Published:Updated:

`மாதவிடாய், சைனஸ் நாள்களில் இப்படித்தான் இருப்பேன், எதார்த்தம் இதுவே!' - புகைப்படம் பகிர்ந்த ஸ்ருதி

ஸ்ருதி ஹாசன் ( @Shruti Haasan )

அதில், ``பெர்ஃபெக்ட்டான செல்ஃபிக்கள் மற்றும் பதிவுகள் உள்ள இந்த உலகத்தில், ஃபைனல் கட்டிற்கு வராத சில புகைப்படங்கள் இதோ. இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

`மாதவிடாய், சைனஸ் நாள்களில் இப்படித்தான் இருப்பேன், எதார்த்தம் இதுவே!' - புகைப்படம் பகிர்ந்த ஸ்ருதி

அதில், ``பெர்ஃபெக்ட்டான செல்ஃபிக்கள் மற்றும் பதிவுகள் உள்ள இந்த உலகத்தில், ஃபைனல் கட்டிற்கு வராத சில புகைப்படங்கள் இதோ. இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
ஸ்ருதி ஹாசன் ( @Shruti Haasan )

சமீபத்தில் நடிகைகள் பலரும் தங்களின் உடல்நலக் குறைவு குறித்த விவரங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நோய்வாய்ப்படுகையில் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் அதன் போக்கிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடும் இவர்கள், தங்கள் நட்சத்திர இமேஜ் வளையத்துக்குள் நிற்காமல், `எதார்த்தம் இதுவே’ என தங்களை அழகின் பிடியில் இருந்து விலக்கி, தங்கள் நிஜத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

அந்த வகையில் ஸ்ருதி ஹாசன் ஏற்கெனவே, தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஹார்மோன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பதைப் போராட்டமாக நினைக்காமல், இது இயற்கையான நிகழ்வு என ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது இவரின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அதில் ``பெர்ஃபெக்ட் செல்ஃபிக்கள் மற்றும் பதிவுகள் உள்ள இந்த உலகத்தில், ஃபைனல் கட்டிற்கு வராத சில புகைப்படங்கள் இதோ. இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்..

அதில் கேசம் சரியாக இல்லாதபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை `பேட் ஹேர் டே’ எனவும், காய்ச்சல் மற்றும் சைனஸின் போது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை `காய்ச்சல் மற்றும் சைனஸால் முகம் வீங்கிய நாள்’ எனவும், மாதவிடாயின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை `பீரியட் கிராம்ப் மற்றும் ஓய்வு நாள்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

ஒப்பனைகள் ஏதுமில்லாத ஸ்ருதியின் வெளிப்படையான இந்த பதிவிற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து, கூடிய விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறி பாசிட்டிவிட்டியை பகிர்ந்து வருகின்றனர்.

You Go Girls!