Published:Updated:

``என் பொண்ணுங்களை சினிமாவுல நடிக்க அனுமதிக்காததுக்குக் காரணம் இதுதான்'' - குட்டி பத்மினி ஷேரிங்!

குட்டி பத்மினி

``இப்படி உட்கார்ந்து இப்படி பேலன்ஸ் பண்ணி உருளுன்னு சொல்லிக்கொடுத்தவர் அவரே படிக்கட்டுல உருண்டுட்டார்.''

``என் பொண்ணுங்களை சினிமாவுல நடிக்க அனுமதிக்காததுக்குக் காரணம் இதுதான்'' - குட்டி பத்மினி ஷேரிங்!

``இப்படி உட்கார்ந்து இப்படி பேலன்ஸ் பண்ணி உருளுன்னு சொல்லிக்கொடுத்தவர் அவரே படிக்கட்டுல உருண்டுட்டார்.''

Published:Updated:
குட்டி பத்மினி

மனம் திறந்து... வெளிப்படையா... போல்டு... இந்த எல்லா வார்த்தைகளுக்குமே பொருத்தமானவர் நடிகை குட்டி பத்மினி. இந்தி வெப் சீரிஸ் படப்பிடிப்புக்காகச் சென்னைக்கும் மும்பைக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறவர், ஒரு மாலை வேளையில் தன்னுடைய சில நாஸ்டாலஜி நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

குட்டி பத்மினி
குட்டி பத்மினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சின்ன வயசுலேயே எனக்கு சினிமா ரொம்ப பிடிச்சுப் போச்சு. தினமும் புதுசு புதுசா கவுன் போட்டுக்கிறோம்; நகை போட்டுக்கிறோம்; மேடைக்குக் கூப்புடுறாங்க; விருதெல்லாம் கொடுக்கிறாங்கன்னு எப்பவுமே ரொம்ப சந்தோஷமா இருப்பேன். ஸ்கூலுக்குப் போகலையேங்கிற வருத்தமெல்லாம் அப்போ எனக்கு இருந்ததே இல்லை. விவரம் தெரியாத வயசில்லையா? ஆனா, இந்த விஷயத்துல எங்கம்மா ரொம்ப கவனமா இருந்தாங்க.

தமிழ், இங்கிலீஷ், இந்தின்னு மூணு மொழிகளை முறைப்படி சொல்லிக் கொடுத்தாங்க. அப்போ எங்க வீடு இந்திப் பிரச்சார சபா பக்கத்துலேயே இருந்ததால, காலையில 7 மணிக்கே இந்தி கிளாஸுக்கு அனுப்பி வெச்சிடுவாங்க. வேற வழியில்லாம அழுதுகிட்டேதான் இந்திக் கத்துக்கிட்டேன். தமிழ் சீரியல் உலகத்துல என்னை எல்லாரும் வேண்டாம்னு நிராகரிச்சப்போ, நான் அழுதுகிட்டே கத்துக்கிட்ட இந்திதான் கைகொடுந்துச்சு. மும்பைக்கு போய் வெப்சீரிஸ் தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்கூலுக்குப் போய் மேத்ஸ், சயின்ஸ்னு படிக்கலையேன்னு நான் வருத்தப்பட்ட சம்பவங்களும் நிறைய நடந்திருக்கு. தவறான அக்ரிமென்ட்ல கையெழுத்துப் போட்டுட்டு பிரச்னை வந்தப்போ கொஞ்சம் படிச்சிருந்தா கவனமா இருந்திருப்போம்னு தோணியிருக்கு.

ஹோட்டலுக்கு வான்னு சொல்றவங்க; அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா வாய்ப்பு தருவேன்னு சொல்றவங்க இப்பவும் இருக்காங்க. இதையெல்லாம் மீறி ஜெயிச்சவங்களுக்கு பெரிய சல்யூட்.

நானும் கமலும் சம காலத்து சைல்ட் ஆர்ட்டிஸ்ட். ஏவி.எம் ஸ்டூடியோவுல அவ்ளோ விளையாடியிருக்கோம். ஷூட்டிங் பிரேக் விட்டா, ஏதாவது ஃப்ளோர்ல விளையாடிட்டு இருப்போம். இல்லன்னா, எடிட்டிங் ரூம்ல உட்கார்ந்துட்டு ஃபிலிமை கீறிட்டு இருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தி கத்துக்கிட்டது, ஏவி.எம் ஸ்டூடியோன்னு பேசுறப்போ, ஒரு இந்தி டைரக்டர் என்னை மூதேவின்னு திட்டின ஒரு சம்பவம் ஞாபகம் வருது. `குழந்தையும் தெய்வமும்' படத்துல தமிழ், தெலுங்கு ரெண்டு மொழியிலேயுமே நான்தான் நடிச்சேன். இந்தியிலேயும் என்னைதான் குழந்தை நட்சத்திரமா புக் பண்ணாங்க. கிட்டத்தட்ட படத்தோட முக்கால்வாசி ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. அந்தப் படத்துல நான் படிக்கட்டுல உருண்டு விழற மாதிரி ஒரு சீன் வரும். பதினாறு டேக் எடுத்தும் சீன் ஓகே ஆகலை. ஏவி.எம்ல படிக்கட்டுங்க நல்லா உயரமா இருக்கும். அதுல பலமுறை உருண்டு விழுந்ததைப் பார்த்துக்கிட்டிருந்த அம்மாவுக்கு அழுகையே வந்திடுச்சு.

`கொஞ்சம் எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுங்களேன். அவ படிக்கட்டுல உருண்டுகிட்டே இருக்கிறதைப் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னாங்க. அவரு சட்டுனு, `இந்த மூதேவிக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாது'ன்னு திட்டிட்டு, விறுவிறுன்னு படிக்கட்ல ஏறி வந்து, `இப்படி உட்கார்ந்து இப்படி பேலன்ஸ் பண்ணி உருளுன்னு சொல்லிக்கொடுத்தவர் அவரே படிக்கட்டுல உருண்டுட்டார். செட்டில எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அவருக்கு பயங்கர கோபம் வந்திடுச்சு.

பேக் கப் சொல்லிட்டாரு. அடுத்த நாள், `இந்தப் படத்துல அந்தப் பொண்ணு இருந்தா நான் டைரக்ட் பண்ண மாட்டேன்'னு சொல்லிட்டாரு. அப்புறம் என்னோட ரோல்ல நீட்டு சிங் நடிச்சாங்க. இதுல என்ன காமெடின்னா நீட்டு சிங்குக்கு டூயல் ரோல்ல எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுக்க தினமும் என்னைக் கூப்பிட்டுட்டுப் போவாங்க. இதுல இருக்கிற பாலிடிக்ஸ் எனக்கு அப்போ தெரியாதுங்கிறதால நானும் சந்தோஷமா நீட்டு சிங்குக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். எங்கம்மாதான் பாவம் அழுதாங்க.

குட்டி பத்மினி
குட்டி பத்மினி

ஹீரோயினா ஆன பிறகும், கேரக்டர் பொருத்தம் இல்லைன்னு, நான் கீழ்ப்படியலைன்னு நிறைய ரிஜெக்ட் செய்யப் பட்டிருக்கேன். கீழ்ப்படியலைங்கிற ஒரு காரணத்துக்காகவே எத்தனையோ முறை, எத்தனையோ பேர், என்னை வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. காஸ்டிங் கவுச் இன்னமும் இந்தத்துறையில இருக்கு.

ஹோட்டலுக்கு வான்னு சொல்றவங்க; அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா வாய்ப்பு தருவேன்னு சொல்றவங்க இப்பவும் இருக்காங்க. இதையெல்லாம் மீறி ஜெயிச்சவங்களுக்கு பெண்களுக்கு பெரிய சல்யூட். என் பெண்களுக்கு நல்ல நல்ல பட வாய்ப்புகள் வந்துச்சு. இருந்தாலும் அவங்களை நான் சினிமாவுல நடிக்கிறதுக்கு அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்'' என்கிறார் குட்டி பத்மினி அழுத்தமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism