Published:Updated:

கரூர்: `இதுங்கல்லாம் எனக்கு குழந்தைங்க மாதிரி!' - `புறா காதலர்' திருமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புறாக்களுடன் திருமுருகன்
புறாக்களுடன் திருமுருகன் ( நா.ராஜமுருகன் )

புறாக்கள்னா எனக்கு உசிரு. அதனால், ஒவ்வொரு புறாவையும் என் குழந்தையா பாவிச்சு, பாராட்டி, சீராட்டி வளர்த்து வருகிறேன். என்கிட்ட 12 வயசுள்ள புறாக்கள்கூட இருக்கு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நான் இருபது வருஷமா புறா வளர்க்கிறேன். வருடாவருடம் போட்டியில் கலந்துக்க வைப்பேன். பரிசு வந்தாலும் வரலைன்னாலும் எந்தப் புறாவையும் விக்க மாட்டேன். 12 வயசு உள்ள புறாகூட என்கிட்ட இருக்கு. புறாக்களெல்லாம் எனக்கு குழந்தைங்க மாதிரி" என்று புறாக்களுக்கு நடுவில் இருந்தபடி பேசுகிறார் திருமுருகன்.

புறாக்கள்
புறாக்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். கர்ண புறா, சாதாரண புறா என்று இரண்டு வகைகளில், 70 புறாக்கள் வரை வளர்த்துவருகிறார். அவரின் கை, தலை, வீட்டுக்கூரை, அருகில் உள்ள மரக்கிளைகள் என்று எங்கெங்கு காணினும் புறா மயம். புறாக்களுக்கு உணவுக் கொடுத்துக்கொண்டிருந்த திருமுருகனிடம் பேசினோம்.

"நான் விவசாய வேலை பார்த்துக்கிட்டு வர்றேன். சின்ன வயதிலிருந்தே புறா வளர்க்கிறதுல அலாதியான ஆர்வம். கடந்த 20 வருஷமா புறா வளர்த்துக்கிட்டு வருகிறேன். முதல்ல ஆசைக்கு மட்டுமே வளர்த்தேன். அதன் பிறகு, புறாக்களை வைத்து பந்தயங்களில் கலந்துகிட்டேன். என் புறாக்கள் தொடர்ந்து ஜாக்பாட், முதல் பரிசு, இரண்டாம் பரிசுனு பரிசுகளை வருடாவருடம் குவிச்சுக்கிட்டே இருக்கும். இப்போ, என்கிட்ட 70 புறாக்கள் இருக்கு. இங்கே உள்ள திம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கே.பேட்டை பகுதிகள்ல 17 பேர் என்னைப் போல பந்தயப் புறாக்கள் வளர்க்கிறாங்க. எல்லோரும் சேர்ந்து வருஷத்துல ஒரு தடவை புறா பந்தயம் நடத்துவோம்.

புறாக்களுடன் திருமுருகன்
புறாக்களுடன் திருமுருகன்
நா.ராஜமுருகன்

ஒரு கூண்டுக்கு ரூ.2,000 வீதம் பணம் கட்டுவோம். மொத்தமா சேர்ந்த பணத்துல பரிசுகளைப் பிரிச்சு அறிவிப்போம். போட்டி நடக்குற அன்னைக்கு திம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கே.பேட்டைனு மூணு இடங்கள்ல புறாக்களைக் கூண்டுக்குள்ள இருந்து திறந்துவிடுவோம். கர்ணபுறாக்கள் கர்ணம் அடித்தபடி, காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பறக்கணும். அதேபோல், சாதாரண புறாக்கள்னா, காலை 7 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை பறக்கணும். இடையில் உட்கார்ற புறாக்கள் தோல்வியடைஞ்சதா அறிவிக்கப்படும்.

கரூர்: `சுடாத கல்; வீட்டுக்குள் சூரிய வெளிச்சம்!' - பசுமை இல்லத்தில் வாழும் இளம் தம்பதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்ண புறாக்கள்னா, வெள்ளைக்கண் உள்ள புறாக்கள் மட்டுமே பந்தயத்தில் கலந்துக்கணும். சாதாரண புறான்னா, மஞ்சள் அல்லது சிவப்பு கண் உள்ள புறாக்களை மட்டுமே போட்டியில் அனுமதிப்போம். என்னோட புறாக்கள்ல பலது போட்டிகள்ல பரிசு அடிச்சுக்கிட்டே இருக்கும். புறாக்களுக்கு கம்பு, பாதாம், பிஸ்தானு கொடுத்து வளர்க்கணும். அதுங்க உடம்புல ஏதாச்சும் பிரச்னைன்னா, உடனே மருந்து கொடுத்து அதைச் சரி பண்ணனும்.

புறாக்கள்
புறாக்கள்
நா.ராஜமுருகன்

கொஞ்சம் தாமதிச்சாலும், புறாக்களைக் காபந்து பண்ண முடியாது. புறாக்கள்னா எனக்கு உசிரு. அதனால், ஒவ்வொரு புறாவையும் என் குழந்தையா பாவிச்சு, பாராட்டி, சீராட்டி வளர்த்து வருகிறேன். எந்தப் புறாவையும் காசுக்கு விற்க மாட்டேன். அதனால், என்கிட்ட 12 வயசுள்ள புறாக்கள்கூட இருக்கு. யாராச்சும் தெரிஞ்சவங்க விரும்பிக் கேட்டா, இலவசமா மனசே இல்லாம அவங்களுக்குக் கொடுப்பேன். ஆனாலும், மனசு கேட்காம, அடிக்கடி அந்தப் புறாக்களைப் போய் பார்த்து, அதுங்களோட நலத்தை விசாரிச்சுட்டு வருவேன்.

வீட்டைச் சுத்தி புறாக்கள் இருப்பது, மனசுக்கு அவ்வளவு இதமா இருக்கும். அதனோட கழிவுகள் ஏற்படுத்துற வாடையிலேயே நமக்கு பல வியாதிகள் குணமாகும். நெஞ்சு வலிக்கு, புறா கழிவை சூடுபண்ணி ஒத்தடம் கொடுத்தா, எந்த வலியும் பஞ்சா பறந்துபோகும்னு சொல்வாங்க. இந்த 70 குழந்தைகளையும் என்னால 1 நிமிஷம்கூட பிரிஞ்சு இருக்க முடியாது" என்று கூறி முடித்தார்.

பள்ளி மாணவர் விக்னேஷ்வரன் புறா ஜாக்கியாக இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

 புறாவுடன் விக்னேஷ்வரன்
புறாவுடன் விக்னேஷ்வரன்
நா.ராஜமுருகன்

"எனக்கும் புறாக்கள்னா உசிரு. அது நம்ம கையில், உடம்பில் ஏறி உட்காரும்போது, மனதுக்கு இதமா இருக்கும். அதோட தினமும் விளையாடுறதுதான் எனக்கு இப்போ வேலையே. நான் ரெண்டு கூண்டுக்கு ஜாக்கியா இருக்கிறேன். நாங்க விடும் புறாக்கள் பரிசு அடிக்காம இருந்ததில்லை. ஜெயிக்கும் புறாக்களுக்கு, தங்கத்தில் ரிங் வாங்கி கால்ல மாட்டிவிடுவோம்.

ஒவ்வொரு புறாவும் எங்களுக்கு தங்கம் மாதிரி. தினமும் புறாக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுப்பது நான்தான். புறாக்களோட இருந்தா நேரம் காலம் போறதே தெரியாது. அந்த சுகத்தைப் புறாக்களோடு இருந்து அனுபவிச்சாதான் தெரியும்ண்ணே" என்றான் நெக்குருகிப்போய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு