வெளியிடப்பட்ட நேரம்: 03:18 (03/11/2017)

கடைசி தொடர்பு:11:27 (03/11/2017)

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு! #ChennaiRains

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னர், சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுகளும் ஒத்திவைக்குப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

அண்ணா பல்கலைக்கழகம்

 

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.