Published:Updated:

நிறைமாத வயிறு, பிகினி டிரெஸ், தண்ணீருக்குள் போட்டோஷூட்..! - தாய்மையைக் கொண்டாடும் சமீரா

நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தன் நிறைமாத வயிறு தெரியும்படியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் க்ளாப்ஸ்ஸை அள்ளி வருகின்றன.

சமீரா ரெட்டி
சமீரா ரெட்டி ( face book )

கர்ப்பகாலத்தைக் கொண்டாடும் விதமாகவும், அதன் நினைவுகளைப் புகைப்படங்களாகப் பதிவுகளாக்கும் விதமாகவும் ரகரகமான ஆடைகள் மற்றும் ரசனையான போஸ்களில் எடுக்கப்படும் 'ப்ரெக்னன்ஸி போட்டோகிராபி' இப்போது டிரெண்ட். நடுத்தர வர்க்க பெண்கள்கூட தற்போது 'ப்ரெக்னன்ஸி போட்டோகிராபி'யில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தன் நிறைமாத வயிறு தெரியும்படியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் க்ளாப்ஸ்ஸை அள்ளி வருகின்றன.

'ப்ரெக்னன்ஸி ஃபோட்டோகிராஃபி
'ப்ரெக்னன்ஸி ஃபோட்டோகிராஃபி
face book

'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்றவர் சமீரா ரெட்டி. 2014-ம் ஆண்டு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு, திரைத்துறையை விட்டு ஒதுங்கினார். இப்போது தன் இரண்டாவது குழந்தையைக் கருவில் சுமக்கும் சமீரா, சில வாரங்களாகவே கர்ப்பகால புகைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டிவந்தார். அதில் லேட்டஸ்ட்டாகத் தன்னுடைய கர்ப்பகால உடலின் புகைப்படங்களை பிகினி ஆடைகளில் #imperfectlyperfect என்ற ஹேஷ்டாக்குடன் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். 

'நான் என் நிறைமாத வயிற்றின் அழகை கொண்டாட விரும்புகிறேன். இந்த ஒன்பதாவது மாதம் பயம், சோர்வு உட்பட சில பாதிப்புகளும், அதே நேரம் நம் அளவும் அழகும் அதிகரிக்கக்கூடிய மாதம். என் இந்தப் புகைப்படங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

எல்லா காலகட்டங்களிலும் நம்மை, நம் உடலை நாம் நேசிக்க வேண்டும்
சமீரா

நம் வாழ்வில் நாம் அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கு ஏற்ற நமக்கான பிரத்யேக உடல் அளவுகளுடன் இருக்கிறோம். எல்லா காலகட்டங்களிலும் நம்மை, நம் உடலை நாம் நேசிக்க வேண்டும். #imperfectlyperfect' எனப் பதிவிட்டுள்ளார் சமீரா.

2015-ல் தன் முதல் பிரசவ காலகட்டத்தில் 102 கிலோ எடையுடன் இருந்த சமீரா, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உடற்பயிற்சிகள் செய்து தனது பழைய எடைக்குத் திரும்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது தெரிவித்திருந்தார்.

சமீரா
சமீரா
face book

அந்தத் தருணத்தில், 'கர்ப்பகாலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குழந்தைக்கானது. அதனால் அதில் கட்டுப்பாடுகள் கொள்ள முடியாது.