Published:Updated:

ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்... செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல்

ஷாலினி பத்மநாபன்
பிரீமியம் ஸ்டோரி
ஷாலினி பத்மநாபன்

செலிபிரிட்டீஸ் சாய்ஸ்

ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்... செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல்

செலிபிரிட்டீஸ் சாய்ஸ்

Published:Updated:
ஷாலினி பத்மநாபன்
பிரீமியம் ஸ்டோரி
ஷாலினி பத்மநாபன்

- ஷாலினி பத்மநாபன்

``நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருந்தவரைக்கும், சென்னை வரும்போதெல்லாம் ‘ஷாலு எங்கே என் கேக்’னு கேட் பாங்க. அவங்களுக்காக இனிப்பில்லாம, ஆலிவ் ஆயில் சேர்த்து ஸ்பெஷலா ஆப்பிள் கேக் செய்து கொடுத்தனுப்புவேன். அவங்க பத்மஸ்ரீ வாங்கினபோது அவங்ளை கௌரவப்படுத்த அவங்களுக்குப் பிடிச்ச ஹெல்த்தியான கேக்ஸும் குக்கீஸும் செய்து கூடைநிறைய கொடுத்தனுப்பி னேன்’’

- ஸ்ரீதேவியின் நினைவுகளில் சிலாகிக்கும் ஷாலினி பத்மநாபன், செலிபிரிட்டீஸின் ஃபேவரைட் பேக்கர் மற்றும் குக். இவருடைய செலிபிரிட்டி வாடிக்கையாளர்களின் பட்டியல் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, கார்த்தியின் மனைவி ரஞ்சனி, ஜோதிகா, விக்ரம் மனைவி ஷைலா, ப்ரீத்தா ஹரி, சுமா ஹாரிஸ், மாஃபா பாண்டியராஜன் மனைவி லதா, பீட்டர் ஹெயின் மனைவி பார்வதி, அருண் விஜய் மனைவி ஆர்த்தி, டைரக்டர் சி.எஸ்.அமுதன், பாடகி மஹதி, பாடகி ஸ்வேதா என நீள்கிறது. தலைக்குப் பின் ஒளிவட்டமெல்லாம் சுழலவில்லை ஷாலுவுக்கு. பேச்சில் அவ்வளவு பணிவு.

‘`எட்டாவது படிக்கும்போது பொழுது போக்கா பேக்கிங் பண்ண ஆரம்பிச்சேன். பிசினஸ் மேனேஜ்மென்ட் முடிச்சதும் கல்யாணமாயிடுச்சு. சின்ன அளவுல பேக்கிங் பிசினஸ் ஆரம்பிச்சேன். என் ஃப்ரெண்டு மூலமா டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரனின் அறிமுகம் கிடைச்சது. நாங்க ரெண்டு பேரும் பேசும்போதெல்லாம் ஆரோக்கியமான உணவுகளைப் பத்தின விவாதங்கள் அதிகமிருக்கும். நான் புதுசா என்ன டிரை பண்ணாலும் ஷைனிக்கு அனுப்பி, கருத்து கேட்பேன். எனக்கு ருசியா சமைக்கத் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, டயட்டீஷியனா அவங்க கிட்டத்தட்ட டாக்டருக்கு இணையானவங்க. அந்த உணவுல எது சரி, எது தப்புன்னு கண்டுபிடிச்சு சொல்ல அவங்களாலதான் முடியும். ஒரு கட்டத்துல என் பேக்கிங் ஸ்டைலையே ஹெல்த்தியானதா மாத்திக்கிட்டேன்’’

ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்... செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல்

- ஆரோக்கிய அறிமுகம் சொல்பவர், எப்போதும் ஊட்டச்சத்துகள் குறித்த தேடலிலேயே இருப்பவர்.

‘`இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா, ஒருநாள் போன் பண்ணி, டயட் பிரெட் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க. அதோட ரெசிப்பியையும் அனுப்பினாங்க. அதுல குறிப்பிட்டிருந்த பல பொருள்களைப் பத்தி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அதுக்காக நிறைய தேடினேன். அந்தப் பொருள்கள் கிடைக்கும் இடங்களைத் தெரிஞ்சுகிட்டு, அங்கே ஆர்டர் பண்ணி வாங்கி செய்து கொடுத்தேன். நடிகர் விக்ரம் மனைவி சணல் விதைகள்னு சொல்லப்படற ஹெம்ப் சீட்ஸ் பற்றிப் பேசிட்டிருந்தாங்க. காஸ்ட்லியான அதுல அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சுக்க அதைத் தேடி வாங்கி, அதைவெச்சு ரெசிப்பீஸ் பண்ணிப் பார்த்தேன். இப்படி ஒவ்வொருவரும் கேட்கக் கேட்க ஆர்வமாகி, தேடி, நானே முதல்ல ட்ரையல் பார்த்து, வழக்க மான ரெசிப்பியை ஹெல்த்தியா மாத்தி, அதுல ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சேன்’’ என்பவரின் மெனுவில் லாக்டேஷன் குக்கீஸ், ஹெச்ஆர்டி கேக் என ஒவ்வொன்றும் கவனம் ஈர்க்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`தாய்ப்பால் சுரப்பைத் தூண்டறதுல பலமடங்கு சக்தி கொண்டது ஹாலிம் விதைகள். கார்டன் க்ரெஸ் சீட்ஸ்னும் சொல்லலாம். கர்ப்பம் தரிக்க நினைக்கிறவங்களுக்கும் பிசிஓடி பிரச்னை உள்ளவங்களுக்கும் இது ரொம்ப நல்லது. ஹெச்ஆர்டி கேக்குக்கு லண்டன்ல மெனோபாஸ் கேக்னு பெயராம். இங்கே யாரும் அதைப் பண்ற தில்லைனு சொல்லி ஷைனி என்னை டிரை பண்ணச் சொன்னாங்க. மெனோபாஸ் நேரத்துல பெண்களின் உடல்ல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதை ஈடுகட்டும் வகையில் இயற்கையான ஈஸ்ட்ரோஜென் உள்ள நட்ஸ், சீட்ஸ் வெச்சுப் பண்ற கேக் இது. முருங்கைக்கீரை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, எத்தனை பேர் அதைச் சாப்பிடுறோம். இப்போ முருங்கைக்கீரை பொடி கிடைக்குது. அதைவெச்சு நான் பண்ற பிஸ்கட், குட்டீஸுக்கு அவ்வளவு பிடிக்கும்.

வீகன் டயட்ல பால் உணவுகளுக்கு அனுமதியில்லை. அதுக்கு என்ன மாற்றுன்னு யோசிச்சு, முந்திரிப் பருப்பையும் உருளைக்கிழங்கையும் வெச்சு சீஸ் முயற்சி பண்ணினேன். நட்ஸ் அலர்ஜி உள்ளவங்களுக்காக சூரியகாந்தி விதைகளை வெச்சு சீஸ் பண்றேன்'’

- ருசியிலும் ஆரோக்கியத்திலும் ‘நோ’ காம்பரமைஸ் என்பதுதான் ஷாலுவின் ஸ்பெஷாலிட்டி.

பேலியோ, கீட்டோ, வீகன்... டயட்டில் இப்படி எத்தனையோ... இவற்றைப் பின்பற்றுவோருக்கு அவரவர் டயட்டுக்கேற்ப பிரத்யேக உணவுகளையும், பிறந்தநாள், திருமணநாள் போன்ற ஸ்பெஷல் தருணங்களைச் சிறப்பாக்கும் ஆரோக்கிய கேக், டெசர்ட்டுகளையும் செய்து தரும் ஷாலினி, செலிபிரிட்டீஸுக்கான தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் தயாரிப்பில் இப்போதே பிஸி.

ஓட்ஸில் சீட்ஸ் சேர்த்த சங்கு சக்கரம், ஹாலிம் சீட்ஸ் சேர்த்த புஸ்வாணம், கேரட்டும் சீட்ஸும் சேர்த்த ஆட்டம் பாம், மிளகாய் சேர்த்த 100 வாலா கிராக்கர்... ஷாலு சொல்லும் சாம்பிள் மெனுவே ஆவலைக் கூட்டுகிறது.

ஹேப்பி தீபாவளி.... ஹெல்த்தி தீபாவளி!