Published:Updated:

30,000 ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி; காய்கறிகளால் ஒலிம்பியாட் உருவம்! - கொல்லிமலை மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சி

பழைமையை நினைவுகூரும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் மாட்டு வண்டி, 30,000 ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி, 20,000 ரோஜாக்களால் தேனீ மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்கள் என மொத்தமாக 75,000 மலர்களால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

30,000 ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி; காய்கறிகளால் ஒலிம்பியாட் உருவம்! - கொல்லிமலை மலர்க் கண்காட்சி

பழைமையை நினைவுகூரும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் மாட்டு வண்டி, 30,000 ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி, 20,000 ரோஜாக்களால் தேனீ மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்கள் என மொத்தமாக 75,000 மலர்களால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
மலர்க் கண்காட்சி

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க் கண்காட்சி என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. ரோஜா மலர்களால் மாட்டு வண்டி, வண்ணத்துப்பூச்சி, தேனீ, காய்கறிகளால் ஒலிம்பியாட் உருவம் என மலர்க் கண்காட்சியில் அமைக்கப்பட்ட விஷயங்களை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

மலர்க் கண்காட்சி
மலர்க் கண்காட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி வில்வித்தையில் சிறந்து விளங்கி கொல்லிமலையை ஆண்ட மன்னராவார். இவர், தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில் ஒருவராக பொதுமக்களாலும், வரலாற்று அறிஞர்களாலும் போற்றப்படுகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை. ஆனால், இந்த வருடம் அந்த விழாவை சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டது.

மலர்களால் உருவாக்கப்பட்ட ஒலிம்பியாட் உருவம்
மலர்களால் உருவாக்கப்பட்ட ஒலிம்பியாட் உருவம்

அதற்காக, கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில், வல்வில் ஓரி விழாவும், சுற்றுலா விழாவும், வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியும் தொடங்கியது. மலர்க் கண்காட்சியை, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து, படகு குழாமில் மூன்று மிதிபடகுகளையும் அவர் இயக்கி வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து, வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட 21 அரங்கு களையும் பொன்னுசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, வல்வில் ஓரியின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், கொல்லிமலையில் வாழும் பழங்குடியின மக்களின் சேர்வை ஆட்டம் மற்றும் கோலாகலமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி தொடங்கியது. இதையொட்டி, பழைமையை நினைவுகூரும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் மாட்டு வண்டி, 30,000 ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி, 20,000 ரோஜாக்களால் தேனீ மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்கள் என மொத்தமாக 75,000 மலர்களால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எனப் பலரையும் கவரும் வண்ணம் வில், அம்பு, காய்கறிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் வடிவம், காதலர் சின்னம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன.

மருத்துவ பயிர் கண்காட்சி
மருத்துவ பயிர் கண்காட்சி

கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆர்க்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலர்கள் இடம் பெற்றுள்ளன. முதன்முறையாக, மருத்துவப் பயிர்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மருத்துவ பயிரின் தாவரவியல் பெயர், பயன்படும் பகுதி, மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்புகளும் வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலர்க்கண்காட்சியை ஏராளமான மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும், சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.