குறைவான நேரத்துல நல்ல போட்டோ ஷூட்டா அமைஞ்சது. அது பிடிச்சுதான், இந்த ஷூட் பண்ணக் கூப்பிட்டார். இன்ஸ்டாகிராம்ல நான் இவர் போட்டோவை ஷேர் பண்ணியிருந்தப்போ, யுவன் சார் ‘நான் உனக்கு ரொம்பக் குறைவான நேரம்தான் கொடுத்தேன். அடுத்த முறை, நிறைய டைம் தர்றேன்'னு கமென்ட் பண்ணியிருந்தார். என்னுடைய பலம் என்னன்னு அந்த ஷூட்லதான் எனக்கே தெரிஞ்சது. எவ்வளவு அவசரமா வேணாலும் எடுக்கலாம். ஆனா, அந்த அவசரம் அவுட்புட்ல தெரியக்கூடாது. அதுதான் என்னை பிரபாஸ் வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

சுனைனா

சுனைனா தமிழ்ல படங்கள் பண்றாங்களா இல்லையான்னு பேச்சு போய்க்கிட்டிருந்தது. அப்போ ஒரு போர்ட்ஃபோலியோ பண்ணலாம்னு அணுகினாங்க. அப்போ அவங்க தங்கியிருந்த ஹோட்டல்ல எடுத்த போட்டோஷூட் இது. நாலஞ்சு லுக்ல எடுத்தோம். போட்டோஷூட் முடிக்கும்போது, அவங்க போட்டிருந்த நகைகள் எல்லாத்தையும் கழட்டிட்டு இருந்தாங்க. அந்தச் சமயத்துல எடுத்த போட்டோ இது. அது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ஷர்ட் போட்டு வேக் அப் லுக்ல பண்ணிருந்தேன். அந்தப் போட்டோ சோஷியல் மீடியாவுல செம ரீச்! அடுத்து இன்னொரு ஷூட் பிளான் பண்ணிக்கிட்டிருக்கோம்.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

நிவேதா பெத்துராஜ்

நிவேதாவுக்கு நான் பண்ணின முதல் ஷூட். இன்ஸ்டாகிராம்ல என் வொர்க் பார்த்துட்டு என்னை ஃபாலோ பண்ணியிருக்காங்க. ஒரு நாள் ஏதோ ரெஸ்டாரண்ட்ல யதார்த்தமா சந்திக்கும்போது ஹாய் சொல்லிப் பேச ஆரம்பிச்சோம். போட்டோஷூட் ஐடியா கேட்டாங்க. எனக்கு இவங்களை ஒரு தென்னிந்தியப் பெண் பேட்டர்ன்ல தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு எந்தத் தனிப்பட்ட உணர்வுமில்லாமல் பொதுவா ஒரு லுக்ல பண்ணணும்னு தோணியிருக்கு. இந்த லுக் பார்த்தால் ஒரு வகையில பெங்காலி உணர்வு வரும். அவங்க வீட்லேயே ஷூட் பண்ணினோம்.

நடன இயக்குநர் சதீஷ்

‘ஹீரோ' படத்துடைய செட்ல எடுத்தது இந்தப் போட்டோ. ‘அபய் தியோல் சார் வர கொஞ்சம் லேட்டாகும். நீ எல்லாம் ரெடியா வெச்சிரு'ன்னு மித்ரன் சொல்லிட்டார். ஆறு மணிக்கே நான் எல்லாம் செட் பண்ணி ரெடியாகிட்டேன். அப்போதான் சதீஷ் வந்தார். ‘நீ என்னடா பண்ணிக்கிட்டிருக்க இங்க?'ன்னு கேட்டார். ‘6 மணிக்கே கடையைத் திறந்துட்டேன். யாருமே வரலை'ன்னு நான் சொன்னதும், ‘சரி, என்னைப் போட்டோ எடு'ன்னு சொல்லி வந்து நின்னார். அப்போ அவருக்கு ஜாலியா போட்டோஷூட் பண்ணிக்கொடுத்தேன்.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!
ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

அருண் விஜய்

‘பாக்ஸர்' படத்துடைய ஷூட். இந்த மேக்கப் பண்ணி ஹேர் ஸ்டைல் பண்ணவே ஆறு மணி நேரமாகிடுச்சு. காலையில 9 மணிக்கு முதல் ஷாட் எடுக்கணும்னு பிளான் பண்ணினோம். ஆனா, 4 மணிக்குத்தான் முதல் ஷாட் எடுத்தோம். இந்தப் போட்டோ பார்த்துட்டே ரெண்டு, மூணு மொழியில படத்தை வாங்க முன்வந்தாங்கன்னு சொன்னாங்க. இந்தப் படத்துக்காக அவ்வளவு மெனக்கெட்டிருக்கார். படம் சீக்கிரம் வரணும். இதுக்குன்னு ஒரு பாக்ஸிங் ரிங் தயார் பண்ணி விதவிதமான போட்டோக்கள் எடுத்தோம். இந்தப் போட்டோஸ் பார்த்துட்டு ‘சார்பட்டா' ஷூட் பண்ணக் கூப்பிட்டாங்க. ஆனா, மிஸ் ஆகிடுச்சு.

ஆல் ஃபேமஸ் ஆல்பம்!
ஆல் ஃபேமஸ் ஆல்பம்!
ஆல் ஃபேமஸ் ஆல்பம்!

ஷ்ரத்தா கபூர்

இது ‘சாஹோ’ ஷூட்டிங்ல எடுத்தது. ஆஸ்ட்ரியாவுல ரெட் புல் ஃபேக்டரில எடுத்த இந்த ஷாட்டை மறக்கவேமாட்டேன். அந்த இடத்துல ரெட் புல் ஓனர்களுடைய சின்னச்சின்ன ஃப்ளைட்டுகள் நிற்கும். போர் அடிச்சா அதை எடுத்துக்கிட்டு அவங்க ஜாலியா சுத்துவாங்களாம். அங்க ‘சாஹோ’ படத்துடைய ஒரு பாடலை ஷூட் பண்ணினாங்க. அதுல பிரபாஸ் சாரும் ஷ்ரத்தா கபூர் மேமும் வருவாங்க. பார்க்கவே செம சீனா இருக்கும். அந்த ஷூட்டுக்கு இடையில, ஷ்ரத்தா மேம்கிட்ட போஸ் பண்ண சொல்லி சொன்னேன். அவங்க வேகவேகமா நிறைய போஸ் பண்ணினாங்க. காருக்கு உள்ள, வெளியிலனு நிறைய எடுத்தேன். ஆனா, இந்த போட்டோக்களை அவங்களுக்கு கொடுக்கவேயில்லை. ஷ்ரத்தா மேமுடைய பிறந்தநாளுக்கு நான் ரிலீஸ் பண்ணினேன். இந்த போட்டோதான் பாலிவுட்டுக்கும் சென்னையில இருக்கிற பெரிய ஹீரோயின்களுக்கும் என் மீது கொஞ்சம் கவனம் வர காரணமா இருந்தது என் அம்மா.

லாக்டெளன்ல போட்டோ எடுக்க முடியலையேன்னு அப்செட்ல இருந்தேன். அப்போ அம்மா, ‘யார்யாரையோ போட்டோ எடுக்கிற. என்ன எடுக்கமாட்டியா?’ன்னு கேட்டாங்க. அப்படி வீட்டு பால்கனில எடுத்த போட்டோதான் இது. நான் ஷேர் பண்ணினதும் நிறைய பேர் ‘யார், யார்’னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா இந்தப் போட்டோவைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. போட்டோகிராபர் ஆகணும்னு நினைக்கிறவங்ககிட்ட சொல்றது ஒண்ணுதான். தினமும் ஒரு போட்டோவாவது எடுங்க. அப்படிப் பண்ணினாதான் கிரியேட்டிவ் சென்ஸ் வளரும்.