Published:Updated:

நடிகை டு பிசினஸ்வுமன் - பாலிவுட்டைக் கலக்கும் கேத்ரினா மற்றும் சன்னி லியோன்

கேத்ரினா - சன்னி லியோன்
கேத்ரினா - சன்னி லியோன் ( instagram )

நடிகை சன்னி லியோன் மற்றும் காத்ரினா கைஃபுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் தெரியுமா?

நடிகை சன்னி லியோன் கனடா மற்றும் அமெரிக்கா என டூயல் சிட்டிசன்ஷிப் உள்ளவர். இதுதவிர இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடிமகள் எனும் உரிமம் பெற்றிருக்கிறார்.

சன்னி லியோன்
சன்னி லியோன்
instagram

இங்கிலிஷ் நடிகையான இவர் இந்தியில் கால்பதித்து, பிக் பாஸ் சீஸன் - 5, நாகினி என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கால்பதித்து கலக்கியவர்.

சன்னி லியோனைப்போலவே நடிகை கேத்ரினா கைஃபும் ஆங்கில நடிகையாக இருந்து, பிறகு இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை எனும் புகழுடன் பாலிவுட்டைக் கலக்கியவர்.

சன்னி லியோன்
சன்னி லியோன்
instagram

ஹாங்காங்கில் பிறந்து லண்டனில் குடிபெயர்ந்து மாடலிங் செய்துகொண்டிருந்தவரின் அழகுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டின.

சன்னிலியோன் மற்றும் கேத்ரினா கைஃப் இருவருமே மாடலிங் துறையில் இருந்தவர்கள்.

கேத்ரினா கைஃப்
கேத்ரினா கைஃப்
instagram

மாடலிங், சினிமா என எப்போதும் மேக்கப் அலங்காரத்துடன் இருப்பதாலோ என்னவோ இருவருக்குமே மேக்கப் பொருள்களின் மீது தீராக் காதல். அதையே தங்களது பிசினஸாக கையில் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தான் தயாரிக்கும் மேக்கப் பொருள்களை `ஸ்டார் ஸ்ட்ரக் பை SL' எனும் பெயரில் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் சன்னி லியோன்.

சன்னி லியோன்
சன்னி லியோன்
instagram
கேத்ரினா கைஃப்
கேத்ரினா கைஃப்
instagram

அதேபோல் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய மேக்கப் பொருள்களை `கே பை கேத்ரினா' எனும் பெயரில் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் கேத்ரினா கைஃப்.

`பியூட்டி’ ஐஸ்வர்யா, `கிளாமர்’ வித்யா பாலன், `சான்ஸே இல்ல’ சன்னி லியோன்... டபூவின் 2020 காலண்டர்!

உடன் பணிபுரியும் பிரபலங்களின் வாழ்த்துகள் மற்றும் மக்களிடையே கிடைத்த வரவேற்புகளால் இவ்விருவரும் நடிகை எனும் இமேஜைத் தாண்டி `தொழிலதிபர்' எனும் அடையாளத்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்.

இருவரும் தங்களது பிராண்டின் பெயரில் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். லீப் வருடத்தையொட்டி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிறுவனத்தின் மேக்கப் பொருள்களில் உள்ள `ஷிம்மரிங்' மேக்கப் ஐட்டங்களை 50 சதவிகித ஆஃபரில் வாங்கிக்கொள்ளலாம் என ஸ்வீட் கிஸ்ஸுடன் வீடியோ ஒன்றைப் பதிவேற்றி இருக்கிறார் சன்னிலியோன்.

கிறங்கடிக்கும் கிஸ்ஸுக்காகவே ஆர்டர்கள் குவியலாம்!

``நான் ஒல்லியா, குண்டா... எனக்கு பிம்பிள்ஸா... நீங்க கவலைப்படாதீங்க!'' - `StopBodyShaming' ஸ்ருதி
அடுத்த கட்டுரைக்கு