மழையால் பாதிக்கப்பட்ட வடசென்னைப் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு #ChennaiRain #LiveUpdate | chennai rain live update

வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (03/11/2017)

கடைசி தொடர்பு:14:08 (03/11/2017)

மழையால் பாதிக்கப்பட்ட வடசென்னைப் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு #ChennaiRain #LiveUpdate

மதியம்:2.00

மழையால் பாதிக்கப்பட்ட வட சென்னைப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர், அதிகாரிகளிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

காலை:12.00 

மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

காலை: 11.20 சென்னை மாநகராட்சி அமைந்திருக்கும் ரிப்பன் பில்டிங் மழைநீரால் சூழ்ந்துள்ளது

 

 

காலை: 11.20 பொழிச்சலூர் அருகே கரைபுரண்டோடும் அடையாறு...

 

 

காலை: 11.00
சென்னை மாநகராட்சி அலுவலகத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கடல் எது? கரை எது? என்று தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. சென்னை மெரினாவில் தேங்கிய தண்ணீரில் மூழ்கிய முதியவர் பலி. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

காலை: 10.00

கன மழையைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 112 இடங்களுக்கு மீண்டும் மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாமில் 200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தகவல். 

முடிச்சூரில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் நடத்தினர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு பேரிடர் மீட்புக்குழு சென்றுள்ளது.

காலை: 9.30
சென்னையைச் சுற்றியுள்ள எந்த ஏரிகளும் முழுக் கொள்ளவை எட்டவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரவித்துள்ளார். 

காலை: 9.20
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால், வியாசர்பாடி, கீழ்பாக்கம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பூந்தமல்லி-ஆவடி சாலையில் மழை தேங்கியிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காலை: 9.00
கட்டுப்பாட்டு அறைகள் மூலம் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. சாலைகளில் தேங்கியுள்ள நீர் அகற்றப்படும். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.

 


காலை:8.55  கன மழையால் தாம்பரம், முடிச்சூர் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர்!
வீடியோ:தே.அசோக்குமார்

 

சென்னை ஐஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு, உயர்தொழில்நுட்ப சோனார் கருவியை பயன்படுத்தி அடையாறு மனப்பாக்கம் பாலத்தில் நீரின் வேகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றது

chennai rain

படம்: மா.பி.சித்தார்த்

தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த 29ம் தேதி முதல் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை விடாமல் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்து பெய்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. விடிய விடிய கனமழை பெய்தததால் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. 

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன.

கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், புதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருவாரூர் , நாகை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

** நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சென்னை ஓட்டேரி குடியிருப்பு பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீர்