தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்படக் கூடியவர். 22 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். சமந்தாவின் அசர வைக்கும் புகைப்படங்களுக்காகவும், அவ்வப்போது கமென்ட்களில் உரையாடும் அவரது வழக்கத்துக்ககவும் பலர் சமந்தாவை பின் தொடர்கின்றனர்.
சமீபத்தில் தன் கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட மண முறிவு சமந்தாவை வெகுவாக பாதித்திருந்த நிலையில், தன் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, தன்னை தொடர்புபடுத்தி யாரும் தேவையில்லாதவற்றை உரையாட வேண்டாம் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்திருந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்தில் வெளியான `புஷ்பா' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடிய சமந்தாவை ரசிகர்கள் ஏகபோகமாக புகழ்ந்து தள்ளியது நாம் அறிந்ததே. மண முறிவுக்குப் பிறகு, இந்த வரவேற்பு சமந்தாவுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சமந்தா சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த பச்சை நிற கவுன் சமூக வலைதளங்களில் வைரலானதுடன், பேசுபொருளானது. பலரும் அவரது ஆடை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ``சமூகத்தால் எடை போடப்படும் போக்கை, ஒரு பெண்ணாக நான் நேரடியாக அறிவேன். ஒரு பெண்ணை அவளது இனம், உடை, தோலின் நிறம், சமூக அந்தஸ்து, கல்வி நிலை ஆகியவற்றை வைத்து மதிப்பிடுவது மிகவும் எளிதான காரியம்.
2022-ம் ஆண்டை நாம் அடைந்த போதிலும் கூட, ஒரு பெண்ணை அவளது உடைகளின் அம்சத்தை வைத்து மதிப்பிடுவதை நாம் செய்து வருகிறோம். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளின் மீது கவனம் செலுத்துவோம்" என்று கூறியுள்ளார்.சமந்தா

மேலும், ``இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்வதே பரிணாம வளர்ச்சி. ஒருவரை நாம் புரிந்துகொள்வது மற்றும் அளவிடுவதன் காரணிகளை நாம் மாற்றி எழுதுவோம்'' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, `திரைப்படங்கள் வெளியாகும் தேதி நெருங்கியவுடன் நடிகைகளின் ஆடைகளின் அளவுகள் மாறுபடம்' எனக் கருத்து தெரிவித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் கருத்துக்கு நடிகை தீபிகா படுகோன் பதிலடி கொடுத்தது நினைவுகூரத்தக்கது.