Published:Updated:

போன முறை உடை, இந்த முறை சிகரெட்... பிரியங்கா சோப்ராவை தொடரும் ட்ரோல்!

ஆ.சாந்தி கணேஷ்

'' 'புகைபிடித்தல் மோசமானது. அது அசிங்கம்' ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ட்விட் செய்திருந்தீர்களே...''

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா ( Twitter )

பிரியங்கா சோப்ராவுக்கும் ட்ரோலுக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி. மெட் காலாவில் அவர் அணிந்துவந்த உடைக்காக கன்னாபின்னாவென ட்ரோல் செய்யப்பட்டவர் தற்போது, குடும்பத்துடன் புகைபிடித்து, கையும் சிகரெட்டுமாக நெட்டிசன்களிடம் சிக்கியிருக்கிறார்.

ட்ரோல்
ட்ரோல்
twitter.com

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, தன்னுடைய 37-வது பிறந்த நாளை அமெரிக்காவில் உள்ள மியாமி நகரத்தில் குடும்பத்துடன் கொண்டாடியிருந்தார் பிரியங்கா சோப்ரா ஜோனஸ். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக படகு சவாரி செல்கையில், பிரியங்கா சிகரெட் பிடிக்கிறார். அவருடைய அம்மா மது சோப்ராவும் கணவர் நிக்கும் சிஹார் பிடிக்கிறார்கள். பிரியங்கா சோப்ராவை இந்த முறை நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதற்கு இந்தப் படம்தான் காரணம்.

இவர், சென்ற வருட தீபாவளியின்போது, 'யாரும் பட்டாசு வெடிக்காதீர்கள். அது, என்னைப்போன்ற ஆஸ்துமா நோயாளிகளைத் துன்பப்படுத்தும். நான் 5 வயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டுவருபவள்' என்று ட்விட் ஒன்றை போட்டிருந்தார். ஆனால், சென்ற வருட இறுதியில் நடந்த பிரியங்கா - நிக் திருமணத்தில், வான வேடிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. இதோ, தற்போது இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறது, பிரியங்காவின் சிகரெட் பிடிக்கும் புகைப்படம்.

ட்ரோல்
ட்ரோல்
twitter.com

'' 'புகைபிடித்தல் மோசமானது. அது அசிங்கம்' என ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ட்விட் செய்திருந்தீர்களே... அப்படியென்றால் இது என்ன'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒருவர்.

''நீங்கள் ஒரு ஃபேக். போலித்தனம் நிறைந்தவர். ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும்போது பட்டாசு, புகை பகை என்றெல்லாம் ட்விட் செய்தீர்கள். இப்போது, சிகரெட் புகை உங்களைப் பாதிக்கவில்லையா; உங்கள் திருமணத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கவில்லையா'' என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

பிரியங்காவுக்கு ஆதரவான ட்விட்
பிரியங்காவுக்கு ஆதரவான ட்விட்
twitter.com

''இது உங்கள் வாழ்க்கை; உங்கள் விருப்பம். ஆனால், வெளியுலகத்துக்கு ஒரு முகமும் பர்சனலாக இன்னொரு முகமும் ஏன் காட்டுகிறீர்கள்'' என்று ஒரு நெட்டிசன் விமர்சிக்க, ''பெண்கள், அவர்களுடைய விருப்பங்களை ட்ரோலில் சிக்காமல் செய்யவே முடியாதா? பிரியங்கா அந்த ட்விட்களை போட்டபோது, சிகரெட் பழக்கமில்லாதவராக இருந்திருக்கலாம். தற்போது பழகியிருக்கலாம். அவர் இந்தியாவின் முக்கியமான நபர். அவரை நிம்மதியாக இருக்கவிடுங்கள். நம்முடைய வாகனங்கள் விடுகிற புகை தராத பிரச்னையையா அந்த மூன்று பேர் பிடிக்கிற சிகரெட் புகை தந்துவிடப்போகிறது'' என்று இன்னொருவர் வக்காலத்து வாங்கியிருக்கிறார்.