Published:Updated:

``நான் கல்யாணம் செஞ்சுக்காததுக்குக் காரணம் அவங்க ரெண்டு பேர்தான்!'' - `வெண்ணிற ஆடை' நிர்மலா ஷேரிங்ஸ்

'வெண்ணிற ஆடை' நிர்மலா

``நடிகர் ஜெய்சங்கரோட மகன் கண் டாக்டர் விஜய்சங்கர் எனக்கு போன் பண்ணி, `உங்க கண்ணுல இருக்கிற பிரச்னையை நான் சரி செய்றேன்'னு சொன்னார்.''

``நான் கல்யாணம் செஞ்சுக்காததுக்குக் காரணம் அவங்க ரெண்டு பேர்தான்!'' - `வெண்ணிற ஆடை' நிர்மலா ஷேரிங்ஸ்

``நடிகர் ஜெய்சங்கரோட மகன் கண் டாக்டர் விஜய்சங்கர் எனக்கு போன் பண்ணி, `உங்க கண்ணுல இருக்கிற பிரச்னையை நான் சரி செய்றேன்'னு சொன்னார்.''

Published:Updated:
'வெண்ணிற ஆடை' நிர்மலா

முதுமை ஒரு சிலரை, அவர்கள் இளமைக்காலத்தில் இருந்ததைவிட இன்னும் ஜொலிப்பாக வெளிப்படுத்தும். அவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. அவரை சந்திக்க கோட்டூர்புரத்திலுள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம். ஆரஞ்சும் சிவப்பும் கலந்த பட்டுப்புடவையில் கனிந்த பழம்போல இருக்கிறார். ``முதல் பட வாய்ப்பு எப்படி வந்ததுங்கிற மாதிரி வழக்கமான கேள்வி-பதில்கள் வேணாம். இன்னிக்கு நான் உங்களுக்கு இன்ட்ரஸ்டிங்கான தகவல்களா சொல்லப்போறேன்'' என்று நம் ஆர்வத்தைத் தூண்டியவர், படபடவென பேச ஆரம்பித்தார்.

'வெண்ணிற ஆடை' நிர்மலா
'வெண்ணிற ஆடை' நிர்மலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `பூவா தலையா' படத்துல ஜெய்சங்கர் புத்தகத்தை எடுத்து என் முகத்துல வீசினப்போ, இடது கண்ணுல அடிபட்டது எல்லோருக்குமே தெரியும்தானே. அந்தக் கண்ணை சரிசெய்யறதுக்கான சிகிச்சைகள் எடுத்தும் முழுமையா சரியாகலை... கண்ணுக்கு முன்னாடி சந்தனக் கரைசலை தெளிச்சுவிட்ட மாதிரியேதான் இருக்கும். சில மாசங்களுக்கு முன்னாடி நடிகர் ஜெய்சங்கரோட மகன் டாக்டர் விஜய் சங்கர் எனக்கு போன் பண்ணி, `உங்க கண்ணுல இருக்கிற பிரச்னையை நான் சரி செய்றேன்'னு சொன்னார். சொன்ன மாதிரியே ஆபரேஷன் செஞ்சு கண்ணை சரி செஞ்சுட்டார். இப்போ, என் கண்ணு பளிச்சின்னு தெரியுது'' என்றவர், தான் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `அருணாச்சலம்' படத்துல ரஜினிக்கு மாமியார் கேரக்டர்ல நடிச்சேன். அப்போ, `கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வெச்சாங்க'னு ஆச்சர்யமா கேட்டார். நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்ததுக்கு என் அம்மாவும் அப்பாவும்தான் காரணம். சின்ன வயசுல நான் ரொம்ப துறுதுறுப்பா இருப்பேன். நான் வேகமா நடந்தா `வேகமா நடந்து கீழே விழுந்து மூக்கை உடைச்சிக்கிட்டீன்னா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'ன்னு கண்டிப்பாங்க. வேகமா படியிறங்கினா, `கீழே விழுந்து காலை உடைச்சிக்கிட்டினா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'னு திட்டுவாங்க. இந்தப் பேச்சை அடிக்கடி கேட்டுக் கேட்டு சலிப்பாகி ஒரு கட்டத்துல `என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க வேணாம்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். இதைவிட முக்கியமான காரணம் எங்கப்பாவோட சந்தேக குணம். எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. நாம நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு எங்கப்பா, எங்கம்மாவை சந்தேகப்படுவார். `அப்பா மாதிரியே நமக்கும் ஹஸ்பண்ட் அமைஞ்சுட்டா என்ன பண்றது'ங்கிற பயத்துலேயே கல்யாணத்தை ஒத்திப்போட்டுட்டு வந்துட்டேன்'' என்கிறார்.

'வெண்ணிற ஆடை' நிர்மலா
'வெண்ணிற ஆடை' நிர்மலா

``சிவாஜி சார் கூட என்னோட முதல் படம் லட்சுமி கல்யாணம். `ஃபீல்டுக்கு வந்த புதுசுலேயே சிவாஜி சார் கூட நடிக்கிற வாய்ப்பு... ரொம்ப லக்கி நீ'ன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்கடுத்து இன்னொரு படத்துல சிவாஜி சார் கூட நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. வெளியூர்ல ஒரு ஷூட்டிங் முடிச்சிட்டு சிவாஜி சார் படத்துல நடிக்கிறதுக்காக டிரெயின் ஏற வந்தேன். ஆனா, கார்ல பெட்ரோல் இல்லாத காரணத்தால அந்த டிரெயினை தவற விட்டுட்டுடேன். அப்போ, பெட்ரோல் பற்றாக்குறை இருந்த நேரம். பங்க் பங்கா பெட்ரோலை தேடி வாங்கிப் போட்டுட்டு கிளம்பினதாலதான் டிரெயினை தவற விட்டுட்டேன். தவிர, இந்தக் காலம் மாதிரி உடனே போன் போட்டு தகவலும் சொல்ல முடியாதில்லையா? டிரங்க் கால் புக் பண்ணி `நான் டிரெயினை தவற விட்டதையும் அடுத்த டிரெயின் பிடிச்சு வந்துடுறேன்கிறதையும் தெரிவிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப்போய் மேக்கப் போட்டுக்கிட்டிருந்தப்போ, `நீங்க மன்னிப்பு கேட்டாதான் ஷூட்டிங் நடக்கும்னு சிவாஜி சொல்லிட்டார்'னு சொன்னாங்க. உண்மையைச் சொல்லியும் மன்னிப்பு கேட்கச் சொன்னதால பாதி மேக்கப் போட்டிருந்த நிலையில அப்படியே எழுந்து வாக் அவுட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் ஒரு அவார்டு ஃபங்ஷன்ல மீட் பண்ணப்போ, பழசையெல்லாம் மறந்துட்டு என்கிட்ட பேசினார். அவர் மேலே இருந்த மரியாதை இன்னும் அதிகமாகிடுச்சு எனக்கு'' என்றவர், தன் மீதான எம்.ஜி.ஆரின் கரிசனத்தையும் பகிர்ந்துகொண்டார்.

'வெண்ணிற ஆடை' நிர்மலா
'வெண்ணிற ஆடை' நிர்மலா

``என் அண்ணனுங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிச்சாங்க. அதுல நிறைய நஷ்டமாயிடுச்சு. அந்த நேரத்துல எம்.ஜி.ஆர் சார் கூட ஒரு படத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன். ஒரு நாள் `நீ ஒரு படம் எடு. நான் நடிச்சுத் தர்றேன்'னு சொன்னார் எம்.ஜி.ஆர். `உங்களை வைச்சு நான் படம் எடுக்கிறதா'ன்னு நான் ஆச்சர்யப்பட, `நீ ஒரே ஒரு ரூபா சம்பளம் கொடு; நான் நடிச்சுத் தர்றேன்'னு சொன்னார். அதுதான் எம்.ஜி.ஆர்'' என்பவரின் குரலில், அந்த நாள் ஞாபகங்கள் அலைமோதிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

வெண்ணிற ஆடை நிர்மலாவின் முழு பேட்டியையும் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism