Published:Updated:

கரூர்: `கொரோனாவால எங்க பொழப்பே பொசுங்கிப்போச்சு!'' - படுதா தைக்கும் சரோஜாவின் சோகம்

படுதா தைக்கும் சரோஜா ( நா.ராஜமுருகன் )

''தையல் மெஷின் கமிஷன் என்னாச்சுனு வீராசாமி நெருக்குறார். பாவம் அவர் கஷ்டம் அவருக்கு. இந்தக் கொரோனா வந்ததுல, என்னைப்போல அன்றாடங்காய்ச்சிங்க பொழப்பெல்லாம் பொசுங்கிப்போயிருக்கு.''

கரூர்: `கொரோனாவால எங்க பொழப்பே பொசுங்கிப்போச்சு!'' - படுதா தைக்கும் சரோஜாவின் சோகம்

''தையல் மெஷின் கமிஷன் என்னாச்சுனு வீராசாமி நெருக்குறார். பாவம் அவர் கஷ்டம் அவருக்கு. இந்தக் கொரோனா வந்ததுல, என்னைப்போல அன்றாடங்காய்ச்சிங்க பொழப்பெல்லாம் பொசுங்கிப்போயிருக்கு.''

Published:Updated:
படுதா தைக்கும் சரோஜா ( நா.ராஜமுருகன் )

"எனக்கு சொந்தமா மெஷின்கூட கிடையாது. வாடகை மெஷின்லதான் சாக்குகளை, படுதாக்களை தைச்சுக்கிட்டு இருக்கேன். படுதா தைக்க, சாக்கு ஒன்றுக்கு ரூ. 10 வாங்குவேன். அதுல மெஷின் ஓனர் பாதி, நான் பாதினு எடுத்துக்குவோம். கடந்த நாலு மாசமா சரியா வேலை கிடைக்காம, வருமானத்துக்கே வழியில்லாம திண்டாடி நிக்கிறேன் தம்பி" - பொங்கிவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்தபடி பேசுகிறார் சரோஜா.

படுதா தைக்கும் சரோஜா
படுதா தைக்கும் சரோஜா
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர், 45 வயதாகும் சரோஜா. இவரின் கணவர் பழனிசாமி, மூன்று வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். சரோஜாவின் இரண்டு மகன்களும் இவரைக் கண்டுகொள்ளாமல் கைவிட, தையல் மெஷினில் படுதாக்கள் தைத்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டி வந்தார். ஆனால், கொரோனா வந்து அந்த வருமானத்தையும் முடக்க, அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே திணறிக்கொண்டிருக்கிறார்.

சரோஜாவிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"அவரு இருந்தவரைக்கும், அவரு சம்பாதிக்கிற காசு முச்சூடையும் குடிச்சே அழிச்சிடுவாரு. அதோட, என்னை இல்லாத இம்சை பண்ணுவாரு. குடிச்சுக் குடிச்சே குடல் வெந்து செத்துப்போயிட்டாரு. எனக்குப் பொறந்த ரெண்டு பசங்களும் என்னைக் கண்டுக்கலை. அதனால, நான் கடந்த 10 வருஷமாவே இப்படி படுதா தைக்கும் தொழிலை செஞ்சுக்கிட்டு வர்றேன்.

10,000 கொடுத்து சொந்தமா மெஷின் வாங்கக்கூட வழியில்ல. அதனால, வீராசாமிங்கிறவர்கிட்ட மெஷினை வாடகைக்கு வாங்கி, அதுல தைச்சுக்கிட்டு வந்தேன். படுதா தைக்க, சாக்கு ஒன்றுக்கு 10 ரூபா கூலியா வாங்குவேன். அதுல, 5 ரூபாயை வீராசாமிகிட்ட கொடுத்துட்டு, மீதி அஞ்சு ரூபாயை நான் எடுத்துக்குவேன். ரேஷன் அரிசிதான் பசி போக்குது. இதர செலவுகளுக்குத்தான் இந்தப் படுதா வருமானம்.

 சரோஜா
சரோஜா
நா.ராஜமுருகன்

முன்னாடியெல்லாம், குறைந்தபட்சம் தினமும் 100 ரூபா கெடைக்கும். அதிகபட்சம் 300 வரை கெடைக்கும். ஆனா, கொரோனா வந்ததுக்கு அப்புறம் நெலமையே தலைகீழா மாறிட்டு. யாரும் என்கிட்ட படுதா தைக்க வரலை. எப்பவாச்சும் அத்திபூத்தாப்புல ஒண்ணு, ரெண்டு பேரு வர்றாங்க. அன்னைக்கு அதிகபட்சம் 50 ரூபா கிடைக்கும்.

வாய்க்கால் புறம்போக்குலதான் குடிசை வீடு போட்டு குடியிருக்கேன். அதுக்கு வருஷத்துக்கு ரூ. 250 கூரை வரியா, நகராட்சிக்குக் கட்டணும். இந்த வருஷம் ரூ. 300 வரியா போட்டிருக்காங்க. ஆனா, அதைக்கூட கட்ட வழியில்லாம நிக்குறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'மெஷினை வெச்சுக்கிட்டு என்ன பண்ற, கமிஷன் என்னாச்சு?'னு வீராசாமி வேற நெருக்குறார். அவர் கஷ்டம் அவருக்கு. பாவம் அவர் என்ன பண்ணுவார். எல்லாம் விதி. இந்தக் கொரோனா வந்ததுல, என்னைப்போல அன்றாடங்காய்ச்சிங்க பொழப்பெல்லாம் பொசுங்கிப்போயிருக்கு.

படுதா தைக்கும் சரோஜா
படுதா தைக்கும் சரோஜா
நா.ராஜமுருகன்

பள்ளிக்கூடம், கல்லூரிகளைத் திறந்தா பேக் தைக்க பிள்ளைங்க வரும். இப்போ அதுக்கும் வழியில்ல. என்ன பண்ணப்போறோம்னு நெனச்சா கண்ணெல்லாம் இருட்டுது. எப்போ நெலமை சரியாகும், எங்க பொழப்புக்கு எப்போ ஒரு வழிபிறக்கும்னு ஒண்ணும் புரியல. நாளைக்கு என்ன பண்ணுறதுனு நெனச்சு நெனச்சு தவிக்கிற இந்தப் பொழப்புக்கு பேசாம நாண்டுக்கிட்டு செத்துடலாமானுகூட அடிக்கடி தோணுது" - வேதனை மிகுந்து சொல்கிறார் சரோஜா.

கொரோனாவின் முள்முனை நேரடியாகக் குத்திக் கிழித்துக்கொண்டிருப்பது சரோஜா போன்ற விளிம்பு நிலை மக்களைத்தான்.

Note:

இவருக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com – என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியை சரோஜாவிடம் கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism