சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க உத்தரவு! #ChennaiRains

சென்னையில் இருக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களும் இன்று விடுமுறை அளிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வருவாய் துறை உத்தரவிட்டு உள்ளது. 

rain

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டகளிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!