சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: “பையனுடன் சேர்ந்து சேனலும் வளர்ந்தது!”

ஹேமா பாலசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேமா பாலசுப்பிரமணியன்

திருமணத்துக்குப் பிறகு நானும் என் கணவரும் அமெரிக்கா போயிட்டோம். திருமணத்துக்கு முன்னாடி வரை எனக்கு சமைக்கத் தெரியாது.

“என் மகன் சின்னப்பையனா இருந்தப்போ இந்த சேனலை ஆரம்பிச்சேன். மகன் வளர்ந்தான்... கூடவே சேனலும் வளர்ந்துச்சு. கிட்டத்தட்ட பத்து வருட கடின உழைப்போட பலன்தான் இன்னைக்கு எங்களுக்குக் கிடைச்ச வெற்றி. அதற்குப் பின்னாடி இருந்த பல கஷ்டங்களை ஒற்றைப் புன்னகையில் கடந்து வந்திருக்கேன். இன்னைக்கு என்னோட சேனலை பாலிவுட் ஸ்டார்ஸ் வரைக்கும் ஃபாலோ பண்றாங்கன்னு தெரியுறப்போ ஏதோ சாதிச்சிருக்கோம்னு ரொம்பவே சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு” எனப் புன்னகைக்கிறார் ஹேமா பாலசுப்பிரமணியன்.

சுருக்கமாகவும் எளிமையாகவும் சமையல் ரெசிப்பி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு `HomeCookingShow' மிகச்சிறந்த தளம். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வித்தியாசமான சமையல் ரெசிப்பிகளை சிம்பிள் ஸ்டெப்ஸ் மூலம் கற்றுக் கொடுக்கும் ஹேமா, அவருடைய சேனல் விருட்சமாய் வளர்ந்த வெற்றிக்கதை குறித்துப் பேசத்தொடங்கினார்.

செலிபிரிட்டிகள் கூட சேர்ந்து சமைக்கிற ஷோ பர்சனலா எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.
செலிபிரிட்டிகள் கூட சேர்ந்து சமைக்கிற ஷோ பர்சனலா எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.

“திருமணத்துக்குப் பிறகு நானும் என் கணவரும் அமெரிக்கா போயிட்டோம். திருமணத்துக்கு முன்னாடி வரை எனக்கு சமைக்கத் தெரியாது. ஆனா, கணவரோடு வெளிநாடு போனபிறகு கொஞ்ச கொஞ்சமா நானாகவே கத்துக்கிட்டு சமைக்க ஆரம்பிச்சேன். சில வருடங்களில், இந்தியா திரும்பினோம். இங்கே என் கணவர் சொந்தமா சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சார். எங்க கம்பெனியிலிருந்து கன்டென்ட் கிரியேட் பண்ணி அதை விநியோகம் பண்ணுவோம். அப்படி கன்டென்ட் கிரியேட் பண்ணும்போது என் கணவர் ‘சமையல் வீடியோஸ் எடுக்கலாமா’ன்னு கேட்டார். எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததனால எங்க கம்பெனிக்காக சமையல் வீடியோஸ் எடுக்க ஆரம்பிச்சோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்குதுன்னு தெரிய ஆரம்பிச்ச சமயம் யூடியூபில் குக்கிங் வீடியோஸ் போடலாம்னு முடிவெடுத்தோம்.

என் பையனை ஸ்கூலில் விட்டுட்டு வீடியோவிற்கான வேலைகள் பண்ணிட்டு, பிறகு அவனை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வந்து, அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு, பிறகு சேனலுக்கான விஷயங்கள் கவனிச்சுக்கிட்டுன்னு மல்டி டாஸ்கிங் பண்ணிட்டு இருந்தேன். ஃபேமிலியையும், சேனலையும் சரியா பேலன்ஸ் பண்ணிக் கொண்டு போனேன். இப்ப என் பையன் காலேஜ் படிக்கிறான். சேனலும் நல்லபடியா வளர்ந்திருக்கு.

SHAREபட்டா பரம்பரை: “பையனுடன் சேர்ந்து சேனலும் வளர்ந்தது!”

ஒரு டிஷ் சமைக்கிறதுக்கு முன்னாடி அதை கிச்சனில் சமைச்சுப் பார்ப்பேன். அதை எங்க வீட்ல உள்ளவங்க சாப்பிட்டு நல்லாருக்குன்னு சொன்னால்தான் அதை வீடியோவிற்கு சமைச்சுக் காட்டுவேன். என் சமையலுடைய விமர்சகர்கள் என் கணவரும் மகனும்தான்! ரெண்டு பேரும், நல்லா இல்லைன்னா `இது நல்லாயில்லை’ன்னு ஓப்பனா சொல்லிடுவாங்க. பிறகு, அதில் என்ன தவறுன்னு கண்டுபிடிச்சு சரிசெய்துடுவேன்’’ என்றவர், அவருடைய டீம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

“ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டும் வீடியோ போட்டுட்டு இருந்தோம். பிறகு, ‘HomeCooking Tamil'ன்னு தமிழ் சேனல் ஆரம்பிச்சோம். என்னுடைய தாய்மொழி தெலுங்கு என்பதால், ‘HomeCookingTelugu' என்கிற தெலுங்கு சேனலும் ஆரம்பிச்சோம். ஷூட் பண்ணும்போது ஆங்கிலத்தில் பேசி ஷூட் பண்ணிடுவோம். அப்புறம் தமிழ், தெலுங்கிற்காக வாய்ஸ் ஓவர் கொடுப்பேன். மூன்று சேனலுக்கும் என்னையும் சேர்த்து எங்க டீம்ல பத்துப் பேர் இருக்கோம். கேமரா, எடிட்டிங்னு எல்லா விஷயத்தையும் டீம் பார்த்துப்பாங்க. எங்களோட மூணு சேனலையும் சேர்த்து இப்போ கிட்டத்தட்ட 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க.

இப்போ சமைக்கிறதுக்காகவே ஒரு செட் ரெடி பண்ணியிருக்கோம். அதே மாதிரி, ‘வாங்க சமைக்கலாம்', ‘குக்கிங் வித் மை சன்' அப்படின்னு வித்தியாசமான கான்செப்ட்களிலும் சமைக்க ஆரம்பிச்சிருக்கேன். லாக்டௌன் சமயத்தில் என் மகனுடன் சேர்ந்து சமைச்சு வீடியோ பண்ணினேன். அந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதேமாதிரி, செலிபிரிட்டிகள் பலரோட சேர்ந்து சமைத்த வீடியோவும் பலருக்கும் பிடிச்சிருந்தது. வெளிநாட்டு உணவுகளையும் சமைக்கக் கத்துக்கிட்டு ஆடியன்ஸுக்கும் சொல்லிக் கொடுக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, சில ரெசிப்பிகளுக்குத் தேவையான பொருள்கள் நம்மூரில் கிடைக்காது. அதனால மட்டும்தான் சில டிஷ்கள் சொல்லிக் கொடுக்க முடியல. அதே மாதிரி, ஆடியன்ஸ் சிலர் ஊர் சார்ந்த ரெசிப்பிகள் கேட்பாங்க. அந்த ரெசிப்பிகளையும் நான் டிரை பண்ணிட்டு பிறகு அவங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கேன்” என்றவரிடம் டிராவல் பிளாக் குறித்துக் கேட்டேன்.

SHAREபட்டா பரம்பரை: “பையனுடன் சேர்ந்து சேனலும் வளர்ந்தது!”
SHAREபட்டா பரம்பரை: “பையனுடன் சேர்ந்து சேனலும் வளர்ந்தது!”
SHAREபட்டா பரம்பரை: “பையனுடன் சேர்ந்து சேனலும் வளர்ந்தது!”

“நான் உணவுப் பிரியர். அதே மாதிரி டிராவலும் ரொம்பப் பிடிக்கும். எங்கே டிராவல் பண்ணாலும் அந்த ஊரோட ஸ்பெஷல் சாப்பாட்டை டேஸ்ட் பண்ணிப் பார்த்துடுவேன். சமீபத்தில், வி லாக் எடுக்கிறது பரவலாகிட்டு வர்றது தெரிஞ்சது. நாமளும் நம்மளை அப்டேட் பண்ணிக்கணும்னு வி லாக் வீடியோ போட்டேன். அதுல இன்னும் கத்துக்க நிறையவே இருக்கு. கொஞ்ச கொஞ்சமா கத்துட்டிருக்கேன்.

உள்ளூர்லயும் வெளிநாடுகள்லயும் கூட மக்களுக்கு என்னை அடையாளம் தெரியுது.பிறகுதான், வெளிநாட்டிலும் பலர் எங்க சேனலை விரும்பிப் பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சது.

பாலிவுட் நடிகை மலாய்கா என்னோட வீடியோஸ் பார்ப்பாங்க. அவங்க நான் சொல்லிக் கொடுத்த ரெசிப்பியை டிரை பண்ணி அவங்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எங்களோட சேனல் பெயரைக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தாங்க. இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் எங்க சேனலை ஃபாலோ பண்றாங்களாம்.. டீம் சொல்லிதான் எனக்கே தெரியும். அதில், ஷில்பா ஷெட்டி, கீர்த்தி சுரேஷும் இருக்காங்களாம். ஒருமுறை ஒரு அவார்டு ஷோவில் காமெடி நடிகை மதுமிதாவை சந்திச்சேன். அப்போ அவங்க ‘உங்களை ரொம்பப் பிடிக்கும்... உங்க வீடியோஸ் எல்லாம் பார்த்திருக்கேன்’னு சொன்னாங்க. அந்தத் தருணம் ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்துச்சு.

செலிபிரிட்டிகள் கூட சேர்ந்து சமைக்கிற ஷோ பர்சனலா எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஷோவைத் தொடர்ந்து பண்ணணும். அதே மாதிரி, பல இடங்களுக்கு டிராவல் பண்ணி சமைக்கணும். வித்தியாசமான கான்செப்ட் டிரை பண்ணணும்... இப்போதைக்கு அதுதான் நெக்ஸ்ட் பிளான்!”

மணக்க மணக்கப் பேசுகிறார் ஹேமா.