Published:Updated:

"நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் பூரண குணமடைவேன்!"- தன் உடல்நலப் பிரச்னை குறித்து சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

"நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் பூரண குணமடைவேன்!"- தன் உடல்நலப் பிரச்னை குறித்து சமந்தா

நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘யசோதா’. தமிழ், தெலுங்கு. கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ஹரி & ஹரீஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரைத் தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தியில் வருண் தவான் என முன்னணி ஹீரோக்கள் வெளியிட்டனர். இதனிடையே நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில் “'யசோதா' டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் உறவும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து, குணமடைந்த பிறகு உங்களிடம் பகிரலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், குணமாவதற்கு நான் எதிர்பார்த்ததை விடச் சற்று அதிக நாள்கள் எடுத்துக்கொள்கிறது. நாம் எப்போதும் நம் முழு இருமாப்புடன் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் என்பதில்லை. இருக்கும் பிரச்னையை ஏற்றுக்கொள்வதுதான் எனக்கு இன்னும் கடினமான ஒன்றாக இருக்கிறது. நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு நல்ல நாள்களும் இருந்தன, மோசமான நாள்களும் இருந்தன. சில சமயம், இனி ஒரு நாள் கூட என்னால் தாங்க முடியாது என்றெல்லாம் கூட எண்ணியிருக்கிறேன். எப்படியோ அத்தகைய எண்ணங்கள் கடந்துவிடுகின்றன. இதனால்தான் நான் குணமடையும் நாளை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்... இதுவும் கடந்து போகும்!" எனப் பதிவிட்டுள்ளார்.