
‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு மேடையில் தன்னை ‘அக்கா' என விஜய் அழைத்தபோது, தான் அங்கு இல்லாமல் போனதை நினைத்து இப்போது ஃபீல் பண்ணுகிறார் தேவதர்ஷினி. உண்மை என்னவெனில்... விழா நடந்த அன்று அந்த இடத்துக்கு தாமதமாகச் சென்றிருக்கிறார் அவர். திரண்டிருந்த விஜய் ரசிகர்களின் கூட்டத்தைக் கடந்து விழா மேடைக்குச் செல்வது சிரமமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் திரும்பிவிட்டாராம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ அஸ்வினிக்கு சீரியல் ஒளிபரப்பாகும் சேனல் சமீபத்தில் ‘மோஸ்ட் பாப்புலர் மருமகள்’ விருது கொடுத்தது நினைவிருக்கலாம். ஏற்கெனவே சென்னைப் புறநகரில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்யும் யோசனை இருப்பதாகச் சொல்லி வந்தவர், இப்போது அப்படியே ஒரு வீட்டையும் வாங்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
அமைதியை விரும்புகிற போதெல்லாம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஆசிரமம் ஒன்றுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் தொகுப்பாளினி ரம்யா. மண் குளியல், மௌனவிரதம் என அங்கு கடைப்பிடிக்கப்படும் சில பழக்கவழக்கங்கள் மனத்தை வலிமையாக்கி, புத்துணர்ச்சி தருகின்றதாம்!

மகன் பிறந்து ஒரு வயதுகூட ஆகாத நிலையில் கடந்த ஆண்டு டி.வி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது ‘ஜோடி’ஆனந்திக்கு. கண்டிஷன் போட்டு கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் ‘சங்கத்தமிழன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘மகனைப் பிரிஞ்சு ஷூட்டிங் வர்றேன்’ என்றபடி ஷூட்டிங் போய் வந்தார். ஆனால், இவர் நடித்த காட்சிகள் படத்தில் இல்லை என்பதால் இப்போது வருத்தத்தில் இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்வர்–சமீரா, பிரியங்கா–ராகுல், மானஸ்–சுபிக்ஷா... விரைவில் திருமணம் செய்ய இருக்கிற சின்னத் திரை காதல் ஜோடிகளின் லிஸ்ட் இது. மானஸ் – சுபிக்ஷாவின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. ‘டிசம்பரில் திருமணம்’ என்கிறார் மானஸ். ‘ரோஜா’ சீரியல் பிரியங்கா-ராகுல் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டே முடிந்து விட்டது.
`நிச்சயதார்த்தம் முடிந்ததும் பெரிய இடைவெளி இல்லாம உடனே திருமணம் இருக்கும்’ என்கிறது `அன்வீரா’ ஜோடி.