Published:Updated:

அரைக்கிலோ கோழிக்கறியும் 50 ரூபாய் சம்பளமும்!

கோவை சத்யா!
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யா!

- ‘மேதாவி’ கோவை சத்யா!

அரைக்கிலோ கோழிக்கறியும் 50 ரூபாய் சம்பளமும்!

- ‘மேதாவி’ கோவை சத்யா!

Published:Updated:
கோவை சத்யா!
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யா!

“மகாத்மா காந்திக்கு நாலு ஆண் பிள்ளைங்க. அவங்க பேருகூட நம்மள்ல பலருக்குத் தெரியாது. நேருவுக்கு ஒரே பெண் குழந்தைதான். யாரைக் கேட்டாலும் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தின்னு சட்டுன்னு சொல்வாங்க. எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு வகையில இந்திராகாந்திதான்” - பாசிட்டிவ் மோடில் பேச்சைத் தொடங்கினார் கோவை சத்யா.

கோவையைச் சேர்ந்தவர். பட்டிமன்ற மேடைகளில் அறிமுகமாகி, பாட்டுப் பட்டிமன்றம், ஸ்டாண்ட் அப் காமெடி, அரசியல் மேடைகள், ஆன்மிக சொற் பொழிவு எனப் பேச்சுக்கலையின் அத்தனை பரிமாணங்களிலும் கலக்கிக்கொண்டிருப் பவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக 3,500 மேடைகளுக்கு மேல் களம் கண்டவர்.

அரைக்கிலோ கோழிக்கறியும்
50 ரூபாய் சம்பளமும்!

“ஸ்கூல்ல படிக்கும்போது பாட்டு, டான்ஸ், பேச்சுன்னு எந்தப் போட்டியா இருந்தாலும் உள்ள நுழைஞ்சிருவேன். ஜெயிக்கிறது தோக்குறது எல்லாம் மேட்டர் கிடையாது. மேடையேறிடணும், அவ்வளவுதான்.

ஒருமுறை டிபன் பாக்ஸ் பரிசா கொடுத் தாங்க. சாப்பாடே கொண்டு போகாத எங்கப்பா, அன்னியிலேருந்து நான் வாங்குன டிபன் பாக்ஸ்ல சாப்பாடு கொண்டு போக ஆரம்பிச்சிட்டாரு. கோவை சிட்டி அரசு பஸ் கண்டக்டர் அவரு. பஸ்ல வழக்கமா ஏறுறவங்ககிட்டெல்லாம்’ என் பொண்ணு பேச்சுப் போட்டில வாங்குனது’ன்னு பெருமையா காட்டுவாரு.

அரைக்கிலோ கோழிக்கறியும்
50 ரூபாய் சம்பளமும்!

சோமசுந்தரின்னு ஒரு டீச்சர், குடை பிடிச்சிட்டு, கண்ணாடி போட்டு, சைடுல ரோஜாப்பூ வெச்சு, புடவை முந்தானையைப் பறக்கவிட்டுட்டு ஸ்டைலா வருவாங்க. அவங்கள மாதிரி டீச்சராகணும்னு ஆசைப் பட்டேன்” என்பவருக்கு பத்தாம் வகுப்பு முடித்ததுமே திருமணம். அதனால் தன் இரண்டு மகள்களில் ஒருவரை முனைவர் பட்டம், இன்னொருவரை எம்.எஸ்ஸி, பி.எட் படிக்க வைத்திருக்கிறார்.

“கல்யாணம் முடிஞ்ச சில வருஷங் கள்ல குடும்பப் பொறுப்பு என் மேல விழுந்துச்சு. அப்போ அரட்டை அரங்கத்துல பேசுறவங்களுக்கான தேர்வுல கலந்து கிட்டேன். 2,000 பேர் கலந்துகிட்டதுல 18 பேரைத் தேர்வு செஞ்சாங்க. அதுல நானும் ஒருத்தி. மூன்று அரட்டை அரங்கம் மேடையில தொடர்ந்து பேசி, விசு சார் கையால ‘ஹாட்ரிக் பேச்சாளர்’னு விருதும் வாங்கினேன்” என்பவர் முதல் பட்டிமன்ற மேடையின் ஹாஸ்ய அனுபவத்தைப் பகிர்ந்தார்.

“கோவை புதூர்ல ஒரு கோயில் திருவிழா பட்டிமன்றம். நான்தான் நிறைவுப் பேச்சாளர். எனக்கு முன்னாடி பேசுன பாயின்டுக்கெல்லாம் எதிரா பேசுனேன். க்ளிக் ஆயிடுச்சு. நடுவர் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆயிட்டாரு. அவரு கோழிக்கடை வெச்சிருந்ததால அரைக்கிலோ கோழிக்கறியும் 50 ரூபாயும் பேமென்ட்டா கொடுத்தாரு” எனும் சத்யா, விஜய் டிவி `கலக்கப்போவது யாரு

சீஸன் 6' போட்டியாளர். தற்போது கலைஞர் டிவி காமெடி பேட்டை, ஸ்டாண்ட் அப் காமெடி என பிஸி.

அரைக்கிலோ கோழிக்கறியும்
50 ரூபாய் சம்பளமும்!

``வாழ்க்கையில ஒரு கட்டத்துல வறுமையும், ஏளனப் பேச்சுகளும் ஏன் வாழணும்ற எண்ணத்தைக் கொடுத்துச்சு. ஆனாலும் என் பிள்ளைகளுக்காக வாழணும்னு முடிவெடுத் தேன். அந்த நேரத்துல எனக்கு ஆதரவா நின்னு தன்னம் பிக்கையை அதிகரிச்சவங்க என் அம்மாதான். ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், முல்லை நடராஜன் ரெண்டு பேரும்தான் நிறைய மேடை வாய்ப்புகள் கொடுத்தாங்க” - ஏற்றிவிட்ட ஏணிகளையும் மறக்காமல் நினைவுகூர்கிறார்.

“மேடையில் ஏறும்போது எதிர்ல இருக்கிறவங்களுக்கு எதுவும் தெரியாது. எல்லாம் தெரிஞ்ச மேதாவி நாமதான்னு நினைச்சுப் பேசணும்னு தமிழ் டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க. அப்படித்தான் எனக்கு இருந்த ஸ்டேஜ் பயத்தை காலி செய்தேன். இந்த டிப்ஸ் மேடைப் பேச்சுக் கலையைத் தேர்ந்தெடுக்கிறவங்களுக்கு நிச்சயம் உதவும்” - பாசிட்டிவ் மோடிலேயே நிறைவு செய்தார் கோவை சத்யா.