வெளுத்துவாங்கும் மழை குறித்து ரமணன் கருத்து இதுதான்! #ChennaiRains

சென்னையில் விடாது பெய்யும் மழை குறித்து வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரமணன்

 

தமிழக தலைநகர் சென்னையில் கிட்டத்தட்ட 12 மணி நேரமாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, தனியார் அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த மழைப் பொழிவு மேலும் இரண்டு நாள் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், `டெமிரி என்ற புயல் தற்போது வியட்நாம் அருகில் உள்ளது. அந்தப் புயல் வங்கக் கடல் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கு மேலும் மழைப் பொழிவு இருக்கும். வடகடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழைப் பொழிவு இருக்கும். அதேபோல, தென் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்று சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!