Published:Updated:

``மாட்டின் இதயம் மற்றும் கல்லீரலை உண்பேன்'': டயட் ரகசியம் பகிர்ந்த பிரபலம்!

Haaland ( Premier League )

மற்றவர்கள் இவற்றை உண்பதில்லை. ஆனால், என்னுடைய உடலைக் கவனித்துக்கொள்வதில் நான் அக்கறை கொண்டுள்ளேன் என்கிறார் எர்லிங் ஹாலண்ட்.

உடல்நலத்தையும் எடையையும் சீராகப் பராமரிக்க உணவுப் பழக்க வழக்கம் மிகவும் முக்கியம். உணவுப் பழக்க வழக்கங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபடும். இன்னும் சொல்லப்போனால் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கென தனித்துவமான உணவுப் பழக்க வழக்கத்தையும், உடற்பயிற்சிகளையும் கடைப்பிடித்து வருவர்.

Erling Haaland
Erling Haaland

அந்த வகையில் 22 வயதான பிரபல கால்பந்தாட்ட வீரர் எர்லிங் ஹாலண்ட் தன்னுடைய உணவுப் பழக்க வழக்கம் குறித்து `ஹாலண்ட்: தி பிக் டெசிஷன் (Haaland: The Big Decision)’ என்ற ஆவணப்படத்தில் மனம் திறந்துள்ளார்.

அதில் ``நாள் ஒன்றுக்கு 6,000 கலோரி வரை எடுத்துக்கொள்வேன்; என்னுடைய டயட்டில் மாட்டின் இதயம் மற்றும் கல்லீரலும் இடம் பெற்றிருக்கும். மற்றவர்கள் இவற்றை உண்பதில்லை. ஆனால், என்னுடைய உடலைக் கவனித்துக்கொள்வதில் நான் அக்கறை கொண்டுள்ளேன். முடிந்தவரை உள்ளூரில் கிடைக்கும் தரமான உணவுகளை உட்கொள்வது முக்கியமானது என்று நம்புகிறேன்.

``மாட்டின் இதயம் மற்றும் கல்லீரலை உண்பேன்'': டயட் ரகசியம் பகிர்ந்த பிரபலம்!

தூக்கத்தை மேம்படுத்த நீல ஒளியை ஃபில்டர் செய்யும் கண்ணாடிகளை உபயோகிப்பேன். அதோடு காம்ப்ளெக்ஸ் (complex) முறையில் வடிகட்டப்படும் நீரை மட்டும் அருந்துவேன்.

நான், காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை, என் கண்களுக்கு சூரிய ஒளி கிடைக்கச் செய்வது. இது உடலியல் கடிகாரம் எனப்படும் சர்காடியன் ரிதமுக்கு (Circadian Rhythm) நல்லது’’ என்று தெரிவித்துள்ளார்.