இரவு முழுவதும் மழை பெய்யும்: `தமிழ்நாடு வெதர்மேன்' தகவல்! #ChennaiRains | Rain will last for all night, Tamilnadu Weatherman

வெளியிடப்பட்ட நேரம்: 02:19 (03/11/2017)

கடைசி தொடர்பு:03:04 (03/11/2017)

இரவு முழுவதும் மழை பெய்யும்: `தமிழ்நாடு வெதர்மேன்' தகவல்! #ChennaiRains

சென்னை மழை

நேற்று மாலையிலிருந்து சென்னையில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்ச்சியான கனமழை இரவு முழுவதும் நீடிக்கும் என  `தமிழ்நாடு வெதர்மேன்' தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மழை

வடகிழக்கு பருமழையின் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் சென்னையே தத்தளித்து வருகிறது. நேற்று காலை முதல் மழை சற்று விட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலையிலிருந்து கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் சென்னையின் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் மட்டுமல்லாமல் பல பகுகளில் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில் இந்த கனமழை இரவு முழுவதும் நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன்  தெரிவித்துள்ளார். அவர் மேலும், கடந்த 2015 டிசம்பர் மாதத்துக்கு பின்னர் அதிகமான மழை தற்போதுதான் பெய்கிறது எனவும், மழை ஆரம்பித்த 3 மணி நேரங்களில் 100 மி.மீ  அளவு மழை பெய்துள்ளது எனவும் கூறியுள்ளார்