Published:Updated:

`பாலிவுட் நட்சத்திரங்களின் போதை ஆட்டம்?' - ட்விட்டரில் சீறிய அகாலிதளம் எம்.எல்.ஏ,.

ராம் பிரசாத்

Saturday Night vibes என்ற கேப்ஷனுடன் கரன் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்கள்
பாலிவுட் நட்சத்திரங்கள்

பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்ட`வீக் எண்டு பார்ட்டி'யில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலிவுட் நடிகர் கரன் ஜோஹர் அளித்த வீக் எண்டு பார்ட்டியில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், ஷாகித் கபூர், வருண் தவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் பயோபிக்கான `83’ படத்தில் ரன்வீர் சிங் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்துவருவதால் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை. ரன்பீர் கபூரின் காதலி அலியா பட்டும் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதனால், ரன்வீர் கபூர் மட்டும் தனியாகப் பார்ட்டிக்கு வந்திருந்தார். ஷாகித் கபூர் தன் மனைவி மிரா ராஜ்புத்துடன் கலந்துகொண்டார்.

வீக் எண்ட் பார்ட்டியில் பாலிவுட் நட்சத்திரங்கள்
வீக் எண்ட் பார்ட்டியில் பாலிவுட் நட்சத்திரங்கள்

இந்தக் கொண்டாட்டத்தை `Saturday Night vibes' என்ற கேப்ஷனுடன் கரன் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்.எல்.ஏ மன்ஜிந்தர் சிங் தனது ட்விட்டர் பதிவில், `பாலிவுட்டின் ஃபிக்‌ஷன் vs ரியால்டி, பாலிவுட்டின் உயர்ந்த மற்றும் மதிப்புமிக்கவர்கள் தங்கள் போதை ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் எனப் பாருங்கள். இந்த நட்சத்திரங்களின் போதைப் பயன்பாட்டுக்கு எதிராக எனது குரலை உயர்த்துவேன். நீங்களும் இதைத் தவறு என உணர்ந்தால் ரீ ட்வீட் செய்யுங்கள்' எனப் பதிவிட்டார்.

அவரது ட்விட்டர் பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். `அரசியல்வாதிகள் தேவையில்லாமல் அடுத்தவர்களின் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார்கள்' எனச் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அகாலிதளம் எம்.எல்.ஏ-வின் ட்வீட்டுக்கு எதிராகவும் பாலிவுட் பிரபலங்களுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், ` என் மனைவியும் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அவரும் அந்த வீடியோவில் இருக்கிறார். அங்கு யாரும் போதை நிலையில் இல்லை. தயவுசெய்து பொய்களைப் பரப்புவதை நிறுத்துங்கள். உங்களுக்கு தெரியாத நபர்கள் குறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள். இதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.