Published:Updated:

வேளாண்மைத் துறைக்கு துணை நிற்கிறது!

வ.தட்சிணாமூர்த்தி, ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வ.தட்சிணாமூர்த்தி, ஐ.ஏ.எஸ்

வ.தட்சிணாமூர்த்தி, ஐ.ஏ.எஸ். வேளாண் இயக்குநர்

வேளாண்மைத் துறைக்கு துணை நிற்கிறது!

வ.தட்சிணாமூர்த்தி, ஐ.ஏ.எஸ். வேளாண் இயக்குநர்

Published:Updated:
வ.தட்சிணாமூர்த்தி, ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வ.தட்சிணாமூர்த்தி, ஐ.ஏ.எஸ்

விவசாயம்தான் நம்முடைய உயிர்நாடி. நாம் எந்தத் தொழில் செய்தாலும் இறுதியில் விவசாயத்துக்குப் பின்தான் நிற்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்று சொல்லியுள்ளார். தமிழக வேளாண்துறையின் முக்கிய நோக்கம், உணவு தானிய உற்பத்தியும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதும்தான். இயற்கை வேளாண்மைக்கான திட்டங்கள், ஒருங்கிணைந்த பண்ணைக்கான திட்டங்கள், விதைகள் இருப்பு, உரங்கள் இருப்பு, டிராக்டர் உள்ளிட்ட பண்ணைக் கருவிகளின் வாடகை எனப் பல விஷயங்களுக்கு விவசாயிகள், வேளாண் விரிவாக்க அலுவலர்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. உங்கள் கைகளிலேயே ஸ்மார்ட் போன் மூலமாக உழவன் செயலியை டவுன்லோடு செய்து வேளாண்மை சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதில் தமிழக வேளாண்துறையின் அனைத்துத் தகவல்களும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு துல்லியமாகக் கிடைக்கின்றன. ‘என் பண்ணை வழிகாட்டி’ என்ற பெயரில் விவசாயமே தெரியாதவர்களும் விவசாயம் பற்றித் தெரிந்துகொள்ள வழிகாட்டல்கள் கிடைக்கின்றன.

வேளாண்மைத் துறைக்கு துணை நிற்கிறது!

‘பசுமை விகடன்’ தமிழக வேளாண்மைத் துறைக்குத் துணையாக நிறைய நன்மைகளைச் செய்து வருகிறது. துறையின் திட்டங்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. பசுமை விகடன் 300-வது இதழிலிருந்து ஆயிரமாவது இதழைத் தொட வேண்டும் என்பது என் அவா. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். இன்று நானே இயற்கை வேளாண்மைதான் செய்து வருகிறேன். அங்கே மண்புழு உரம் தயாரித்து தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறேன். அனைவரும் எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும், விவசாயத்தை விடாமல் தொடர்ந்தால், அதுவே நாம் விவசாயத்துக்குச் செய்யும் மரியாதை.