Published:Updated:

2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்! - கேம்பஸ் ரிப்போர்ட்

யூடியூப் சேனல்
பிரீமியம் ஸ்டோரி
யூடியூப் சேனல்

சேனல் பேரை சொன்னாலே ‘ஹாய் ஆன்ட்டி’, ‘போடா எரும சாணி’ போன்ற ஸ்லோகங்கள்தான் ஞாபகத்துக்கு வருது.

க்காமாரே, தங்கைமாரே... `எல்லாரும் உங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல் எது என்பதை காரணத்தோட சொல்லுங்க'னு சென்னை, தியாகராயநகர் ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரில சில மாணவிகள்கிட்ட கேட்டோம்.

‘பரிதாபங்கள் யூடியூப் சேனல்ங்க... செம்ம’னு சொல்லி, அந்த சேனலுக்கு முதல் ரேங்க் கொடுத்தாங்க மாண்புமிகு மாணவர்கள். ஏனாம்? ‘`மக்களோட பரிதாபங்களை சிரிப்பு கலந்து சொல்லி நம்மள சிந்திக்கவைக்கிற யூடியூப் சேனல்ங்க அது. சேனலை கட்டிக்காக்கும் கோபி, சுதாகரோட வெகுளிப்பேச்சு, ஆன் தி ஸ்பாட் கவுன்டர் எல்லாம்... மாஸ். இந்த கோ - சு காம்பினேஷன், கவுண்டமணி - செந்தில் மாதிரி ஹிட்டு’’ என்றனர்.

2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்! - கேம்பஸ் ரிப்போர்ட்

இரண்டாம் இடத்துல நான்கு யூடியூப் சேனல் களை லிஸ்ட் செஞ்சாங்க ஸ்டூடன்ட்ஸ். அதுக்கு அவங்களோட மினி ரெவ்யூ இதுதான்..!

2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்! - கேம்பஸ் ரிப்போர்ட்

மைக்செட்

ஸ்ரீராம் ப்ரோவோட எக்ஸ்பிரஷன்ஸ்லாம் வேற லெவல். அவர் கொடுக்குற கவுன்டர்கள், நம்மளோட ரியல் லைஃப் சிச்சுவேஷன்களோட கன்னாபின்னானு கனெக்ட் ஆகும். நம்ம வாழ்க்கை யில நடக்குற கடினமான விஷயங்களை கலகல கன்டென்ட் ஆக்குறதுல கில்லாடிங்க. ‘மைக்செட் ஸ்ரீராம்’னு சொன்னா எங்க அகராதியில ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு அர்த்தம்.

2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்! - கேம்பஸ் ரிப்போர்ட்

பிளாக்‌ஷீப்

ன்டர்டெயின்மென்ட் சேனல்ல பிக்பாஸ். ‘பிளாக்‌ஷீப் டிஜிட்டல் அவார்ட்ஸ்’லாம் கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்காங்க. அந்த விருது பல யூடியூபர்ஸுக்கு இலக்கா இருக்கு. எல்லாவிதமான கன்டென்ட்டையும் கொடுக்குற அண்ணாத்த, விக்னேஷ்காந்த். வாண்டு பசங்கள்லயிருந்து வயசானவங்க வரைக்கும் பார்க்குற அரிய வகை சேனல். விஜே சித்துவோட ‘ஃபன் பண்றோம்’ நிகழ்ச்சி, ஹாஹா!

2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்! - கேம்பஸ் ரிப்போர்ட்

எரும சாணி

சேனல் பேரை சொன்னாலே ‘ஹாய் ஆன்ட்டி’, ‘போடா எரும சாணி’ போன்ற ஸ்லோகங்கள்தான் ஞாபகத்துக்கு வருது. காமெடி கன்டன்ட் கொடுத் துட்டு இருந்தவங்க, லாக்டௌன்ல ‘லாக்டௌன் காதல்’னு காமெடி கலந்த காதல் கன்டன்ட் கொடுத்து டிரெண்டிங்ல வந்தாங்க. ‘எரும சாணி’ விஜய்க்குச் சிரிப்பே சிறப்பா இருக்கும்... ஃபன்னி கைய்.

2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்! - கேம்பஸ் ரிப்போர்ட்

நக்கலைட்ஸ்

‘அலப்பறைகள்’ங்கிற பேருல இவங்க பண்ணுற அலப்பறை... அடி தூள். இவங்க வீடியோக்கள்ல கேரக்டரா உலாவுறது நீங்களாவோ, நானாவோ, நமக்குத் தெரிஞ்சவங்களாவோ இருப்போம். அப்படி லைஃப்ல இருந்து கன்டன்ட் எடுத்து மக்களை கவர் பண்ற கோவை பாய்ஸுக்கு லைக்ஸு.

முடிவா ஒரு பன்ச் சொல்லிக்குறோம். இந்த யூடியூபர்ஸ் எல்லாருமே, இது தங்களோட கரியரா அமையப்போகுதுனு எந்த உத்தரவாதமும் இல்லாம, ஆர்வத்துலதான் தங்களோட சேனல் களை ஆரம்பிச்சாங்க. ஆனா, மனசுக்குப் பிடிச்சு செய்யுற வேலை நம்மள எவ்ளோ தூரம் தூக்கிட்டுப் போய்விடும்ங்கிறதுக்கு இவங்க எல்லாம் உதாரண மாகியிருக்காங்க.