Published:Updated:

நானும் நம்மாழ்வாரும்!

நல்லக்கண்ணு
பிரீமியம் ஸ்டோரி
நல்லக்கண்ணு

ஆர்.நல்லக்கண்ணு மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

நானும் நம்மாழ்வாரும்!

ஆர்.நல்லக்கண்ணு மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

Published:Updated:
நல்லக்கண்ணு
பிரீமியம் ஸ்டோரி
நல்லக்கண்ணு

‘பசுமை விகடன்’, 13-வது ஆண்டில் 300-வது இதழாக மலரவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பசுமை விகடன் இதழ் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருடன் நானும் கலந்துகொண்டேன். பசுமை விகடன் உணவு உற்பத்திக்கு வித்திடுவதோடு, செடி கொடிகள், காய்கறிகள், சிறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடி முறைகளையும் பரப்பி வருகிறது. பசுமைப்புரட்சியின் விளைவால் ஆரம்பத்தில் உற்பத்தி பெருகினாலும் போகப்போக உற்பத்தி குறைந்து, ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து மண்ணின் வளம் அழிந்து வருகிறது. இந்தச் செய்திகளை ஆதாரத்துடன் மக்களிடையே பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, பசுமை விகடன்.

நானும் நம்மாழ்வாரும்!

இந்தியாவின் பெரும்பகுதி மக்கள், விவசாயத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள். கிராமங்கள் விவசாயத் தொழிலின் அடிநாதமாக இருந்து வருகின்றன. மாறிவரும் காலநிலை, பருவநிலை மாற்றம் ஆகியவை, விவசாய உற்பத்திக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள், விவசாயிகள். வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி உற்பத்திச் செலவோடு 50 சதவிகித கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.

கரும்பு உற்பத்தி, நெல் உற்பத்தி, காய்கறி உற்பத்தி என்று ஒவ்வொரு பொருளுக்கும் உற்பத்தி முறையும் அதற்கான செலவினங்களும் வேறுபடுகின்றன. இப்படி உற்பத்திக்கான விலை கிடைக்காததாலும், பருவநிலை மாற்றத்தால் போதிய தண்ணீர் கிடைக்காததாலும் விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன. உற்பத்தியைப் பெருக்கிய விவசாயிகள், விலை கிடைக்காமல் விவசாயத்திலிருந்து வெளியேறினால், அது கிராமங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும். உணவுதான் மக்களின் அச்சாணி. அந்த அச்சாணி முறிந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தவும், இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும் பசுமை விகடன் முயல வேண்டும்.